Diriya

சமூக வலைதளங்களில் விற்பனை செய்வது எப்படி: தொழிலதிபர்களுக்கான ஆரம்ப வழிகாட்டி

உங்களிடம் ஒரு பிரமாதமான படைப்பு அல்லது உற்பத்தியொன்று இருந்த போதிலும், அதனை இந்த உலகம் எவ்வாறு பார்வையிட நீங்கள் என்ன செய்ய வேண்டும்? சமூக வலைதளங்கள் இலங்கையர்கள் உங்களது உற்பத்தியினையோ அல்லது படைப்பிலோ ஆர்வம் காட்ட உதவி செய்கின்றன. இதற்கான எளிமையான வழிகாட்டி கீழே தரப்படுகின்றது: 

1. உங்களுக்கான தளத்தினை தெரிவு செய்தல்:

உங்களது வியாபாரத்தினை சமூக வலைதளங்களில் எவ்வாறு விற்பனை செய்வது என்பதனை திட்டமிட முன்னர் நீங்கள் உங்களுக்கு வசதியாக கருதும் சமூக வலைளத்தினை கண்டறியுங்கள். முகநூல் (Facebook) சிறந்த சமூக வலைதளம், இன்ஸ்டாக்கிரம் (Instagram) மற்றும் முகநூல் குழுக்கள் (Facebook’s Groups) போன்றவற்றினையும் அதிகப்படியான இரசிகர்களை கருத்திற் கொண்டு திட்டமிடுங்கள்.

2. உங்களது வியாபார பக்கத்தை ஆரம்பித்தல்

பலதரப்பட்ட சமூக வலைதளங்கள் உங்களை வியாபார பக்கம் ஒன்றினை ஆரம்பம் செய்ய உதவுகின்றன. கண்களுக்கு கவர்ச்சியான, தெளிவான விபரங்கள் மற்றும் தொடர்பு தகவல்கள் கொண்டு உங்களது வியாபார பக்கத்தினை பூர்த்தி செய்யுங்கள். ஆரம்பத்தில் இருந்து விடயங்களை செய்ய Meta’s Business Suite உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். அத்துடன் இது தொழிலதிபர்களுக்கு உங்களது ஆரம்பத்தில் இருந்து அதிகப்படியான பார்வையாளர்களை சென்றடைய உதவியாகவும் காணப்படும்.  

3. சிறந்த புகைப்படங்களை பிரசுரமிடுங்கள்:

இலங்கையர்கள் அழகிய விடயங்களை விரும்புகிறார்கள்! உங்கள் தயாரிப்பின் அல்லது உற்பத்தியின் வண்ணமயமான புகைப்படங்களை வெவ்வேறு கோணங்களில் எடுக்கவும். பிரகாசமான விளக்குகள் மற்றும் தெளிவான பின்னணியைப் பயன்படுத்தவும். சிறந்த காட்சிகளிலேயே அனைத்தும் தங்கியிருக்கின்றன.

4. எளிமையான விபரங்களை உபயோகியுங்கள்:

ஆடம்பர வார்த்தைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் தயாரிப்பு என்ன,  அவற்றை மக்கள் ஏன் உபயோகம் செய்ய வேண்டும் என்பதனை மக்களிடம் சொல்லுங்கள். உங்கள் வாடிக்கையாளர்கள் இணைய சிங்களம் அல்லது தமிழ் மொழியைப் பயன்படுத்தவும்.

5. தொடர்ந்து இடுகைகளை (Regularly Post) இடவும்:

மக்கள் மனதை வசீகரமாக வைத்திருக்க கூடிய சில இடுகைகளுக்கு முயற்சி செய்யுங்கள். வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களை வைத்து விடயங்களை திட்டமிடுங்கள்.

6. எளிமையான சலுகைகளுக்கு திட்டமிடுங்கள்

விற்பனை செய்யும் போது விற்பனை கழிவுகள் மற்றும் போட்டி நிகழ்வுகளை ஒழுங்கு செய்து சுவாரசியத்தை அதிகரியுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களை அவர்களது நண்பர்களை பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தவும்.  

7. பின்னூட்டங்களுக்கு பதிலளியுங்கள்

மக்கள் பின்னூட்டங்களை இடும் போது அதிக ஆர்வத்தினைப் பெறுகின்றார்கள்! நீங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து, அவர்களின் ஆர்வத்திற்கு நன்றிகளை தெரிவியுங்கள்.

8. அனைத்தினையும் மகிழ்ச்சியாகவும், உண்மையாகவும் வைத்திருங்கள்:

உங்கள் வியாபாரத்தின் பின்னால் உள்ளவர்களைக் காட்டுங்கள். உங்கள் கதையையும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதற்கான ஆர்வத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நினைவில் கொள்ளுங்கள்: சமூக வலைதளங்களானது, உறவுகளை பேணுவதற்கான ஒரு ஊடகமாகும். நீங்கள் உதவியாக இருந்து, நட்பாக இருந்து விடயங்களை சாதியுங்கள். நீங்கள் நம்பிக்கையினையும் வாடிக்கையாளர்களினையும் கட்டியெழுப்பும் போது உங்கள் உற்பத்தி மீது வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வத்தினை காட்டுவதனை கண்டு கொள்ள முடியும்.

மேலதிக குறிப்பு

நீங்கள் இலங்கையின் வெற்றி பெற்ற ஏனைய வியாபாரங்கள் சமூக வலைதளங்களில் எவ்வாறு விடயங்களை செய்கின்றன என்பதனை கவனியுங்கள். அவர்களின் வியூகங்களில் இருந்து அனுபவம் பெற்று விடயங்களை மாற்றியமையுங்கள்.

சமூக வலைதளங்கள் மிகவும் சிக்கல் தன்மை கொண்டவை என்ற போதிலும், அவை வினைத்திறன் கொண்டதாக அமைய முடியும். சரியான முறையில் வாடிக்கையாளர்களுடன் இணைந்து, சமூக வலைதளங்களில் விற்பனை செய்யும் தேர்ச்சிமிக்க வியாபாரியாக மாறுங்கள்.

திரிய குழுவிடமிருந்து உங்களுக்கு வாழ்த்துகள்!


Exit mobile version