Diriya

ஊழியர்கள் மகிழ்ச்சிக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

Employee Satisfaction

உங்களது சிறந்த சொத்து உங்கள் ஊழியர்கள். நீங்கள் இதுபற்றி சிந்தித்துப் பார்த்தால்> உங்களுடன்
பணியாற்றுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்களின்றி உங்களால் செயல்பட முடியாது என்ற
உண்மையை உணர முடியும் தானே? ஒரு தொழிலில் காணப்படும் பல பண்புகளை எம்மால் தனித்து
கையாள முடியாது. இருப்பினும்> பெரும்பாலும்> நாம் பல்வேறு வியாபார உள்ளடக்கங்களில்
சிக்குகின்றதுடன்> மனிதவளத்தை பயன்படுத்தவும் மறந்து விடுகின்றோம். உங்களின் சிறந்த
சொத்தாகவுள்ள உங்கள் ஊழியர்களுக்கு நீங்கள் மதிப்பளித்தால்> நீங்கள் கவனம் செலுத்த விரும்பும்
சிலவற்றையும்> செய்ய வேண்டியை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி சிந்தித்து கவனம் செலுத்த
வேண்டும்.

ஊழியர்கள் வேலை வாழ்க்கை சமநிலைக்கு முன்னுரிமை கொடுங்கள்

ஆம். எப்போதும் வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். நேற்றைய தினமே செய்து முடித்திருக்க வேண்டிய
வேலைகள் மீதமிருக்கும். நீங்களும் உங்கள் ஊழியர்களும் பணிக்கும்> வாழ்க்கைக்கும் முன்னுரிமை
கொடுப்பது மிக முக்கியம். இரவு நேரங்களிலும்> வார இறுதி நாட்களிலும் மற்றும் விடுமுறை நாட்களிலும்
பணியாளர்கள் பணிபுரிவார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தால்> உங்களுக்கு தெரியாமலேயே அவர்கள்
வேறு வேலைகளை தேடி அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்கள் அவ்விடம் நோக்கி செல்வது உறுதி.

நெகிழ்வான பணி அட்டவணைகளின்படி செயற்படுங்கள்.

நெகிழ்வுத்தன்மையனாது வேலையையும் வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. மேலும் உற்பத்தித்திறனை
அதிகரிக்கிறது. எமது மனநிலை எப்போதும் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். மேலும் ஒரு
குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியிடத்திற்கு வந்து> வேலையை முடித்து வெளியேறும் ஊழியர்களின்
எண்ணிக்கையை விடுத்து> எப்படி பணிகளைச் செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்க
வேண்டும். அன்றைய நாளின் முடிவில்> வேலையை தரத்துடன் நிறைவு செய்து வெளியேறினால்>
அவர்கள் அன்றைய நாளில் எவ்வளவு நேரம் வேலை செய்தார்கள் என்பதை பற்றி நாம் ஏன் கவலைப்பட
வேண்டும்?

உங்கள் பணியாளர்களுக்கு செவிகொடுங்கள்.

உங்கள் பணியாளர்கள் உங்களிடம் எதையாவது கூற முற்படுகையில்> அது மனக்குறையாக இருந்தாலும்
அல்லது வியாபாரம் தொடர்பான விஷயமாக இருந்தாலும்> அவர்கள் சொல்வதற்கு அவதானமாக
செவிகொடுங்கள். அவர்களை நிராகரிக்கவோ அல்லது குறைவாக மதிக்கவோ வேண்டாம். அவர்கள்
பேசும்போது நீங்கள் முடிவுகளை எடுக்காதீர்கள். முதலில் அவற்றைக் கவனமாக கேளுங்கள் மற்றும்
ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் கண்ணோட்டம் இருக்க முடியும் என்ற உண்மையை எப்போதும்
ஏற்றுக்கொள்;ளுங்கள்.

சில ஊழியர்களை மட்டும் விரும்பாதீர்கள்

சில ஊழியர்களுக்கு சார்பாக நீங்கள் எப்போதும் செயற்படுகின்றீர்கள் என்ற எண்ணத்தை மற்றைய
ஊழியர்கள் உணரும்போது உங்கள் மீது அதிருப்தி அடைவதற்கு அது வழிவகுக்கும். சில ஊழியர்கள் மற்ற
ஊழியர்களை விட வேலையை நன்றாக புரிந்துகொண்டு சிறப்பாக செய்து முடிப்பார்கள். அதற்காக நீங்கள்

அவர்கள் மீது தனிப்பட்ட விருப்பம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதனால் அவர்கள் தங்களை
தாங்களே ஒப்பிட்டு பார்;க்கும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்.

ஊழியர்கள் செய்ய இயலாதவற்றை செய்வார்கள் என எதிர்பார்க்காதீர்கள்

மனித சக்திக்கு வரையறை உண்டு. அவர்கள் மிக புத்திசாலியான> திறமையான மற்றும் உயர் செயல்திறன்
கொண்ட நபர்களாக இருக்கலாம்> ஆனால் அவர்களுக்;கும் நிச்சயமாக எல்லைகள் உண்டு. அவர்களையும்
நீங்கள் அடையாளம் காண முடியும். ஒருவருக்கு பல்வேறு கடினமான வேலையை கொடுத்து> அன்றைய
நாளின் நிறைவடைய முன்னர் அவர் அதனை செய்து முடிப்பார் என எதிர்பார்க்காதீர்கள். அவர்களுக்கு
நியாயமான இலக்குகள் மற்றும் காலக்கெடுவைக் கொடுங்கள். அவர்கள் சவால்களைச் சந்தித்தால்> அது
உங்களுக்கு அவசியமில்லையென்றாலும்> சம்பந்தப்பட்ட நபர்கள் அவர்களுக்கு உதவுவார்கள் என்ற
தைரியத்தை அவர்களுக்கு கொடுங்கள்.

ஊழியர்களை அவமதிக்காதீர்கள்

தாம் அவமதிக்கப்படுவதை எவரும் விரும்புவதில்லை. அது ஒரு குரலாக> உடல் மொழி சார்ந்ததாக அல்லது
நேரடியான பேச்சு தொனியின் பிரதிபலிப்பாக இருக்கலாம். எப்படியிருந்தாலும்> உங்கள் ஊழியர்களை
மரியாதையுடன் நடத்துங்கள். நீங்கள் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றீர்கள் என்றால்> அதற்கு ஈடாக
அவர்கள் உங்களுக்கு அவர்களின் திறன்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறார்கள் என்பதை நினைவில்
கொள்ளுங்கள்.

உங்கள் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிசெய்ய> நீங்கள் செய்யக்கூடிய சில பொதுவான
செயல்கள் மற்றும் செய்யக்கூடாதவை இவையே. உங்கள் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்தால், உங்கள்
வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஊழியர்கள் மகிழ்ச்சிக்கு செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை பற்றி அறிந்து கொள்ள திரிய இணையத்தளத்தைப் பார்க்கவும்.

Exit mobile version