Diriya

ஏற்றுமதி சந்தையை அணுகும்போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை

Export Market

சர்வதேச சந்தையில் வியாபாரங்களை கட்டியெழுப்புவதற்கு பெருமளவிலான வாய்ப்புக்கள் உள்ளதை புள்ளிவிபர தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இன்று வியாபாரமானது நாடுகளுக்கிடையிலான எல்லைகளுக்கு அப்பாற்பட்டுள்ளது. உலகில் எங்கிருந்தும் வாடிக்கையாளர்கள் விரும்பிய பொருட்களை அவர்கள் விரும்பியபடி வாங்குவதற்கு ஏற்ற வகையில் வியாபாரம் செய்ய முடியும். அத்துடன் அது எல்லையற்ற திறந்த தன்மையுடன் காணப்படுகின்றது. உலகளாவிய ரீதியிலான இலத்திரனியல் வியாபாரமானது பரிமாற்ற விற்பனையாளர்களுக்கு தங்கள் வர்த்தகத்தை எல்லைகள் கடந்து வெகுதூரம் கொண்டு சென்று அதனூடாக ஏற்றுமதி சந்தையை நாடும் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை ஊக்குவித்துள்ளது.

உலகளாவிய வியாபர அரங்கில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் தொழில்முனைவோருக்கு இருந்தாலும் எல்லை தாண்டிய வியாபாரத்தில் ஈடுபடும்போது பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஏற்றுமதி செயற்பாடுகளில் உள்ள கடினமான போக்குகள் இவர்களுக்கு மிக பெரிய சவாலாக உள்ளது. இதுதவிர வியாபாரத்;திலுள்ள செயல் முறைகளை, எவ்வாறு வழி நடத்துவது? யாரும் செய்யாத புதிய வியாபாரங்கள் எவை? என்பவற்றை கண்டுபிடிப்பதில் அதிக உழைப்பும் முதலீடும் தேவைப்படுகின்றது. இத்தகைய வழிமுறைகளை அறிந்து வைத்திருப்பதன் மூலமே எமது செயற்பாடுகளை சிக்கலின்றி வழிகாட்டல்கள் ஊடாக மேற்கொள்ளலாம். சீர்திருத்தங்கள் காரணமாக ஏற்றுமதி சுற்றுப்புறச் சூழலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதோடு தொடர்ந்து அவை மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே ஏற்றுமதியாளர்கள் எவற்றை செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்பது பற்றிய சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

ஏற்றுமதி சந்தையை அணும் போது அங்கு நிலவும் கலாச்சார வேறுபாடுகளை கற்றறியுங்கள்

ஒவ்வொரு நாட்டுக்கும் தனிப்பட்ட வேறுபாடுகள் இருக்கும் என்பதால் நாம் ஒரு நாட்டின் சந்தையை தேர்ந்தெடுக்கும் போது அந்நாட்டின் உள்ளுர் பழக்க வழக்கங்கள் மற்றும் வியாபார பண்புகள் குறித்து அறிந்திருத்தல் அவசியமாகும். அத்தோடு திறந்த மனப்பான்மை, கலாச்சார விழிப்புணர்வு, தேசிய முறைமைகள் மற்றும் சுதேச கொள்கைகள் போன்ற காரணிகளில் அதிக கவனமும் செலுத்த வேண்டும். நீங்கள் தெரிவு செய்யும் நாட்டுக்கு நேரடியாக சென்று அந்த நாடு தொடர்பாக கற்றறிவது சாலச் சிறந்த நடவடிக்கையாகும். எனினும் பயணத்திற்கு முன் பயண ஆலோசனை தொடர்பான நிலவரங்களை முன்கூட்டியே அறிந்து அந்த நாட்டுக்கு செல்வது சிறந்த முடிவாக அமையும்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய காரணிகளை தவிர்க்க வேண்டாம்

