Diriya

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஒழுங்குமுறை நடைமுறைகள்  

Working From Home Integrity

கொவிட்-19 தொற்றுநோய்த் தாக்கம் மற்றும் தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நிலவுகின்ற நெருக்கடி நிலையில் ஊழியர்கள் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ மற்றும் வாரத்தில் சில நாட்கள் கலப்பு முறையில் பணியாற்றுவதற்கு மிக வேகமாக பழகி வருகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை புரியும் போது அவர்களிடம் துல்லியம் காணப்படுவதுடன் தமது தொழிலை உரிய முறையில் செய்வது மிக முக்கியமாகும். இதை எளிதாக்குவதற்கான சில வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.

வெளிப்படைத்தன்மையாக நடந்து கொள்ளுங்கள்

தொழில் செய்யும் இடத்தில் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானதுடன் அது அனைவருக்கும் நன்மை பயக்கும் விடயமாகும். பல்வேறு ஆராய்ச்சிகள் மூலமும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இதன் நன்மைகள் எவ்வாறு தொழில் வளர்ச்சிக்கு உதவுகின்றது என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் உதவியுடன் வீட்டில் இருந்து வேலை செய்வது இலாபகரமான விடயமாகும். எனினும் இதில் வெளிப்படைத் தன்மை என்பது மிகவும் கடினமான விடயமாக மாறியுள்ளதுடன் அது கேள்விக்குறியாகியும் உள்ளது. பணியாளர்களின் செயற்திறன் மற்றும் உற்பத்தியில் அவர்களது பங்களிப்பை நேரடியாக கண்காணிக்க முடியாது. இருந்தபோதிலும் இதனை நிவர்த்தி செய்ய, பணியாளர்களின் பணி செயற்பாடுகளை பின்தொடர்ந்து கண்காணிப்பதற்காக இன்று பல்வேறு தொழில்நுட்ப மென்பொருள் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஏற்ப முழு நிறுவனத்திற்கும் தேவையான தரவுச் சேவையின் அளவை தேவைக்கேற்ப தெரிவு செய்யும் வசதிகள் உள்ளன. உங்கள் பணியிட கலாச்சாரத்தில் உற்பத்தித்திறன், தகவல் தொடர்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கையில், ஒருமைப்பாடு உயர்வாக பேணப்படும்.

சிறந்த தகவல் தொடர்பாடல் பரிமாற்றத்தை வழமையாக்குங்கள்

உங்கள் குழுவினருடன் எப்போதும் நெருங்கிய தொடர்புகளை பேணுங்கள். பணியாளர்கள் எப்போதும் உங்களை பின்தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற நிலை தோன்றினால் அது அவர்களுக்கு மன அழுத்தத்தையும், தேவையற்ற கவலையையும் கொடுக்கும். எனவே நீங்கள் உங்கள் பணியாளர்கள் திட்டங்களை அவர்களாக கேட்டு அறியும் வரை காத்திருக்காதீர்கள். முன்கூட்டியே அவர்களுக்கு வழங்க வேண்டிய தகவல்களையும் தரவுகளையும் தெரியப்படுத்துவதோடு குறிப்பிட்ட கால வரையறைக்குள் செயல்படுவதற்கு தேவையான முன் முயற்சி, மற்றும் சாத்தியமான தடைகளுக்கான காரணிகளையும் அவர்களுக்கு தெளிவாக குறிப்பிடுங்கள். தகவல்களை வழங்கும்போது உங்கள் குழுவில் விருப்புகள் அறிந்து அவர்கள் நாள்தோறும், வாராந்தம் மற்றும் வேறு வகையான முறையில் தகவல்களை பெற விரும்புகிறார்களா என்பது பற்றி உங்கள் குழுவுடன் கலந்தாலோசியுங்கள். உங்கள் குழு கலந்துரையாடல்களுக்கு தேவையான அடித்தளத்தை ஏற்படுத்துங்கள். இத்தகைய செயற்பாடுகள் அதிகம் என நினைத்தாலும் அதனால் ஏற்படக்கூடிய பலன்களும் அதிகமாக இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

புதிய ஊழியர்களிடையே உங்கள் பணியிட மதிப்பை உணர்த்துங்கள்

புதிய ஊழியர்கள் அங்கு வேலை செய்யும் மற்ற ஊழியர்களுடன் தங்களது திறனை நிலைநாட்ட முற்பட்டு முரண்டுபவதானது, அவர்களது ஆளுமை மற்றும் திறனை பாதிக்கக்கூடிய காரணிகளாகும். இந்த செயற்பாடானது, அலுவலகத்தில் பணியாற்றுவது போலவே வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும். சிறந்த ஊழியர்களை இனம் காணுவதை விடுத்து பிரிந்து பணியாற்றும் கலாச்சாரத்தை பணியிடத்தில் திணிப்பது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழல் பணியிடத்தில் உருவாகுமாயின் இது மிகப்பெரிய ஆபத்துகுரிய எதிர்மறை விளைவை தரக்கூடும் என்பதுடன் பணியிட வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நீங்கள் புதிதாக நபர்களை பணியமர்த்தும்போது, அவர்கள் ஏற்கனவே உள்ள உங்கள் குழுவிற்கும், உங்கள் பணியிடத்தில் தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கும் கலாச்சாரப் பொருத்தம் உடையவர்களாக இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இத்தகைய செயற்பாடுகள் உங்கள் குழுவின் வளர்ச்சி மற்றும் செயல்திறன் சிறப்பாக அமையவும் எதிர்மறையான பாதிப்புகளை தவிர்க்கவும் உதவியாக அமையும்.

உங்கள் குழு உறுப்பினர்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருப்பதை உறுதிப்படுத்துங்கள்

வீட்டில் இருந்து வேலை செய்யும் செயற்திட்டமானது. அதன் குழு உறுப்பினர்கள் இடையே நேரடித் தொடர்புகளை தவிர்த்து குழு உறுப்பினர்கள் தனித்து செயற்படுவதற்கு வழிவகுப்பதோடு பணியாளர்களிடையே குழுவின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது. எனினும் நவீன தொழில்நுட்பம் இதனை தகர்த்தெறிந்துள்ளது. தூரம் மற்றும் நேரத்தால் துண்டிக்கப்பட்டுள்ள தொடர்புகளை குழுவாக இணைந்து செயற்படுத்தல் மற்றும் ஒற்றுமை உணர்வை உருவாக்கும் அறிமுகங்கள், சந்திப்புகள் மற்றும் உரையாடல்களுக்கு வழிவகுக்கின்றது. இத்தகைய மெய்நிகர் சம்பாஷனைகள் பணியிடத்தில் அதிக செயல்திறன் மற்றும் குழு ஒருமைப்பாடு போன்றவற்றிற்கு அடித்தளம் இடுகிறது.

இத்தகைய வழி முறைகள் மூலம் வீட்டில் இருந்து உங்கள் பணியாளர்கள் வேலை செய்தாலும் பணியிட ஒருமைப்பாட்டை உறுதி செய்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகின்றது.

Exit mobile version