Diriya

கொவிட்19 – சுற்றுலாச்சந்தை சந்தைப்படுத்தல் மற்றும் ஏன் நிறுத்தக்கூடாது?

Sunset over Bible Rock

தொற்றுநோயிலிருந்து தப்பிப்பது எவ்வாறென யாரும் யாருக்கும் கற்பிக்கவில்லை. இனியும் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. தொற்று பரவலுக்கு இரண்டாண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் சுற்றுலாச்சந்தை தொடர்பில் நாம், எமது முயற்சிகளை கைவிடாமல் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த தொற்றுநோயின் உலகளாவிய தன்மை காரணமாக கப்பல்கள் மற்றும் விமான போக்குவரத்திற்கான முன்பதிவுகள் தடைப்பட்டன. கடந்த இரண்டாண்டுகள் இருண்ட காலமாகவே காணப்பட்டன. இருப்பினும், சுற்றுலா சந்தை சந்தைப்படுத்துபவராக நீங்கள் எல்லா நம்பிக்கையையும் கைவிட்டு விட்டு சந்தைப்படுத்துதலை நிறுத்த வேண்டும் என்பதா இதன் அர்த்தம்? நிச்சயமாக இல்லை, அதற்கான காரணத்தை உங்களுக்குச் நாங்கள் கூறப் போகின்றோம்.

சுற்றுலாச்சந்தை ஊடாக சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

முன்பைப்போல் விரும்பிய இடங்களுக்கு பயணிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டபோதிலும் மீண்டும் எப்போது பயணிப்போம் என்பதை பொறுமையுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அத்துடன் நாடுகள் தமது எல்லைகளை மீள திறந்ததும், மக்கள் தமது பயணங்களை மீள ஆரம்பித்தனர். இந்த காலகட்டத்தில் அதிக நன்மைகளை அனுபவிக்கும் வியாபாரிகள் யார் என பார்த்தால், தொற்றுநோய் தாக்கத்தின்போது தமது வியாபாரத்தை கைவிடாதவர்கள் என்பது நன்கு புலனாகும். உதாரணமாக கூறினால் டிஷ்னி வேர்ல்ட் தனது அனைத்து செய்திகளிலும் ‘ நாம் மீண்டும் சந்திப்போம்’ என்பதை ஆழமாக பரவச் செய்தது. நாடுகள் திறந்த பின்னர் மக்கள் டிஷ்னி வேர்ல்ட் இற்கு படையெடுத்தனர். உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களை மறக்க இடமளிக்க வேண்டாம். வியாபாரத்தை பாதுகாக்க விடாமுயற்சி செய்யுங்கள்.

சுற்றுலாச்சந்தை வழமைக்கு திரும்பும்

எந்த சூழ்நிலையும் வழமைக்கு திரும்பும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சந்தைப்படுத்துபவர் என்ற வகையில்> இயல்பு நிலை ஏற்படும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டவராக> அதனை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருத்தல் வேண்டும். இது தொற்றுநோய்க்கு முன்னைய இயல்பு நிலையை கொண்டிருக்காதபோதிலும்> மக்கள் இந்த புதிய சாதாரண நிலைமைக்கு தம்மை தயார்படுத்திக்கொண்டு தற்போது பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். பொருளதாரம் மீண்டும் வலுவடைய ஆரம்பித்துள்ளது. மக்கள் சுற்றுலாப் பயணங்களை ஆரம்பிப்பதற்கான முன்பதிவுகள் வெகுவிரைவில் ஆரம்பமாகும். அத்துடன் பொருளாதாரம் மேம்படும் நாள் தொலைவிலும் இல்லை. இயற்கை பேரழிவுகள், பயங்கரவாத தாக்குதல்கள், மந்தநிலை ஆகியவற்றின் ஊடாக உலக பொருளாதாரம் பயணித்த காலங்கள் இருந்ததென்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே எத்தருணத்திலும் நம்பிக்கையை இழக்காதீர்கள். உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக நீங்கள் அதிக கரிசனை கொண்டுள்ளவர் என்பதை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக நீங்கள் அதிக கரிசனை கொண்டுள்ளவர் என்பதை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

மக்கள் கொவிட் தொடர்பான செய்திகளை அதிகம் கேள்விப்பட்டிருக்கின்றார்கள். ஆனாலும் உடல்நலம் மற்றும் பாதுகாப்;பு தொடர்பாக கவலைப்படாத வியாபார செயற்பாடுகளுடன் முன்செல்வதற்கு நீங்கள் விரும்புகின்றீர்களா? இல்லை என்பதே பதிலாக அமையும். எனவே சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சமூக மற்றும் ஏனைய தளங்களில் அதிகம் கலந்துரையாடுங்கள். அவ்வாறு வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக சிந்திக்கும் உங்களுடன் அவர்கள் வியாபார நடவடிக்கைளை செய்வதற்கு விரும்புவார்கள். உங்கள் வாடிக்கையாளர்களுடன் உணர்வுபூர்வமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயற்படுங்கள். அது நிச்சயம் உங்களுக்கான வெகுமதிகளை தரும்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

உள்ளடக்கத்தை உருவாக்குங்கள். அதுதவிர உரிய திட்டமிடல்கள் அவசியம் என்பதால் அதனை தொடர்ந்து முன்னெடுங்கள். உங்களிடம் தற்போதுள்ள வளங்களை பிரயோசனப்படுத்துங்கள். பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சுகாதார பயணத்தில் ஈடுபட மக்களை ஊக்குவியுங்கள். வியாபார Nபுhட்டித்தன்மையை விட ஒத்துழைப்பே அதிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வியாபாரம் நல்ல முன்னேற்றமடைந்து வழமைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள்.

மேலதிக விவரங்களுக்கு: சுற்றுலா சந்தை பற்றிய மேலதிக தகவல்களைப் பெற திரிய இணையத்தளத்தை பார்க்கவும்.

Based on an article published on Entrepreneur.com

Image by: Nazly Ahamed

Exit mobile version