Diriya

டிஜிட்டல் மாற்றத்தை உள்வாங்குதல்: சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கான (SME) 5 அடிப்படை படிகள்

விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த சகாப்தத்தில், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்கள் (SMEs) போட்டித்தன்மை கொண்ட வணிக உலகில் செழித்தோங்க டிஜிட்டல் மாற்றங்களுக்கு உள்ளாகுதல் வேண்டும்.

சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உள்ளாக பின்பற்ற வேண்டிய 5 அடிப்படை படிகள் கீழே தரப்பட்டுள்ளன:

இயக்க ஒழுங்குமுறைகள் (Operational System) டிஜிட்டல்மயமாதல்:

இதில் உங்களால் முடிந்தவரை உங்கள் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குவதே முதல் மற்றும் மிக அடிப்படையான படியாக காணப்படுகின்றது. கட்டணங்கள் மற்றும் பற்றுச்சீட்டுக்கள், மனிதவள செயற்பாடுகள் (HR) மற்றும் ஊதியம், விநியோகச் சங்கிலி மற்றும் பங்குகள், விற்பனை மற்றும் விநியோகம், கணக்கியல் போன்றவை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய நிறுவனத்தின் செயற்பாட்டுத் தேவைகளில் மிகவும் இன்றியமையாதவையாக உள்ளன. இது மனிதவளங்கள் ஊடாக ஏற்படும் பாரிய செலவை நீக்கும் முதலீடாக பார்க்கப்பட வேண்டும்.

Cloud Computing இற்கு இசைவாகுதல்:

சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் டிஜிட்டல் மயமாக்கலில் இணைய அடிப்படை படிகளில் ஒன்றாக Cloud Computing காணப்படுகின்றது. Cloud Computing சேவைகள் சேமிப்பிடம் (Storage), கணினி ஆற்றல் மற்றும் மென்பொருள் பயன்பாடுகள் போன்றவற்றிற்கு செலவு குறைந்த மற்றும் அளவிடக்கூடிய தீர்வை வழங்குகின்றன. சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் Cloud Platforms

உபயோகள் செய்து செயற்பாடுகளை நெறிப்படுத்தவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும், தரவுகளுக்கான அணுகலை மேம்படுத்தவும் முடியும். Cloud Services இற்கு செல்வதன் வாயிலாக வியாபாரங்கள் உட்கட்டமைப்புச் செலவுகளைக் குறைக்க முடியும் என்பதோடு, தரவுப் பாதுகாப்பை உறுதிசெய்து, தொலைநிலைப் பணியையும் இயக்க முடியும். இதனால் நெகிழ்வுத்தன்மையையும் வினைத்திறன் அதிகரிக்க முடியும்.

டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள்:

டிஜிட்டல் யுகத்தில், சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் தங்கள் இலக்கு வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கு வலுவான ஒன்லைன் இருப்பை நிறுவுவது மிக முக்கியமானது. சமூக ஊடக சந்தைப்படுத்தல் (Social Media Marketing), SEO, Email Campaigns மற்றும் Content சந்தைப்படுத்தல் என பல்வேறு உத்திகளை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உள்ளடக்கியது. இந்த கருவிகள் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் பரந்த வாடிக்கையாளர்களை அடைய உதவுவதோடு மட்டுமல்லாமல் நுகர்வோர் நடத்தை பற்றிய அறிய பின்னூட்டங்களையும் வழங்குகின்றன. தங்கள் வாடிக்கையாளர்களை நன்றாகப் புரிந்துகொள்வதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மாற்றங்களுக்கு ஏற்ப ஒழுங்கு செய்ய முடியும் என்பதோடு, வாடிக்கையாளர் நன்மதிப்பினையும், விசுவாசத்தினையும் அதிகரிக்க முடியும்.

தரவு பகுப்பாய்வு மற்றும் செயலாக்கம்:

தரவு என்பது சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் தகவலறிந்து முடிவெடுப்பதற்குத் உதவுகின்றன. தரவு பகுப்பாய்வுக் கருவிகளைச் செயற்படுத்துவதானது வியாபாரங்கள் பாரிய தரவுத்தொகுப்புகளிலிருந்து அர்த்தமுள்ள தகவல்களை தனியாக்குவதற்கு உதவுகின்றது. செயற்பாடுகளை மேம்படுத்தவும், சந்தை போக்குகளை அடையாளம் காணவும், வாடிக்கையாளர்

அனுபவங்களை மேம்படுத்தவும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் இவற்றைப் பயன்படுத்தலாம். விற்பனை முறைகளைப் புரிந்துகொள்வது, தேவையாக இருக்கும் விடயங்களை முன்னறிவிப்பது அல்லது சந்தைப்படுத்தல் முயற்சிகளைத் தனிப்பயனாக்குவது என தரவு பகுப்பாய்வானது சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு தரவு சார்ந்த முடிவுகளை எடுக்கவும், செயற்திறன் மற்றும் போட்டித்தன்மையை வளர்க்கவும் உதவுகிறது.

சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள் (Cyber Security Measures):

டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அதிகமாக நம்பியிருப்பதன் மூலம் இணையம் வாயிலான தாக்குதல்களின் அபாயம் அதிகரித்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் தங்கள் முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பதற்கும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கும் இணையப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். Firewalls, குறியாக்கம் (Encryption) மற்றும் Security Audits போன்ற வலுவான சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துவது அவசியமாகும். சாத்தியமான இணைய தாக்குதல்களுக்கு எதிராக விழிப்புணர்வு கலாச்சாரத்தை உருவாக்க, இணைய பாதுகாப்பு சிறந்த நடைமுறைகளில் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது சமமாக அவசியம்.

சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்கள் டிஜிட்டல் நிலப்பரப்பில் செல்லும்போது, இந்த படிகள் நிலையான வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.


Content provided by: Content Commune – email: the.conent.commune@gmail.com

Exit mobile version