Diriya

செயல்திறன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்: SME களில் வணிக செயல்முறை கையகப்படுத்தல்

வழமையான செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுத்து செல்லப்படுகின்ற போது வணிகம் அதன் முக்கிய திறன்களில் கவனம் செலுத்தக்கூடிய ஓர் உலகினை கற்பனை செய்து பாருங்கள். இதுவே வணிகம் செயல்படுத்தப்படுகின்ற வழியை மாற்றி அமைத்துள்ள உபாய ரீதியான அணுகுமுறையான வணிக செயன்முறை பெறுகையின் (BPO) இன் பலமாகும். செலவுகளை குறைக்கும் நெறிமுறைப்படுத்தப்பட்ட செயற்பாடுகளில் இருந்து பூகோள ரீதியாக போட்டியிடக்கூடிய வணிகத்தை இலக்காகக் கொண்ட ஆட்டத்தை மாற்றி அமைப்பதாக டீPழு பரிணமித்துள்ளது. இக்கட்டுரையில் டீPழு, அதன் பரிணாமம், பிரதானமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியில் வணிகத்திற்கான அதன் முக்கியத்துவம் என்பவற்றை ஆராய்வதுடன் வெற்றியை அடையும் வகையில் இவற்றை எவ்வாறு வினைத்திறனாக செயல்படுத்த முடியும் என்பதை ஆராய்கின்றோம்.

வணிக செயன்முறை பெறுகை BPO என்பது குறிப்பிட்ட வணிக தொழிற்பாடுகளை ஒப்பந்தம் செய்யும் நடைமுறை அல்லது வெளிவாரி சேவை வழங்குநர் செயன்முறைகளை குறிக்கின்றது. தங்களது குறித்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக திகழ்வதுடன் விசேட திறன்கள் மற்றும் வளங்களை வழங்கக் கூடியவர்களாக காணப்படுகின்றனர். BPO ஆனது நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை மேம்படுத்துதல், வினைத்திறனை அதிகரித்தல், அதன் வளர்ச்சி மற்றும் திறன்களுக்கு நேரடியாக பங்களிப்புச் செய்யக்கூடிய முக்கிய வணிக செயற்பாடுகளின் பால் தனது கவனத்தை செலுத்துகிறது.

BPO ஆனது செலவு சேமிப்பு உபாயத்தில் இருந்து புத்தாக்கம் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கக் கூடிய பங்களிப்பு உபாயத்திற்கு பரிணாமம் அடைந்துள்ளது. ஆரம்பத்தில், BPO ஆனது வாடிக்கையாளர் உதவி மற்றும் தரவு உள்ளிடல் போன்ற செயற்பாடுகளின் அடிப்படையில் ஒன்றிணைந்திருந்தது. எனினும், பல ஆண்டுகளாக நிதி, மனிதவளங்கள், விநியோகத் தொடர் முகாமைத்துவம், உபாயரீதியான தீர்மானமெடுக்கும் செயன்முறைகளைக்கூட உள்ளடக்கியதாக பரந்துபட்ட தொழிற்பாடுகளை உள்ளடக்கி அதன் நோக்கத்தை விரிவடையச் செய்துள்ளது. BPO இரு பிரதான வகைகளைக் கொண்டுள்ளது. பின் நிர்வாகம் (Back Office) மற்றும் முன் நிர்வாகம் (Front-Office) பெறுகை என்பனவை அவையாகும். பின் நிர்வாகம் BPO ஆனது ஊதிய செயன்முறை, தரவு உள்ளீடு மற்றும் சரக்கு முகாமைத்துவம் போன்றவற்றை உள்ளடக்குகிறது. பின் நிர்வாக BPO ஆனது மறுபக்கத்தில் வாடிக்கையாளர் சேவை, விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் சேவைகள் என்பவற்றை உள்ளடக்குகிறது. கடல், கரைக்கு அப்பாற்பட்ட அருகில் உள்ள பெறுகை போன்றவாறு சேவை வழங்குனரின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு BPO வை வகைப்படுத்த முடியும்.

