Diriya

“மாற்றம்” உங்கள் ஊழியர்களை பாதிக்க விடாதீர்கள்

Be The Change

மாற்றம் ஏற்பட்டால், உங்கள் ஊழியர்களை அமைதிப்படுத்துங்கள்!

மக்கள் பெரும்பாலும் எதிரும் புதிருமான பதில்களுடன் மாற்றத்தை தொடர்புபடுத்துகிறார்கள். ஒரு நிறுவனமாக, அவைகளில் எவற்றையும் நாம் விரும்பவில்லை. ஏனெனில் அவை செயல்முறைகளை சீர்குலைத்து நிறுவனத்தின் செயல்திறனை பாதிக்கலாம். எனவே, மக்கள் தங்கள் புதிய பணிச்சூழலை ஏற்றுக்கொள்வதற்கான மாற்றத்தை எதிர்ப்பதில் இருந்து திசைதிருப்பப்படுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.

சில நேரங்களில், பணிச்சூழலில் ஏற்படும் மாற்றம் ஊழியர்களை விட நிறுவனத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மைதான். ஒரு நிறுவனம் பிறிதொரு நிறுவனத்துடன் ஒன்றிணைவதையும், நீங்கள் செய்ய வேண்டிய சட்ட, நிதி மற்றும் கட்டமைப்பு மாற்றங்களையும் கற்பனை செய்து பாருங்கள். ஆனால் மாற்றத்தின் போது ஊழியர்கள் தரப்பை நிர்வகிப்பது பெரும்பாலும் நிறுவன மாற்றத்தின் மிகவும் சவாலான மற்றும் முக்கியமான அங்கமாகும். ஒரு நிறுவனத்தில் இத்தகைய மாற்றங்களைக் கையாள்வதற்கான மிகவும் பிரபலமான நுட்பங்களில் ஒன்று மூளை-இதயம்-கை (Head to Heart to Hand) வழிமுறை. அது பின்வருமாறு,

எனவே, அடிப்படையில் நான் ஏன் மாற வேண்டும் என்று சிந்தித்துப் புரிந்துகொள்வது, எனக்கு இதில் என்ன இருக்கிறது என்பதை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்வது மற்றும் நான் வித்தியாசமாக என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு அதன்படி செயல்படுவது தொடர்பானது.

பணியிடத்தில் இதைப் பயன்படுத்துதல்:

மூளை (Head) வழிமுறையைப் பின்தொடரும் போது – மாற்றம் ஏன் தேவைப்படுகிறது மற்றும் நீங்கள் அந்த முடிவை எடுத்தது எதற்காக என்பதை உங்கள் பணியாளர்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அணியிடம் அதைத் தெரிவிக்கும்போது, உங்கள் விளக்கம் பின்வருவனவற்றைப் பூர்த்திசெய்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்:

முக்கியத்துவம் தொடர்பான உணர்வை அவர்களுக்கு வழங்குவது,

இதய (Heart) வழிமுறையைப் பின்பற்றும் போது – பணியாளர்கள் மாற்றத்தை உள்வாங்குவதற்கு நம்பிக்கை மற்றும் அதிகாரம் அளித்து, அவர்கள் ஏன் மாற வேண்டும் என்பதை நீங்கள் அவர்களுக்கு முறையாக எடுத்துரைப்பதை உறுதிசெய்யவும்.

கை (Hand) வழிமுறையைப் பின்தொடரும் போது – இறுதியாக பணியாளர்கள் மாற்றத்தைத் தழுவி அதன்படி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஊழியர்களை ஈடுபடுத்த மறக்காதீர்கள்!

உங்கள் ஊழியர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய தகுதியானவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்கள் நிறுவனத்தை வரையறுக்கிறார்கள் மற்றும் நிறுவனத்தின் வெற்றி அவர்களின் செயல்திறனைப் பொறுத்தது. அவர்கள் அனைவரையும் நிறுவனத்தின் மாற்றத்திற்கான முகவர்களாக நீங்கள் அடையாளம் காணலாம். ஒரு மாற்றத்தில் அல்லது செயல்பாட்டில் தாமும் ஈடுபடுவதை அவர்கள் உணரும் போது, அவர்கள் அதனைச் சொந்தமாக உணருவார்கள் என்பதுடன், அவர்களின் செயல்திறன் தெளிவாக இதனுடன் தொடர்புபடும்.

சரி, உங்களை இரண்டு சூழ்நிலைகளில் வைத்து சிந்திப்போம்.

நிறுவனத்தின் உரிமையாளர் உங்களிடம் வந்து நிகழவிருக்கும் மாற்றத்தைப் பற்றித் உங்களிடம் தெரிவிப்பதை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் உடனடி மேலதிகாரி அந்த மாற்றத்தை தனக்குள்ளே மாற்றியமைத்து, தன்னைப் பின்தொடர உங்களை வழிநடத்துகிறார் என்று கற்பனை செய்து பாருங்கள்.

எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ஆம், அதற்கேற்ப மாற்றியமைத்து முடிவெடுப்பதில் உங்கள் பணியாளர்களை ஈடுபடுத்துவது அவசியம்.

பாரிய படிகளை முன்னெடுக்க வேண்டாம், மாற்றத்திற்கான செயல்முறையின் ஒவ்வொரு படியாக தெரிவிக்கவும்!

மாற்றங்களுடன் உங்கள் ஊழியர்களை வேலைப்பளுவிற்கு உள்ளாக்காதீர்கள். மாற்றத்தின் போது நீங்கள் விரும்பும் கடைசி விடயம் அவர்கள் ஒரு தேவையற்ற அதிர்ச்சியை அனுபவிப்பதாகும். என்ன நடந்தாலும் அதனை ஜீரணிக்க அவர்களுக்கு இடமளிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் பின்பற்ற வேண்டிய தினசரி உதாரணங்கள் மற்றும் பணிகளை அவர்கள் மத்தியில் ஊக்குவிக்க முயற்சிக்கவும், எதிர்பார்க்கப்படும் மாற்றத்தை சந்திக்கும் போது உற்பத்தித்திறனை அதிகரிக்க அவர்களுக்கு வெகுமதி அளிக்கலாம்.

மதிப்பீடு அவசியம்!

அவை எவ்வாறு மாற்றியமைக்கப்படுகின்றன மற்றும் செயல்முறையின் செயல்திறனைக் கண்காணிப்பது அவசியம். நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? இது அவர்களின் அனைத்து செயல்களையும் கண்காணிக்கவும், அவர்களின் செயல்திறனுக்கு ஏற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் உதவும். PDCA சக்கரம் இங்கே மிகுந்த பயனளிக்கிறது.

Exit mobile version