Diriya

நீங்கள் வர்த்தக முயற்சியொன்றை தொடங்க விரும்புகிறீர்களா?

இந்த ஆக்கத்தில் கீழே சித்தரிக்கப்பட்டபடி, வணிக முயற்சியொன்றைத் தொடங்குவதற்கான ஆறு நிலைகளைப் பற்றி கலந்துரையாடுவோம்.

முயற்சி

ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான உங்கள் காரணங்களில் உங்களுடன் மற்றும் எந்த இணை ஸ்தாபகர்களுடன் நீங்கள் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும். சொந்தக்காலில் நிற்க வேண்டுமா? பெரும் பணக்காரர் ஆக வேண்டுமா? ஏனெனில் சந்தையில் தேவையான ஆனால் கிடைக்கப்பெறாத ஒன்றை நீங்கள் கண்டறிந்து, அதற்கான தீர்வும், அதை வழங்குவதற்கான திறனும் உங்களிடம் இருப்பதாக நினைக்கிறீர்களா? அல்லது இதுவரை முயற்சி செய்யப்பட்டிராத ஒரு குறிப்பிட்ட வழியில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்தால் நீங்கள் உந்தப்பட்டிருக்கலாம். உங்களை உந்துவது எதுவாக இருந்தாலும், உங்களுடனும், உங்களைச் சுற்றியுள்ள இணை ஸ்தாபகர்கள், மற்றும் குடும்பம், முதலீட்டாளர்கள் மற்றும் உங்கள் பிரதான அணியுடன் நீங்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களுடன் மிக நீண்ட பயணத்திற்கு தம்மையும் இணைத்துக் கொள்கிறார்கள், மேலும் நீங்கள் எதை நோக்கிச் செல்கிறீர்கள், ஏன் செல்கிறீர்கள் என்பதில் அவர்கள் உங்களை நம்புகிறார்கள்.

சாத்தியம்

நீங்கள் ஒரு வர்த்தக முயற்சியைத் தொடங்கினால், சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வு அவசியம். நிறைய ஆராய்ச்சி, விமர்சன பகுப்பாய்வு, திட்டமிடல் மற்றும் தயாரிப்பு இல்லாமல் உங்கள் வணிகம் முன்னேற்றம் காணாது. உங்கள் நோக்கத்தை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள், உங்கள் நிதியை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள் மற்றும் மதிப்பீடு செய்கிறீர்கள், உங்கள் தேவைகளை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள் மற்றும் அதை எவ்வாறு மதிப்பாய்வு செய்கிறீர்கள் என்பது உங்கள் வணிக தொடக்கம் சாத்தியமான ஒன்றா என்பதைத் தீர்மானிக்க உதவும். உங்கள் சொந்த தீர்மானத்தை ஒருபோதும் இறுதியானதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் நம்பும் ஏனைய நபர்களிடம் அதைக் காண்பித்து, ஆலோசனையைக் கேளுங்கள். அது தொடர்பில் ஆராய்ந்து, நீங்கள் தவறவிட்ட விடயங்களை அல்லது தவறுகளைக் கண்டறிய உதவச் செய்யுங்கள். உங்கள் அறிவுக்கு எட்டியவாறு  “மந்திர சிந்தனை” என நீங்கள் மேற்கொண்ட அனுமானங்கள் நடைமுறைச் சாத்தியமற்றவையாக இருக்கலாம். நீங்கள் வணிக முயற்சியைத் தொடங்குவதற்கு முன் உங்கள் கருதுகோளை முடிந்தவரை பரீட்சித்து, ஆராயவில்லை என்றால், நீங்கள் சில கசப்பான அதிர்ச்சிகளுக்கு ஆளாகலாம் – அது உங்கள் வணிக தொடக்கத்தின் இருப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும்.

