Diriya

இலங்கையில் உங்கள் சிறு மற்றும் நடுத்தர வியாபார முயற்சியினை (SME) ஆரம்பித்தல் : படிமுறை வழிகாட்டி

உங்கள் வியாபாரத்தினை ஆரம்பிக்க விரும்பும் நீங்கள் அதனை எவ்வாறு தொடங்க வேண்டும் என்பது தெரியாமல் இருக்கின்றீர்களா? இலங்கையில் உங்கள் சிறு அல்லது நடுத்தர வியாபார பயணத்தினை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப படிகள் குறித்த தகவல்கள் உங்களுக்காக:

  1. சிறந்த ஆரம்பம்

வியாபார வங்கி கணக்கு: அதிகாரப்பூர்வமான நிதி பரிவர்த்தனைகளுக்கு ஒரு பிரத்தியேக வங்கிக் கணக்கைத் திறக்கவும்.

அனுமதிகள் மற்றும் உரிமங்கள்: உங்கள் தொழில்துறைக்கு குறிப்பிட்ட அனுமதிகள் அல்லது உரிமங்களை பெறவும் (உதாரணம் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல்).

வரிப் பதிவு: வியாபார வரிகளுக்கு பதிவு செய்து உங்கள் வரி விடயங்கள் தொடர்பில் அறிந்து கொள்ளுங்கள்

அரசாங்கத் நிகழ்ச்சித் திட்டங்கள்: SME களுக்கான மானியங்கள், கடன்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்களை ஆராயுங்கள்.

வியாபார விருத்திச் சேவைகள்: அரசாங்க நிறுவனங்கள் பெரும்பாலும் சந்தைப்படுத்தல், நிதி மற்றும் மனித வளங்கள் போன்ற பகுதிகளில் வழிகாட்டுதலை வழங்குகின்றன, சம்பந்தப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடவும்.

செலவு வினைத்திறனுடன் கூடிய தீர்வுகள்: செயற்பாடுகளை சீராக்க கணக்கியல்,  (சமூக ஊடக) சந்தைப்படுத்தல்  மற்றும் வாடிக்கையாளர் உறவு முகாமை (CRM) போன்றவைக்கான மலிவான கருவிகளை ஆராயுங்கள்.

ன்லைன் இருப்பு: நீங்கள் ஒரு உள்ளூர் வியாபாரமாக இருந்த போதிலும், உங்கள் இருப்பு நிலையினை அதிகரிக்க ஒரு அடிப்படை வலைத்தளம் மற்றும் சமூக ஊடக கணக்குகளை உருவாக்கவும்

இலங்கையின் SME களுக்கான மேலதிக ஆலோசனைகள்:

தகவல் மூலங்கள்:


Exit mobile version