Diriya

நாட்டின் இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் உங்கள் நிறுவனத்திற்கான தொடர்பாடல் வழிமுறைகள்

Communication Blueprint

இன்று நாடு பெரும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரங்கள் பல பெருகி வந்தாலும் அவற்றில் இலாபம் ஈட்டுவது மிக கடினமாகவே உள்ளது. அவற்றின் அன்றாட செயற்பாட்டிற்கான செலவுகள் பெரும் சுமையாக மாறியுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து தீர்வு பெற எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற சில தொடர்பாடல் வழிமுறைகளை பார்ப்போம்.

நெருக்கடியான சூழலிலும் முன்னெச்சரிக்கையுடன் திட்டமிடுங்கள்

ஒவ்வொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் அச்சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கான சாத்தியமிக்க வழிமுறைகளை தனித்துவப்படுத்தி அவற்றுக்கான விரிவான எதிர்பாரா செலவுகளுக்கான திட்டத்தை உருவாக்குங்கள். இவ்வாறான திட்டங்கள் நீண்ட காலத்தை எடுத்துக் கொள்வதோடு மிகவும் கடினமானவை. எனவே தான் பெரும்பாலான நிறுவனங்கள் இதை விரும்புவதில்லை. இருப்பினும் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, இவ்வாறான திட்டங்கள் உண்மையில் நேரத்தையும், வளங்களையும் சேமிக்கின்றன. வர்த்தகத்தில் இவ்வாறான நெருக்கடி சூழ்நிலை காலத்திற்கான செயற்திட்டத்தை கைவசம் வைத்திருப்பது மிக சிறந்த முறையாகும்.

நெருக்கடியான சூழலிலும் உங்கள் வாடிக்கையாளருக்கு முன்னுரிமை வழங்குங்கள்

நெருக்கடி பொதுவாக வலுவான எதிர்மறை உணர்ச்சிகளைக் கொண்டு வருகிறது. உங்கள் நிறுவனத்தில் ஏற்படும் தவறுகளால் அதிருப்தியான வாடிக்கையாளர்கள் YELP போன்ற மறுஆய்வு தளங்கள் அல்லது சமூக ஊடகங்களில் எதிர்மறையான கருத்துக்களை எழுதலாம். இவ்வாறான சூழலில் நீங்கள் உங்கள் வாடிக்கையாளரை குறை கூறலாகாது. இவ்வாறான சூழலில் நீங்கள் உங்கள் நிறுவனத்தின் வலைப்பதிவுகள் மற்றும் சமூக ஊடகங்களை பாதுகாப்பதற்கு தற்காப்பு உத்திகளை மேற்கொள்வதை விடுத்து உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி இணைந்து செயற்படுங்கள். இதற்கான சில வழிமுறைகள் இதோ

துரித சேவையின் முக்கியத்துவம்

துரிதகதியில் சேவையை வழங்குவதற்காக அதன் துல்லியத்தை குறைக்க முடியாது. இன்றைய நெருக்கடியான சூழ்நிலை மற்றும் கொரோனா வைரஸ் பரவிய காலப்பகுதியில் பல்வேறுபட்ட போலியான செய்திகள் சமூக வலைதளங்கள் எங்கும் காணப்பட்டன. அவ்வாறான சூழ்நிலைகள் உங்களை பீதியடைய செய்தாலும் உங்கள் சமூக வலைத்தளங்களில் இவற்றை பதிவிடும் போது அவற்றின் துல்லியத் தன்மையை ஆராய்ந்து செயல்படுங்கள். அவ்வாறான செய்திகளை நீங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் போது அதன் துல்லிய தன்மையை உணர்ந்து உறுதிப்படுத்திய பின் வழங்க வேண்டும். நீங்கள் வெகுஜன ஊடகங்களிலும் சமூக மற்றும் வலைதளத்தில் பதிவிடுவதற்கும், நம்பகத்தன்மை மிக்க செய்திகளை வழங்குவதற்கும் முடிந்தால் உங்கள் நிறுவனத்திற்காக ஒரு செய்தித் தொடர்பாளரை நியமிக்கலாம். பல்வேறு அலைவரிசைகள் வழியாக நீங்கள் அனுப்பும் அனைத்து தகவல்களும், வெகுஜன ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் உங்கள் நிறுவனத்தின் இணையதளமானது நேர்மையாகவும், திறந்ததாகவும், வெளிப்படையானதாகவும் மற்றும் நிலையானதாகவும் இருக்க வேண்டும்.

நேர்மையாக இருங்கள்

வாடிக்கையாளர்கள் மற்றும் மக்கள் வழங்கும் பதில்கள் மூலம் நம்பகரமான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். எனவே எப்பொழுதும் நீங்கள் வழங்கும் எழுத்து வழி மற்றும் குரல்வழி தகவல்கள் அனைத்தும் மிகவும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். தனித் தேர்வுகள் கொண்ட விவேகம் மிக்க வாடிக்கையாளர்களிடம் உங்கள் ஊழியர்களை உண்மையாகவும் முடிந்தவரை பொறுமையாகவும் நடந்துகொள்ள கற்றுக்கொடுங்கள். வாடிக்கையாளர்கள் கோபம் அடைந்தாலும் சில நேரங்களில் அவர்கள் அமைதி அடைந்த பின் உங்கள் உண்மைத்தன்மையையும் உங்கள் தரப்பு நியாயத்தையும் அவர்களுக்கு எடுத்துரைங்கள். இந்த கடினமான காலகட்டத்தில் நம் வர்த்தகத்தில் இருக்கும் பிரச்சினைகளை உணர்ந்து இச்சிறு காரணிகளை மனதில் வைத்து நடந்தால் வியாபாரத்தில் வரும் நெருக்கடிகளை தவிர்த்து சிறப்பாக மாற்றலாம்.

நெருக்கடியான காலகட்டத்தில் உங்கள் நிறுவனத்திற்கான தொடர்பாடல் வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்ள திரிய இணையத்தளத்தைப் பார்க்கவும்.

Exit mobile version