நீங்கள் உங்கள் தயாரிப்புகளை அனுப்பும் நாட்டில் நிலவும் இறக்குமதி கட்டுப்பாடுகள் பற்றி அதிக கவனம் செலுத்த தவற வேண்டாம். இத்தகைய தவறுகளால் இலக்கு சந்தைக்கான உங்கள் நுழைவு மறுக்கப்படலாம். இதன் விளைவாக ஏற்றுமதி பறிமுதல் செய்யப்படுவதோடு நிதி அபராதங்களுக்கு உட்படவும் வாய்ப்புண்டு. ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகள் பற்றிய அறிவு உங்களிடம் காணப்பட்டாலும், அது நாட்டுக்கு நாடு வேறுபட வாய்ப்புள்ளது. எனவே சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்தின் போது இத்தகைய நுணுக்கமான விதிமுறைகள் பற்றிய அறிவு, இணக்கப்பாடு கட்டாயம் தேவைப்படுகின்றது. கப்பலேற்றம் நிறுத்தப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய காரணிகளை தவிர்ப்பது அல்லது தவிர்க்க முயற்சிப்பதில் இருந்து விலகி இருங்கள்.

சூழ்நிலை மற்றும் SWOT பகுப்பாய்வுகளை மேம்படுத்துங்கள்

ஏற்றுமதி சந்தைப்படுத்தல் திட்டமிடலில் சூழ்நிலை மற்றும் SWOT பகுப்பாய்வு என்பது மிகப் பாரிய செயற்பாடாகும். ஆயினும் நீங்கள் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய முழுமையான கண்ணோட்டத்தோடு இதனை மேற்கொள்வது மிகவும் முக்கியமாகும். இதன் மூலம் உங்கள் வியாபாரம் வெளிநாட்டு சந்தையில் எவ்வாறு ஏற்புடையதாகும்? உங்கள் வர்த்தகம் நாமம் எவ்வாறு பொருந்தும்? என்பதை பற்றிய அறிவினைப் பெற்றுக் கொள்ளலாம். சூழ்நிலை பகுப்பாய்வின் மூலம் உங்கள் நிறுவனத்தின் பலம் மற்றும் மதிப்பு, முன்மொழிவு, சமூக மற்றும் கலாச்சார காரணிகள்> வெளிநாட்டில் சட்ட காரணிகள், சர்வதேச சந்தை பகுப்பாய்வு, போட்டித் தொழில் பகுப்பாய்வு> மக்கள் தொகை மற்றும் தொழில்நுட்ப போக்குகள் போன்ற காரணிகளில் கவனம் செலுத்தும்.

SWOT பகுப்பாய்வு என்பது ஒரு நிலையான மேலாண்மை பயிற்சியாகும். இது உங்கள் நிறுவனத்தை அதன் உள் மற்றும் வெளிப்புற சூழல்களின் பின்னணியில் மதிப்பிடுகிறது. SWOT பகுப்பாய்வு ஏற்றுமதி மற்றும் வணிக நடவடிக்கைகளை திட்டமிடும் போது அனைத்து நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்பட வேண்டும். நீங்கள் ஏற்றுமதி செய்யத் திட்டமிடும் நாட்டில் உங்களின் பலம், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களை பகுப்பாய்வு செய்து, நீங்கள் திட்டத்துடன் முன்னேறும்போது உங்கள் நோக்கங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கான அறிவார்ந்த மற்றும் பகுப்பாய்வுப் பார்வையை பெற்றுக்கொள்ளமுடியும்.

விஷயங்களை சிக்கலாக்காதீர்கள் அல்லது நிலைத்தன்மையைக் குறைக்காதீர்கள்

திறந்த வர்த்தகத்தில் வாடிக்கையாளர்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு பொருட்களை கொள்வனவு செய்ய தயாராக இருக்கும்போது அவர்களுக்கு தடையற்ற விநியோக அனுபவத்தை வழங்குங்கள். அவர்களை ஏற்றுமதி சுற்றுப்புற சூழல் அமைப்பின் நெருக்கடி அழுத்தங்களுக்கு ஆளாக்காதீர்கள்.

கப்பலேற்றும்போது போது ஏற்படும் உண்மையற்ற காலக்கெடு பற்றி நன்கு அறிந்துகொள்ளுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையற்ற உறுதிகளை அளிக்க வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு ஒட்டுமொத்த வியாபார செயற்பாடு தொடர்பாக பெரிதாக அறிந்திருக்க மாட்டார்கள். கப்பலேற்றும் செயல்பாட்டின் போது நிகழ்நேர கண்காணிப்பு மூலம் அவற்றைப் புதுப்பித்துக்கொள்வது நல்லது.

ஏற்றுமதி சந்தைகளை அணுகும்போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படையான, ஆனால் மிக முக்கியமான காரணிகள் இவையாகும்.

Exit mobile version