மேலும் படிக்க – இருப்பு கையாளுதலும் வழங்கல் சங்கிலி முகாமைத்துவமும்

BPO பெரு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்திருந்தாலும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி தனது போட்டி முனையை அடைவதற்காக இப்பயிற்சியை பயன்படுத்தி உள்ளது. BPO வை கவர்ச்சிகரமான தெரிவாக்கி சகல தொழிற்பாடுகளையும் கையாள்வதற்கான வளங்களை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியால் கொண்டிருக்க முடியவில்லை. சிறிய மற்றும் நடுத்தர முயற்சியில் உள்ள BPO வின் தன்மையானது வெளிவாரி நிபுணர்களினால் வினைத்திறனாக நிர்வகிக்கக்கூடிய குறிப்பிட்ட செயல்முறைகளில் கவனம் செலுத்தியது. இச் செயன்முறைகளை கணக்கியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவியில் இருந்து டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவை வரை வகைப்படுத்த முடியும். SME மீதான BPO வின் முக்கியத்துவத்தை மிகையாக கருத முடியாது. வளக்கட்டுப்பாடுடைய SME முயற்சியாண்மைக்கு, வருமானம் ஈட்டல் மற்றும் விரிவுபடுத்தல் என்பவற்றில் நேரடியாக தாக்கம் செலுத்துகின்ற  முக்கிய வணிக செயற்பாடுகளின் பால் தமது வரையறுக்கப்பட்ட வளங்களை விடுவிப்பதற்காக பெறுகை முக்கியத்துவமற்ற தொழில்பாடுகள் அனுமதிக்கின்றது. BPO ஆனது கணிசமான முன் முதலீடுகளின் தேவையின்றி விஷேட திறன்கள் மற்றும் தொழினுட்பங்களை அணுகுவதற்கு SME இனரை இயலச்செய்கிறது. விரைவாக மாற்றமுறும் வணிகச் சூழலில் வளர்ச்சியை மாத்திரம் துரிதப்படுத்தாமல் SME இனரின் ஒட்டுமொத்த தேர்ச்சிகளையும் மேம்படுத்துகின்றது. SME இல் BPO இன் நன்மைகள் மற்றும் தீமைகள் பின்வரும் வகையில் விவரிக்கப்படுகின்றன. 

நன்மைகள்.

செலவு வினைத்திறன் –  SME ஆனது உட்கட்டமைப்பு, பயிற்சி மற்றும் தொழிலாளர் நன்மைகள் என்பவற்றுடன் தொடர்புடைய செலவுகளை குறைப்பதனால் பெறுகையான முக்கிய செலவு சேமிப்புக்களுக்கு காரணமாக அமையும்.

முக்கிய தேர்ச்சிகளில் கவனம் செலுத்துதல் – நிபுணத்துவத்திற்கான வழக்கமான செயற்பாடுகளை விட்டுவிட்டு எவற்றை சிறப்பாக மேற்கொள்ளலாம் என்பதை SME கவனத்திற் கொள்வதற்கு BPO இயலச் செய்கின்றது.

நிபுணத்துவத்திற்கான அணுகல் – 

SME ஆனது திறன் தொழில்வான்மையாளர்களை முழு நேரமாக பணிக்கு அமர்த்தாமல் அவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தை பெற முயற்சிக்கிறது.

அளவிடல் – வணிக தேவைகளுக்கு ஏற்ப உயர் மற்றும் கீழ் செயல்பாடுகளை அளவிட BPO நெகிழ்வுத் தன்மையை வழங்குகின்றது.

வினைத்திறன் அதிகரிப்பு –  பெறுகையானது முன்னேற்றகரமான வினைத்திறன் மற்றும் உற்பத்தித் திறனுக்கு வழிகாட்டக்கூடிய நெறிமுறைப்படுத்தப்பட்ட செயன்முறைகளை அனுமதிக்கிறது.

தீமைகள்

கட்டுப்பாடு இழப்பு – முக்கியமான தொழிற்பாடுகளை வெளிப் பங்குதாரர்களுக்கு ஒப்படைத்தல் செயற்பாடுகளின் மீதான கட்டுப்பாட்டு இழப்பிற்கு காரணமாக அமையும்.

