Diriya

பண்டிகைக்கால விற்பனை பருவத்திற்கு (Holiday Season) முதலிடம் வழங்க சில ஆலோசனைகள்

அன்பார்ந்த வாசகர்களே, வெவ்வேறு பருவங்களைக் கையாள்வதில் உங்களுக்கு உதவியாக இருக்கும் உதவிக் குறிப்புகளோடு வித்தியாசமான ஒன்றைக் கொண்டு வருவதை நாம் நினைத்திருந்தோம்.  இலங்கையில் பண்டிகைக்கால வியாபாரமானது பரிசுக் கொள்வனவு அடங்கலாக, பொருட் கொள்வனவு மற்றும் ஏனைய செலவீனங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாகக்  காணப்படுகின்றது.

உங்களுக்கு துணையாக இருக்கும் பண்டிகைக்கால குறிப்புகள் 8 இணைப் பார்வையிடுவோம்.

  1. முன்னரே திட்டமிடல்:
  2. அதிகரித்த பொருட் தேவையை கருத்திற் கொண்டு பிரபலமான பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  3. வாடிக்கையாளர்களின் வருகை, மற்றும் ஒன்லைன் வழியான விற்பனைகளை கையாள உங்கள் பணியாளர்களின் தேவைகளை மதிப்பிடுங்கள்.
  4. குறிப்பிட்ட வெகுமதிகள், கழிவுகள் மற்றும் விளம்பரங்களுடன் விரிவான Marketing Calendar ஒன்றை உருவாக்கவும்.
  1. சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குதல்:
  2. உங்கள் ஊழியர்களை நட்பாகவும், உதவிகரமாகவும், திறமையாகவும் நெறிப்படுத்தவும், அத்துடன் ஊழியர்கள் உற்சாகமாக இருப்பது வாடிக்கையாளரின் மனநிலையையும் மேம்படுத்துவதோடு அவர்களpன் கொள்வனவு ஆற்றலிலும் வாங்குவதில் அதிக விருப்பத்தினை ஏற்படுத்துகின்றது.  
  3. காத்திருப்பு நேரங்களைக் குறைக்க Check-Out செயல்முறையை நெறிப்படுத்தவும்.
  4. வாடிக்கையாளர் நம்பிக்கையை உருவாக்க தெளிவான மற்றும் Refund செயன்முறையினை வைத்திருங்கள்.
  5. வசதியான கொள்முதல் விருப்பங்களை வழங்குங்கள்:
  6. உங்கள் ஒன்லைன் விற்பனையானது வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்த இலகுவான மற்றும் பாதுகாப்பான கட்டண விருப்பமுறைகளை வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்தவும்.
  7. மேலதிக வசதிக்காக வாடிக்கையாளர்கள் ஒன்லைனில் ஓடர்களினை வழங்கி, அதனை கடைகளில் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கவும். 
  8. பிஸியான வாடிக்கையாளர்களுக்கு Curbside Pick-Up வழங்குங்கள், இது அவர்களின்  தாமதங்ககளைத் போன்றவற்றைத் தவிர்க்கிறது.

இந்த விடயங்களைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் பண்டிகைக்கால விற்பனைக்கான ஒரு சிறந்த நெறியாள்கையை உருவாக்கலாம் என்பதோடு,  ஒவ்வொரு விடுமுறைக்கு முன்னதாகவும் விடயங்களை திட்டமிட முடியும்.  அத்துடன் இதன் மூலம் ஊழியர்கள் தேவை, சந்தைப்படுத்தல் விடயங்கள், வாடிக்கையாளர்கள் தேவைகள் போன்றவற்றினை ஒவ்வொரு பண்டிகைக்கு முன்னரும் அறிந்து கொள்ள முடியும்.


>>>சிறு வியாபாரங்களில் தேர்ச்சி பெறல்: சிறு வியாபாரங்களுக்கான அடிப்படையான விற்பனை பிரசுரம் (Basic Sales Pitch)

Exit mobile version