Diriya

சிறிய நடுத்தரளவு தொழில்முனைவோருக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகின்றது?

மடிக்கணினிகளின் பயன்பாடு முதல் சமூக ஊடக சந்தைப்படுத்தல் வரை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மீதே சிறு மற்றும் நடுத்தர அளவு தொழில்முனைவோர் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். சிறு மற்றும் நடுத்தர அளவு தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கும்>பராமரிப்புக்கும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பெரிதும் உதவுகின்றன. அதுதவிர மேலதிக செலவுகளைக் குறைகக்கவும் அது உதவுகின்றது. நீங்கள் சிறிய நடுத்தரளவு தொழில்முனைவோராக இருப்பின் அல்லது உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க விரும்பினால், தொழில்நுட்பம் உங்களுக்கு எவ்வாறு உதவும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் சமூக ஊடகம்

சந்தைப்படுத்தல் செலவீனமே எந்தவொரு வியாபாரமும் எதிர்கொள்ளும் மிகப் பெரிய செலவாகும். சமூக ஊடகங்கள் இன்று சக்திவாய்ந்த கருவியாக இருப்பதால்> சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரின் செலவீனத்தை இது வெகுவாக குறைத்துள்ளது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம்> பெரும்பாலான புதிய வியாபாரங்கள் தங்கள் வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்துவதற்கும்> புதிய சந்தைகளில் நுழைவதற்கும்> அதிவேகமாக சிறந்த வர்த்தக நாமத்தை உருவாக்குவதற்கும் இறுதியில் தங்கள் இலாப எல்லைகளை அதிகரிப்பதற்குமான வாய்ப்பை பெற்றுள்ளன. சமூக ஊடகங்களை பயன்படுத்துவது மிக எளிதாகும். இலங்கையில் தற்போது சமூக ஊடகங்களின் பாவனையும் அதிகரித்துள்ளது. சமூக ஊடக வளங்களை எவருக்கும் பயன்படுத்த முடியும்.

ஒன்லைன் கடைகள் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல்

நீங்கள் இனி ஓரிடத்தில் பௌதீக ரீதியாக கடையை வைத்திருப்பதற்கும்> மாதாந்த வாடகை அல்லது குத்தகை செலுத்துவதற்கும்> பணத்தை முதலீடு செய்வதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, வியாபாரத்தை முழுமையாக ஒன்லைனில் நடத்தும் வாய்ப்பை தற்போது நீங்கள் பெற்றுள்ளீர்கள். மேலும் சில சமயங்களில் அதிக கடைகளை வைத்திருப்பதன் மூலம் அனைத்துப் பலன்களையும் பெறலாம். பௌதீக ரீதியாக கடையை நடத்தி அதற்காக அதிக பணத்தை செலவு செய்ய வேண்டியதில்லை. குறிப்பாக தற்போது தொற்றுநோய் மற்றும் நிலையற்ற பொருளாதாரச் சூழல் நிலவுகின்ற தருணத்தில் இது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்காது. எனவே ஒன்லைனில் கடையை வைத்திருப்பது என்பது பரந்த பார்வையாளர்கள் உங்கள் தயாரிப்புகளை அணுக முடியும் என்பதே அதன் பொருளாகும். இந்த நோக்கத்திற்காக Instagram Explore மற்றும் Shop அல்லது Facebook பிசினஸின் ஆதாரங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம். டிக் டொக் தற்போது இலங்கை சந்தையில் வர்த்தகத்திற்கான தனித்துவமான இடத்தையும் உருவாக்கியுள்ளதையும் காண முடியும்.

நெகிழ்வான பணிச்சூழல்கள்

குறிப்பாக தொற்றுநோய் பரவத் தொடங்கிய பிறகு மக்கள் இயன்றளவு வீட்டிலிருந்து வேலை செய்வதை விரும்பினர். மேலும் நாடென்ற வகையில் நாம் அலுவலகத்திலிருந்து மட்டுமே செய்ய முடியும் என நினைத்த பெரும்பாலான வேலைகளை வீட்டிலிருந்து செய்ய முடியும் என்பதையும் உணர ஆரம்பித்தோம். வீட்டில் பணி புரிதல் சிறு மற்றும் நடுத்தர அளவு தொழில்முனைவோருக்கு நெகிழ்வான பணிச்சுழலை ஏற்படுத்தி> தொலைதூரத்தில் பணிபுரியும் பணியாளர்களைக் கொண்டிருக்கவும்> அலுவலக இடத்தில் பணத்தைச் சேமிக்கவும் ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது. ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பணியாளரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தொழில் வழங்குனர்களின் பொறுப்பையும் இது பெரிதும் குறைத்துள்ளது. ஏனெனில் அவர்களை அலுவலகத்திற்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்படாமல் உள்ளது.

உடனடி வாடிக்கையாளர் கருத்து

எந்தவொரு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரமும் வளரக்கூடிய மிக முக்கியமான வழிகளில் ஒன்றே வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு கவனம் செலுத்துவதாகும். ஒரு ஆய்வை நடத்த வாடிக்கையாளர்களிடம் நேரடியாக> வாய்மூலமோ அல்லது எழுத்து மூலம் கேள்விகள் கேட்கப்படும் காலம் இப்போது இல்லை. நீங்கள் இப்போது உங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் வாக்கெடுப்புகள் மற்றும் கருத்துக்கணிப்புகளை அறிமுகப்படுத்தலாம் அல்லது விரைவான மற்றும் எளிமையான Google படிவத்தை நீங்கள் வடிவமைக்கலாம். இது வாடிக்கையாளர்கள் உங்களுக்கு உடனடி கருத்துக்களை வழங்க உதவுகிறது. இது தொடர்ச்சியான முன்னேற்றத்தின் சூழலை ஏற்படுத்துகின்றது.

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மேலும் புதிய கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் உலகில் நாளாந்தம் உருவாக்கப்படுகின்றன. அவை சிறு மற்றும் நடுத்தர அளவு தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக பங்களிப்பு செய்யும். நீங்கள் தொழில்முனைவோராக இருந்தால்> இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள இதுவே சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா? உங்கள் வியாபாரத்தை வளர்ப்பதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது எவ்வாறு என்பது பற்றிய மேலதிக தகவல்களுக்கு இவற்றையும் பார்வையிட முடியும்.

சிறிய நடுத்தரளவு தொழில்முனைவோருக்கு தொழில்நுட்பம் எவ்வாறு உதவும் என்பது பற்றிய மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு திரிய இணையத்தளத்தைப் பார்க்கவும்.

Exit mobile version