பாதுகாப்பு அவதானங்கள் – உணர்வு சார் தரவுகளை மூன்றாம் தரப்புக்களுடன் பகிர்தல், தரவுப் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

தொடர்பாடல் சவால்கள் –  தூரம் மற்றும் வலய வேறுபாடுகள் என்பன SME மற்றும் சேவை வழங்குநர்களிடையே தொடர்பாடல் சவால்களை ஏற்படுத்தக்கூடும்.

தங்கி இருத்தல் –  வெளித்தரப்பினர்கள் மீது அதிகமாக தங்கி இருத்தல் உள்ளக தேர்ச்சி பற்றாக்குறை மற்றும் வரையறுக்கப்பட்ட உள்ளக வளர்ச்சிக்கு காரணமாக அமையும்.

தர அவதானங்கள் – பிழையான BPO பங்காளரைத் தெரிவு செய்தல் சராசரிக்கும் குறைவான சேவைத்தரத்தை ஏற்படுத்துவதுடன் எதிர்மறை வாடிக்கையாளர் அனுபவங்களுக்கும் வழிகோலும்.

SME இல் BPO வை மேம்படுத்தி அவற்றிலிருந்து அதி உச்ச நன்மைகளைப் பெற பின்வரும் விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உபாயரீதியான பங்காளர் தெரிவு – BPO பங்காளர்களின் கவனமான தெரிவு மிகவும் அவசியமாகும். பங்காண்மைக்கு  செல்வதற்கு முன்னர் நிபுணத்துவம், சாதனைகள், கலாசார சீரமைப்பு என்பவற்றை மதிப்பிடல் வேண்டும்.

தெளிவான தொடர்பாடல் – SME மற்றும் சேவை வழங்குநர்களுக்கு இடையே வினைத்திறனான தொடர்பாடல் முறைகள் மற்றும் நெறிமுறைகளை அமைப்பதன் மூலம் சவால்களை குறைக்க முடியும்.

தரவு பாதுகாப்பு நடைமுறைகள் – தரவு பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல்களுடன் குறியாக்கம் மற்றும் இணக்கம் என்பன உள்ளடங்களாக வலுவான பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்தல்.

தொடர்ச்சியான நிகழ்த்துகை மதிப்பீடு –  SME இலக்குகளுடனான சீரமைப்பை உறுதிப்படுத்த BPO பங்காண்மைகளின் நிகழ்த்துகையை கண்காணித்தல் மற்றும் அவ்வப்போது மீளாய்வுகளை நடாத்துதல்.

சமநிலை அணுகுமுறை –  வெளி பங்கான்மையாளர்கள் மீதான அதீத தங்கியிருப்பை தடுப்பதற்காக பெறுகை மற்றும் நிறுவன இயலுமைகளுக்கிடையே சமநிலையைப் பேணல்.

இன்றைய மாற்றமடையும் வணிகச் சூழலில், SME வெற்றியடைவதற்கு ஒவ்வொரு நன்மையையும் அவசியப்படுத்துகின்றது. SME தனது முக்கிய பலங்களில் கவனம் செலுத்தும் அதேவேளை விஷேட திறன்கள், சீரான செயற்பாடுகள் மற்றும் வளர்ச்சி என்பவற்றை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வணிக செயன்முறை பெறுகை (BPO) வழங்குகின்றது.

BPO அதன் நன்மைகள் மற்றும் சவால்களுடன் காணப்படுகின்ற போதிலும், மூலோபாய  மற்றும் நன்கு நிர்வகிக்கப்படும் அணுகுமுறையானது, பூகோள சந்தையில் செயற்பாட்டுத்திறன், புத்தாக்கம் மற்றும் போட்டித் தன்மைகளில் முன்னேற்றம் பெற SME இற்கு உந்துதளிக்கின்றது.


இந்த உள்ளடக்கமானது CeFEnI/COSME இன் உதவியுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்டதாகும்.

Exit mobile version