வணிக தொடக்கத்திற்கான தேவைப்பாடு

நீங்கள் வணிக முயற்சியொன்றைத் தொடங்க விரும்புகிறீர்களா? மிகவும் அருமை! அந்த ஆரம்ப உற்சாகம் மெதுவாக தணிந்த பிறகு, உங்கள் வணிகத்தின் துவக்கத்தை தனித்தனி பணிகளாகக் கையாள எளிமையான படிகளாக பிரித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. செய்ய வேண்டியவைகளின் பட்டியலை உருவாக்கிய பின்னர் நீங்கள் மேற்கொண்டு செல்வது நல்லது. இந்த பட்டியலில் பின்வரும் வகையில் சில காரணிகள் உள்ளடங்கி இருக்கலாம்:

உங்கள் வணிகத்திட்டம்

உங்கள் வணிகத் திட்டமே உங்கள் வணிகத்தின் அத்திவாரம். இது உங்கள் வணிகத்தின் படி நிலைகளில் உங்களை வழிநடத்துவதுடன், அது வளரவும் உதவுகிறது. வணிகத் திட்டத்தை உருவாக்குவதற்கு இது தான் சரியான அல்லது தவறான வழி என்று எதுவும் கிடையாது. உங்கள் தேவைகளைப் பொறுத்து, உங்களுக்காகவும் உங்கள் வணிகத்திற்காகவும் உங்கள் திட்டம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்படலாம். இருப்பினும், சிறந்த திட்டம் மற்றும் தொலைநோக்கு இலக்கு கொண்ட வணிகம் பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்பதால், உங்கள் ஆரம்பகால வெற்றிக்கு இது ஒரு முக்கிய உந்துசக்தியாக உள்ளது. இந்தத் திட்டத்தில் தயாரிப்பு தொடர்பான விபரங்கள், நிதியியல் நிலைமைகள், ஸ்தாபக அணியின் சுய விபரங்கள், சந்தைப்படுத்தல் மற்றும் சந்தைக்குச் செல்லும் திட்டங்கள் மற்றும் போட்டியாளர்கள் பற்றிய ஆராய்ச்சி ஆகியவை அடங்கும். வணிகத் திட்டத்தைத் தயாரிப்பது, அனைத்து விபரங்களையும் விமர்சன ரீதியாகச் சிந்திக்கவும், தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்யவும், முக்கிய காலக்கெடுக்களைக் கண்டறியவும் உதவுகிறது, எனவே அத்தகைய வணிகத் திட்டத்தை உருவாக்குங்கள் – முன்னோக்கிச் சிந்தியுங்கள்!

நிதி தேவை + மூலதனம்

எந்தவொரு சிறந்த திட்டத்தையும் செயல்படுத்த, உங்களுக்கு பணம் தேவை. இவ்வாறு பார்க்கையில் மிகவும் சில வணிக தொடக்க முயற்சிகளே அவற்றை ஆரம்பிக்கின்றவர்களின் உள்ள பணத்தைக் கொண்டு தொடங்கப்படுகின்றன. இங்கு நிதியைத் திரட்டுவதற்கான மூலோபாயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. உங்களின் சொந்த மூலதனத்தைத் தவிர (அளவுக்கதிகமாக ஆழமாக காலை விடாமல் கவனமாக இருங்கள்), வங்கிக் கடன்கள், செயற்திட்ட மூலதனம், செல்வந்த முதலீட்டாளர்கள், மானியங்கள், அரசாங்க அல்லது உதவி நிறுவன நிதிகள் போன்றவற்றையும் நீங்கள் முயற்சி செய்யலாம். உங்கள் வணிகத்தின் தன்மையைப் பொறுத்து நீங்கள் அவற்றை முயற்சி செய்ய முடியும். நிலைபேறான மற்றும் இலாபகரமான வணிக எண்ணக்கரு உங்களிடம் இருக்கும் வரை, உங்களிடம் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் காத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆறு படிமுறைகளை நீங்கள் கவனத்தில் கொண்டால், நீங்கள் முக்கியமான அடிப்படைகளில் பெரும்பாலானவற்றை உள்ளடக்கியிருப்பீர்கள். வணிகத்தின் எந்த வடிவமும் ஆபத்தானது, மற்றும் வணிகத் தொடக்க முயற்சிகள் மிகவும் ஆபத்தானவை – பெரும்பாலான வணிகத் தொடக்க முயற்சிகள் தொடங்கப்பட்ட உடனேயே தோல்வியடைகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்! எவ்வாறாயினும், கணிப்பிடப்பட்ட அபாயங்களை கையில் எடுத்துக்கொள்வதும், அவற்றை நன்கு நிர்வகிப்பதும் வணிகத்தின் இயல்பு ஆகும் – இதிலேயே முயற்சிக்கான பலன் தங்கியுள்ளது. உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள். உங்கள் பயணத்தை நீங்கள் ஆரம்பிக்கும் போது மிகவும் பயனுள்ள உசாத்துணை ஆதாரங்களைப் பெற மீண்டும் இதனை நாடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

Exit mobile version