Diriya

உங்கள் வர்த்தக நாமத்தை, சிந்தனை தலைமைத்துவமாக நிலை நிறுத்துவது எவ்வாறு?

சிந்தனை திறன்மிக்க தலைமைத்துவம் என்பது ஒரு நபர் அல்லது ஒரு வர்த்தக நாமத்தைச் சார்ந்ததாகவோ அதாவது கருதத்துக்களை அறிந்து தலைமைத்துவத்தை கொண்டு செல்லும் ஒரு தலைவராக அல்லது குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் மிக்க ஒருவரையோ மூல வளமாக பயன்படுத்தும் செயற்பாடாகும். இவர்கள் நம்பகரமான முன்னேறிச் செல்லும் ஊக்குவிப்புகளையும், யோசனைகளையும் நடைமுறைக்கு சாத்தியமாக்கும் வெற்றி பிரதிபலிப்புகளை உங்கள் வர்த்தகத்தில் சேர்க்க உதவும் ஒரு ஆதார வளமாகும். உண்மையிலேயே ஒரு வர்த்தக நாமம் சிந்தனை திறன்மிக்க தலைமைத்துவத்தை ஒரு நிறுவனத்தில் பிரதிபலிக்கின்றது என்றால் அது ஒரு சிறப்பம்சமே. சிந்தனை திறன் மிக்க வர்த்தக நாமத்தை நிலை நிறுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் பொருட்களை சந்தைப்படுத்தும்போது பொதுவாக B2B   சந்தையில் (ஒன்லைன் தளங்களில்) உங்கள் வர்த்தகத்தின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நிலை நாட்டுவது மிக முக்கியமாகும். இவ்வாறான நிலைப்பாட்டை உங்கள் வர்த்தகத்திலும் கடைபிடிக்க சில வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.

என்னதான் சிந்தனை திறன் மிக்க தலைமைத்துவ வழிமுறைகள் பின்பற்றப்பட்டாலும்,  அதன் உள்ளடக்க உருவாக்கமானது ஒரு வர்த்தகத்தின் இலக்கு வைக்கப்பட்ட குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை வர்த்தகத்தின் ஆழ்ந்த அறிவை வழங்குவதில் அடிப்படையாக அமைய வேண்டும். ஒரு பொருளை அல்லது சேவையை விற்பனை செய்வதில் கவனம் செலுத்துவதை விட இதன் உள்ளடக்கம் பற்றிய அறிவினை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு செய்கையில் அந்த உள்ளடக்கமானது உங்கள் வர்த்தக நாமத்தை பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதோடு அதன் நிலைப்பாட்டுத் தன்மையை பற்றி அவர்கள் பூரணமாக அறிந்து கொள்வார்கள்.

உங்கள் வர்த்தக நாமத்தை சிந்தனைத் திறன் மிக்க தலைமைத்துவத்துடன் நிலைநிறுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள்.

இலவச உள்ளடக்கங்களை தொடர்ச்சியாக வெளியிடுதல்

பெறுமதி மிக்க உள்ளடக்கங்களை வெளியிடுவதன் மூலம் உங்கள் வர்த்தக நாமத்தை   குறிப்பிட்ட வர்த்தகப் புலத்தில் பலப்படுத்திக் கொள்ளலாம். ஒரு சில காலகட்டங்களில் சந்தைப்படுத்தல் பெறுமதி சேர் உள்ளீடுகளின் தொடர் செயற்பாடுகளால் அதன் வாடிக்கையாளர்களை ஈர்த்திருந்தது. நீங்களும் அதே போன்று இலவசமாக அவர்களுக்கு வழங்கும் போது அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். உதாரணமாக இ-புத்தகங்கள்  போன்றவை அவர்களிடையே உங்கள் வர்த்தக நாமம் பற்றிய அறிவை அவர்களது நன்மதிப்பை பெறுவதன் மூலம் வழங்குவது. அவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்டிக் கொள்வதோடு அவர்களது மின்னஞ்;சல் பட்டியலில் எப்பொழுதும் நீங்கள் ஒன்றிணைந்து உங்கள் பொருட்களை பற்றி நினைவு கூர்ந்து கொண்டே இருக்கலாம்.

