Diriya

வலுவான வியாபாரநாமம் (Strong Brand Image) ஒன்றினை உருவாக்கல்: அறிமுக வழிகாட்டி

இன்றைய போட்டி சூழ்நிலை கொண்ட உலகில், புது வியாபார முயற்சிகளுக்கு அவற்றினுடைய வியாபாரநாமமானது (Brand Image) ஒரு ஆடம்பரம் கிடையாது. இது ஒரு வியாபாரத்தினை உருவாக்கவோ அல்லது ஒரு முக்கியமான விடயமாகும். குறிப்பாக இலங்கை போன்ற ஒரு நாட்டில்இ நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் பெறுவதென்பது சவாலான விடயமாகும். ஒரு வலுவான வியாபாரநாமம் நீங்கள் தனித்து நிற்கவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், விசுவாசமான தொடர்பை வாடிக்கையாளர்களுடன் உருவாக்கவும் உதவும். இந்த விடயங்களுக்கான ஒரு தொடக்க வழிகாட்டி இங்கே தரப்படுகின்றது.

வியாபாரநாமம் குறிந்து புரிந்து கொள்ளல்

உங்கள் வியாபாரநாமமனது> உங்கள் புதிய வியாபாரமுயற்சியின் பிரதிபலிப்பாக இருக்கும். அது உங்கள் வியாபாரச்சின்னம் தொடக்கம்> உங்கள் வியாபார எண்ணக்கரு மற்றும் சமூகவலைதள இருப்பு என்பவற்றினை உள்ளடக்கியது. ஒரு நேர்மறையான வியாபாரநாமமானது பின்வரும் விடயங்களுக்கு வித்திட முடியும்:

· வியாபாரநாமம் தொடர்பிலான அதிக விழிப்புணர்வு

· வாடிக்கையாளர்களின் உயர்தரமிக்க விசுவாசம்

· வியாபாரநாமத்தின் அதிகரித்த நன்மதிப்பு

· சிறந்த சந்தைப் பங்கு

· உயர்தரமிக்க பெறுமதி

· நிதிக்கான இலகு வழிவகைகள்

சிறந்த வியாபாரநாமம் ஒன்றினை உருவாக்குவதற்கான முக்கிய படிகள்

உங்கள் வியாபார அடையாளத்தினை நிர்ணயம் செய்தல்

· இலக்கு மற்றும் நோக்கு: உங்கள் வியாபார முயற்சியானது எதனை பிரதிபலிக்கின்றது மற்றும் எதனை நோக்கிச் செல்கின்றது என்பதனை தீர்மானியுங்கள்.

· விழுமியங்கள்: உங்கள் வியாபாரம் தொடர்பிலான முடிவுகளை எடுக்கும் கொள்கைகளை தீர்மானியுங்கள்

· இலக்கு வாடிக்கையாளர்கள்: நீங்கள் இலக்கு வைக்கும் குறிப்பிட்ட குழுவினை கண்டறியுங்கள்

· வியாபாரநாமத்தின் குணவியல்புகள் (Brand’s Personality): உங்கள்


Exit mobile version