Diriya

சிறு வியாபாரங்களில் தேர்ச்சி பெறல்: சிறு வியாபாரங்களுக்கான அடிப்படையான விற்பனை பிரசுரம் (Basic Sales Pitch)

வியாபார போட்டி நிலவும் இந்த உலகில், குறிப்பாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs), தங்களது வியாபாரம் தொடர்பில் ஒரு நல்ல ஆரம்ப தோற்றத்தை (First Impression) ஏற்படுத்துவது அவசியமாக காணப்படுகின்றது.  சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விற்பனை பிரசுரமானது ஒரு புதிய வாடிக்கையாளரை பெறுவதற்கும், பெறுமதியான வாய்ப்பொன்றை இழப்பதற்கும் உள்ள வித்தியாசமாக மாற முடியும்.

ஆனால் வெற்றிகரமான வியாபார பிரசுரம் ஒன்றை உருவாக்க நீங்கள்  ஒரு பிறவி வியாபாரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வியாபாரத்திற்கான ஒரு அடிப்படை விற்பனை பிரசுரத்தை வடிவமைப்பதற்கான வழிகாட்டி இங்கே தரப்பட்டுள்ளது:

  1. உங்கள் இலக்கு பார்வையாளர்களை (Target Audience) அறிந்து கொள்ளுங்கள்: நீங்கள் (வியாபாரம் பற்றி) பேசுவதற்கு முன்னர், நீங்கள் இலக்கு பார்வையாளர்களைப் புரிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள். அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் என்ன? அவர்கள் எதை அடைய நினைக்கிறார்கள்? அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் விற்பனைப் பிரசுரத்தை வடிவமைப்பதன் மூலம், நீங்கள் அவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களின் வியாபாரத்தை புரிந்துகொள்வதை கண்டு கொள்ளலாம்.

4. சுருக்கம் மற்றும் தெளிவு (Short and Sweet): உங்கள் பார்வையாளர்களின் நேரத்திற்கு மதிப்பு வழங்கவும். 30 வினாடிகள் முதல் 2 நிமிடங்கள் வரை பிரசுரத்தை வடிவமைப்பதனை நோக்கமாகக் கொள்ளுங்கள். முக்கிய விடயங்களில் கவனம் செலுத்துங்கள், தேவையற்ற விடயங்களை தவிர்த்திடுங்கள்.

5. சமூக ஆதாரம் சக்திமிக்கது (Social Proof is Powerful):  மக்கள் பரிந்துரைகளை நம்புகிறார்கள். திருப்திகரமான வாடிக்கையாளர்களிடமிருந்து சான்றுகள் அல்லது உங்கள் வெற்றியை வெளிப்படுத்தும் கூற்றுக்கள் இருந்தால்,  அவற்றை உங்கள் விற்பனை பிரசுரத்தில் சேர்க்க முடியும். சமூக ஆதாரம் நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் உருவாக்குகிறது.

6. செயற்பாட்டுக்கான அழைப்பு (Call to Action): செயற்பாடு ஒன்றில் வாடிக்கையாளரினை ஈடுபடுத்தும் தெளிவான அழைப்புடன் உங்கள் விற்பனை பிரசுரத்தினை நிறைவு செய்யவும்.  வாடிக்கையாளராக மாற சாத்தியமிக்க ஒருவர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? அதற்கான விடயங்களை திட்டமிடுங்கள், அவரிடம் மதிப்பிட்டு தொகையை கோருங்கள். அல்லது உங்களது இணையதளத்தினை பார்வையிட  அழைப்பை வழங்குங்கள். அவர்கள் அடுத்ததாக வைக்கவிருக்கும் அடியை எளிதாக்குங்கள்.  

மேலதிக குறிப்பு : பயிற்சி உங்களை வல்லுனராக்கும்! (Practice Makes Perfect!)

ஒரு நண்பர் அல்லது சக ஊழியருக்கு முன்னால் உங்கள் வியாபார பிரசுரத்தினை ஒத்திகை பாருங்கள். இது உங்கள் பேச்சைச் செம்மைப்படுத்தவும், நம்பிக்கையை வளர்க்கவும், நேர வரம்பிற்குள் நீங்கள் இருப்பதனை உறுதிசெய்ய உதவும்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் வியாபாரத்திற்கு (SME) மதிப்பை வழங்குகின்ற ஒரு அடிப்படை விற்பனை பிரசுரத்தினை நீங்கள் வடிவமைக்கலாம். நினைவில் கொள்ளுங்கள், ஒரு வெற்றிகரமான வியாபார பிரசுரமானது பிரச்சாரம் மட்டுமின்றி உரையாடலுடன் தொடர்புபட்டது என்பதனையும் நினைவில் வைத்திருங்கள். உற்சாகமாக இருந்து, உங்கள் இலக்கு பார்வையளார்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் விடயங்களை திட்டமிடுங்கள். சிறந்த தயார்படுத்தல், மற்றும் பயிற்சிகளோடு சாத்தியமான வாடிக்கையாளர்களை விசுவாசமான வாடிக்கையாளர்களாக மாற்றுவதற்கான வழியில் நீங்கள் சிறப்பாக இருக்க முடியும்.


Exit mobile version