பெறுமதி சேர் சமூக வலைத்தள உள்ளடக்கங்களை வழங்குதல்:

இங்கு முதலில் சமூக வலைத்தளங்களில் செய்யக்கூடாதவை எவை என கவனிப்போம். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக உங்கள் பொருட்கள் பற்றிய லிங்க்களை இணையத்தளங்களில் வெளியிடாதீர்கள். இதனால் உங்கள் வாடிக்கையாளர்கள் மனதிற்கு தோன்றியதை வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. நீங்கள் உங்கள் தனித்தன்மையை தவிர்க்க முடியாத ஒரு மூலதனமாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்களிடமுள்ள உங்கள் வாடிக்கையாளரின் தெரிவு பற்றிய அறிவை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சிந்தனைத் தலைமைத்துவம் என்பது எமது வாடிக்கையாளர்களை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அவர்களின் விருப்ப தேர்வு பற்றிய அறிவுரைகளை வழங்கி அவர்களுக்கு உதவுங்கள். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி சிறந்த வாடிக்கையாளர் நல்லிணக்க உறவுகளை வளர்ப்பதன் மூலம் உறுதியான புலத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.

தனித்தன்மை மிக்க திருப்பங்களை உருவாக்குங்கள்:

அடுத்தவர் செய்வதையே மீண்டும் செய்வதை தவிர்த்து நம்பிக்கை மிக்க தொழில் நிபுணராக சிந்திக்க தொடங்குங்கள். ஆயிரம் வர்த்தக நாமங்களுக்குள் உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துங்கள். எனவே உங்கள் உள்ளடக்கங்களில் பெறுமதி சேர் புதிய உள்ளடக்கங்களுடனான இணைப்புகளை திருப்பங்களுடன் உருவாக்குங்கள். புதிதாகவும் தனித்துவமாகவும் எதையெல்லாம் கொடுக்க முடியும் என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள். புதிய கோணத்தில் வாடிக்கையாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முற்படுங்கள். எவ்வாறாயினும் இவ்வாறு செய்வதனால் உங்கள் வர்த்தக நாமம் மட்டும் இன்றி ஒட்டுமொத்த வர்த்தகத் துறையிலும் உங்கள் அணுகுமுறைகள் பேசப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படும்.

மூன்றாம்  தரப்பினர் பங்களிப்பை பெற்றுக்  கொள்ளுங்கள்:

உங்கள் தனித்துவம் மிக்க விசேட உள்ளடக்கங்களை வெளியிடுவதோடு அதற்கு மேல் சென்று சிந்தனை மிக்க தலைமைத்துவத்தின் கீழ் வர்த்தக நிபுணத்துவம் கொண்ட பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ளலாம். அத்தகைய நிபுணர்கள் மூலம் உங்கள் வர்த்தகத்திற்கு தனித்துவமிக்க உள்ளீடுகளைப் பெற்றுக் கொள்வதோடு ஏற்கனவே உங்கள் வர்த்தக நாமத்திலுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் சிந்தனைக்கு ஒரு புதிய தளம் அமைத்துக் கொடுப்பதோடு நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் இணைத்துக் கொண்ட  புதிய வர்த்தக நாமம், உங்கள் நம்பகத்தன்மை மற்றும் கூட்டினக்க தன்மையையும் வெளிப்படுத்தலாம்.
ஒரு வர்த்தகநாமத்தின் சிந்தனைத் தலைமைத்துவத்தை வர்த்தக உலகில் நிலைநாட்டி கொள்வது என்பது திடீரென செய்யக்கூடிய காரியம் அல்ல. இது தொடர்ந்து  நீண்டகால நிலையான செயற்பாட்டு தன்மையை கொண்டிருக்க வேண்டும். சந்தை போக்கு பற்றிய தொடர்ச்சியான அறிவையும் வாடிக்கையாளர்களின் தேவைகள் எவ்வாறு உருவாகின்றன? அவை காலத்துடன் எவ்வாறு உருமாற்றம் பெறுகின்றன என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.  உங்கள் ஆராய்ச்சியில் எத்தகைய உள்ளடக்கங்களை வழங்க வேண்டும், உங்கள் வாடிக்கையாளர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெளிவாக அறிந்து கொள்வதன் மூலம் உங்கள் சிந்தனை மிக்க தலைமைத்துவத்தின் வழிமுறைகளை தொடர்ந்து உங்கள் வாடிக்கையாளர்களை உங்கள் வர்த்தகம் மூலம் தொடர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.

Exit mobile version