Diriya

ஒரு பணியாளர் தெரிவின்போது கருத்திற்கொள்ள வேண்டியது, அவர்களது அனுபத்தையா? அல்லது கல்வித் தகைமையா?

choose an employee

வேலைக்கு சரியான ஒரு பணியாளரை தேர்வு செய்வதற்கு அவர்களது கல்வித் தகமைகள் மற்றும் பட்ட படிப்புகள் கருத்தில் கொள்ள வேண்டுமா? அல்லது அவர்களது கடந்த கால பணியில் பெற்ற சிறந்த அனுபவம் கருத்தில் கொள்ள வேண்டுமா? என்பது மிகப்பெரிய விவாதமாகும். ஒருவரை வெறுமனே வேலைக்கு சேர்த்துக் கொள்வதை விட அவர்களிடம் இருந்து பெறப்படும் சேவையினால் வரும் வருமானத்தைப் பற்றியும் அவர்கள் உங்களுக்கு சிறப்பான சேவையை செய்வார்களா என்பதை பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கல்வித் தகமை மற்றும் அனுபவம் இவை இரண்டிலுமே அனுகூலங்களும் பிரதிகூலங்களும் உள்ளன. எனவே இவற்றில் நாம் எதை கருத்தில் கொள்ள வேண்டும்? என்பது பற்றியும் பணியாளர் ஒருவரை தேர்வு செய்வது எதன் அடிப்படை அடிப்படையில் என்பது பற்றியும் ஆராய்வோம்.

உயர் கல்விதொழில்சார் அனுபவம்
சிறந்த கோட்பாட்டு ரீதியான தொழில் சார் அறிவை கொண்டிருப்பார்கள்பல வருட தொழில் தேர்ச்சி மூலம் அன்றாட அனுபவ ரீதியான நிரூபிக்கப்பட்ட பல சாதனைகளை படைத்தவர்களாக இருப்பார்கள்
பல ஆண்டுகள் கல்வி தேர்ச்சியில் பெற்ற அறிவை இவர்கள் பிரயோகிக்கவும் கற்றுக்கொள்ளவும் விரும்புவார்கள்தொழிலில் கற்பதற்கு தயாராக இருப்பார்கள். அனுபவ ரீதியான தொழில்துறை தேர்ச்சியின் மூலம் பல்வேறு திறன்களை கொண்டவர்களாக இருப்பார்கள்
இவர்கள் குறிப்பிட்ட கல்வி அறிவைக் கொண்டு அதன் அடிப்படையிலான திறன்களை மட்டுமே கையாள கூடியவர்களாக இருப்பார்கள். கற்றதற்கு அப்பாற்பட்ட நுட்பங்களை கையாள்வதில் இவர்களுக்கு சிரமம் ஏற்படலாம்பல வருட அனுபவத்தின் மூலம் இவர்கள் பல பரிமாணங்களில் ஆன தொழில் சார் அறிவை பெற்றிருப்பார்கள். இவை அன்றாட தொழில் துறை பயன்பாட்டிற்கு தேவையான அடிப்படை ஆற்றல்களாக இருக்கும்
இவர்கள் பல்கலைக்கழகத்தலிருந்து வெளியேறிய புதியவர்களாகவே தொழிற்துறைக்கு நுழைவதால், தொழில் ரீதியான தொடர்பு வட்டம் மிகவும் குறைவாகவே இருக்கும்பல வருட தொழில் அனுபவத்தின் மூலம் இவர்கள் மிகப்பெரிய தொடர்புகளையும், ஆற்றல் மிக்க நபர்களையும், கைதேர்ந்த தொழில் ரீதியான தொடர்புகளையும் சம்பாதித்து இருப்பார்கள்

சம்பளம் பற்றிய தீர்மானம்

பொதுவாக அனுபவரீதியான தொழில் தேர்ச்சி பெற்ற ஒருவரை விட கல்வியாற்றல் மிக்க பட்ட படிப்புகளை முடித்த ஒருவர் அதிக சம்பளம் எதிர்பார்ப்பார் என்பது ஒரு பொது கூற்று. ஒரு சில தொழில்துறையில் அதற்கான குறிப்பிட்ட கல்வி அறிவு , பட்டப்படிப்பு தேவை என்பது பொதுவாக எதிர்பார்க்கப்படும் அடிப்படை தேவையாகும். இவை எவ்வாறாயினும் உண்மையில் கூறுவதாயின் சம்பளமானது தொழில் வழங்குபவரின் விருப்பப்படியே தீர்மானிக்கப்படுகின்றது. பொதுவாக ஒருவரின் ஆற்றல், திறன் போன்றவற்றின் அடிப்படையிலேயே சம்பளம் முடிவாகிறது. எனவே முன்கூட்டியே தொழிலுக்கு அமர்த்தப்படுபவருக்கான எதிர்பார்ப்பு என்ன என்பதை முதல் நேர்முகப் பரீட்சையிலேயே தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். இதன் மூலம் எமது தீர்மானமும் அவரது எதிர்பார்ப்பும் ஒன்றாக உள்ளதா, உங்களால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தொழிலின் தன்மைக்கேற்ப ஒதுக்கீடு செய்த சம்பளத்திற்கு ஒத்ததாக உள்ளதா என்பதை கவனத்தில் கொள்வது மிக முக்கியமாகும்.

தொழில் வழங்குபவராக நீங்கள் உங்கள் தொழிலாளியிடம் எதிர்பார்ப்பது என்ன?

தொழில் வழங்கும் போது கல்வித் தகமை அடிப்படையிலா அல்லது அனுபவரீதியாக வழங்க வேண்டும் என்பது எப்போதுமே ஒரு விவாதமாக இருந்தாலும் அதற்கு ஒரு குறிப்பிட்ட பதிலை கூற முடியாது. எது எவ்வாறு ஆயினும் தொழில்துறையின் பிரத்தியேக தேவையின் அடிப்படையிலேயே பணியாளரின் தெரிவு மற்றும் சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது.

தொழில் வழங்குபவர்கள் பொதுவாக கல்வி மற்றும் அனுபவம் இரண்டையும் கொண்டே ஒரு பணியாளரையே தெரிவு செய்ய விரும்புகின்றனர். கல்வி அடிப்படையில் மட்டுமே கொண்ட ஒருவரை தெரிவு செய்திருந்தால் அவர்களுக்கு தேவையான அனுபவரீதியான திறன்களை வளர்த்துக் கொள்ளவும் அல்லது அனுபவம் மட்டுமே கொண்ட ஒருவரை தெரிவு செய்தால் அவருக்கு தேவையான தொழில் சார் கல்வி அறிவை வழங்கவும் ஊக்கப்படுத்துங்கள். அனுபவரீதியான அறிவைக் கொண்டவர்களுக்கு நிபுணத்துவம் மிக்க பயிற்சிகளை வழங்கி அதற்கான அடிப்படை சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வாய்ப்பளியுங்கள்.

பொருளாதாரக்கொந்தளிப்பு நிலையில் மனதை தயார்ப்படுத்திக் கொள்வது பற்றிய மேலதிக தகவல்களை திரிய இணையத்தளத்தில் பார்க்கவும்.

Exit mobile version