Diriya

வாடிக்கையாளர் மனநிறைவு கருத்துக்கணிப்பு

மோசமான நடைமுறைகளால் தற்போதைய வாடிக்கையாளர்கள் இழக்கப்படும் சந்தர்ப்பங்களில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக வணிகங்கள் பெரும்பாலும் தங்கள் ஆற்றல், நேரம் மற்றும் பணத்தை செலவிட வேண்டியிருக்கும். புதிய வாடிக்கையாளர்களை சம்பாதிப்பதை  விட, இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்திருப்பதற்கான செலவு மிகக் குறைவு என்பதை சாமர்த்தியமான தொழில்முனைவோர் விரைவில் புரிந்துகொள்வார்கள். நீங்கள் தொடர்ந்து சிறப்பான வாடிக்கையாளர் சேவையை வழங்கவில்லை என்றால், உங்கள் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து உங்களுடன் இணைந்திருக்க மாட்டார்கள் என்பதை எவரும் சாதாரணமாக விளங்கிக் கொள்ள முடியும். எனவே, ஆக்கபூர்வமான விமர்சனங்களை அறிந்து கொள்வதற்காகவும், பொதுவாகப் புகாரளிக்கப்படும் பிரச்சினைகளை மதிப்பாய்வு செய்து அவற்றை அறிந்துகொள்ளவும், வாடிக்கையாளர் மனநிறைவு தொடர்பான கருத்துக்கணிப்புக்களை மேற்கொள்வது சிறந்த நடைமுறையாகும்.

வாடிக்கையாளரை அதிருப்பதிக்குள்ளாக்குவது மற்றும் விடயங்களை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் உங்கள் வணிகத்தை மேம்படுத்த வாடிக்கையாளர் மனநிறைவைக் கண்டறியும் கருத்துக்கணிப்புகள் சிறந்த கருவிகளாக இருக்கும். எனவே, உங்கள் கருத்துக்கணிப்பில் நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகள் பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் இருப்பது முக்கியம். அதுவே இறுதியில் உங்கள் வாடிக்கையாளர்களின் உணர்ச்சிபூர்வமான பதில்களைப் புரிந்துகொள்வதற்கான களத்தை உருவாக்கும்.

வெற்றிகரமான வாடிக்கையாளர் மனநிறைவு கருத்துக்கணிப்பு படிவத்தை உருவாக்குவதற்கான 7 பயனுள்ள உதவிக் குறிப்புகள் வருமாறு:

  1. சுருக்கமாகவும் இலகுவானதாகவும் இருக்கட்டும்
  2. சீரான மதிப்பீட்டு அளவுகோல்களைப் பயன்படுத்தவும்
  3. குறிப்பான கேள்விகளைத் தவிர்க்கவும்
  4. ஆம்/இல்லை என்ற வகையில் அனேகமான கேள்விகளைக் கேளுங்கள்
  5. அனுமானங்களைத் தவிர்க்கவும், உங்கள் கேள்வியைப் பற்றி தெளிவாக இருங்கள்
  6. வாடிக்கையாளர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள, நீங்கள் வழங்கிய தெரிவுகளை மட்டும் பயன்படுத்தி பதிலளிக்கும்படி அவர்களை கட்டாயப்படுத்துவதை விட அவர்கள் தமது உள்ளங்களிலுள்ள கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையிலான கேள்விகளை கேளுங்கள்.
  7. உங்கள் கருத்துக்கணிப்பில் பங்கெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறிய வெகுமதியை ஊக்குவிப்பாக வழங்குங்கள். இது எதிர்விளைவாக மாறக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன, எனவே உங்கள் மதிப்பீட்டை சிறப்பாக பயன்படுத்தவும்!

உங்கள் கருத்துக்கணிப்பில் நீங்கள் சேர்க்க வேண்டிய கேள்விகளின் தொகுப்பு உங்கள் வணிகம் மற்றும் அதன் நோக்கத்தைப் பொறுத்து மாறுபடலாம். அதிர்ஷ்டவசமாக, Survey Monkey, Zoho Survey, Google Forms மற்றும் Key Survey போன்ற இணைய கருவிகள், சிரமங்களைக் குறைத்து கருத்துக்கணிப்பைக் கட்டமைக்க சிறந்த நுண்ணறிவுகளையும் வினாக்கொத்து கட்டமைப்புகளையும் வழங்குவதன் மூலம் முழு செயல்முறையையும் தற்போது எளிதாக்கியுள்ளன.

கேள்விகளைத் தொகுத்து உருவாக்க இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும். உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் வணிகத்தில் எவ்வளவு மனநிறைவாக (அல்லது அதிருப்தி கொண்டவர்களாக) இருக்கிறார்கள், அவர்களுக்கு நீங்கள் எப்படிச் சிறப்பாகச் சேவை செய்ய முடியும் என்பதை நன்கு அறிய கருத்துக்கணிப்பில் நீங்கள் பெற்றுக்கொள்ளும் பதில்களைப் பயன்படுத்தவும்.

Exit mobile version