Diriya

பொருளாதாரக்கொந்தளிப்பு என்பதிலிருந்து விடுபட மனதை தயார்படுத்தும் வழிமுறைகள்

Mindset Hacks

நாட்டின் நிலைமை உண்மையில் எம் அனைவருக்கும் பொருளாதாரக்கொந்தளிப்பு எனும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் எவ்வித வேறுபாடின்றி நாம் அனைவரும் கவலைப்படுகின்ற நிலையை அது தோற்றுவித்துள்ளது. எனவே இந்நிலையை நாம் கடந்து செல்ல உதவும் மனோதிடத்தை வளர்த்துக்கொள்வது மிக முக்கியமாகும். அதற்கு உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன.

பொருளாதாரக்கொந்தளிப்பு என்பதில் எதிர்பார்ப்புகளை உரிய முறையில் மாற்றிக்கொள்ளுங்கள். எப்போதும் கேள்வி கேளுங்கள்.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமானது> உங்கள் குழுவிடமிருந்து கருத்துக்களை பெறுவதற்கும் கொடுப்பதற்கும் எண்ணங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை செய்வதற்கு சிறந்த சந்தர்ப்பமாகும். நீங்கள் குழுவின் தலைராயின்> ‘என்னுடைய நிலையில் நீங்கள் இருந்தால் என்ன மூன்று விஷயங்களை மாற்ற முயற்சிப்பீர்கள்?’ என்று உங்கள் குழுவினரிடம் கேளுங்கள். ஆக்கப்பூர்வமான கருத்து மிக்க பின்னூட்டல்கள் சக மனிதர்களின் கருத்தை உங்களால் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கை எளிதாக்கும்.

பொருளாதாரக்கொந்தளிப்பு என்பதில் பொறுமை காப்பது நல்லது

வளர்ச்சி மனப்பான்மையின் நன்மைகளைப் பற்றி பேசுவது நன்றாக இருந்தாலும்> ஒரு புதிய நடைமுறையைக் கற்றுக்கொள்வது சவாலானதுடன் உடனடியாக குறிப்பிடத்தக்க அளவுகோல் மாற்றமும் ஏற்பாடவிட்டால் நாம் மன உறுதியை இழக்கக்கூடும். இந்நேரத்தின் நீங்கள் மற்றவர்களுடன் இணைந்து நெகிழ்வுத்தன்மையை பின்பற்று:வது மிக முக்கியம். உடனடியாக பதில் கிடைப்பதை விட> எடுக்கும் முயற்சி மற்றும் அந்த முயற்சியால் நீங்கள் பயிலும் விடயங்களில் உள்ள முக்கியமான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள்.

இதிலுள்ள மனோதத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்

சிறந்த உற்பத்தித்திறனுக்கு நமது மனப்பாங்கு மிக முக்கியமாகும். இத்தகைய மனப்பாங்கு நமது பொருளாதாரத்தின் செயல்திறனுடன் இணைகின்றது. உளவியலாளர்களால்> தொழிலாளர்களின் பணி ஈடுபாடு மற்றும் தொழில் செயற்திறன் ஆகியவற்றின் முக்கிய ஊக்குவிப்பாக மனநிலையின் அளவையை அடையாளம் காண்கின்றனர். மனநிலை என்பது எமது செயற்திறன் மீது நாம் காட்டும் கவனமாகும். நாம் கவலையாக இருக்கும்போது எமது கவனம் வேறு திசையில் பயணிக்கும். எவரேனும் தற்போதைய பொருளாதார கட்டமைப்பு தொடர்பாக சிந்திக்கும்போது அவர்கள் குறைந்த செயற்திறன் கொண்டவர்களாக மாறுகின்றனர். அவர்களால் குறைவான உற்பத்தியே மேற்கொள்ளப்படும்.

நேர்மறையான தன்மை தொடர்பாக கவனம் செலுத்துங்கள்.

நீங்கள் படிக்கும் மற்றும் கேட்கும் அனைத்தையும் பற்றி சிந்திக்காதீர்கள். ஒருவேளை அது உங்களுக்கு தோன்றும் அளவுக்கு மோசமானதாக இருக்காது. உங்கள் மனதை நேர்மறையான மனநிலைக்குக் கொண்டு வருவதை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் ஊழியர்களுடனான கூட்டங்களின்போது அவர்களுக்கு அதனை உணர்த்துங்கள். நாளாந்தம் செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்துங்கள். அன்றைய தினம் திட்டமிடப்பட்ட பல பணிகளை நீங்கள் நிறைவேற்றினால், நீங்கள் திருப்தியாகவும் நேர்மறையாகவும் உணருவீர்கள். இதை உங்கள் குழுவிற்கு கற்றுக்கொடுங்கள்.

இது எளிதான காரியம் என நாம் உங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் எல்லாவற்றையும் போலவே> பொருளாதார நெருக்கடியும் உச்சக்கட்டத்தை அடைந்து பின்னர் படிப்படியாக குறையும். நாம் இன்னும் இந்த நெருக்கடியின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் எல்லாம் இருளாகவே தெரிகிறது. ஆனால் நாம் இப்போது நம்பிக்கையை இழந்துவிட்டால்> நிச்சயமாக நாளைய எமது எதிர்பார்ப்பை இழந்துவிடுவோம்.

பொருளாதாரக்கொந்தளிப்பு நிலையில் மனதை தயார்ப்படுத்திக் கொள்வது பற்றிய மேலதிக தகவல்களை திரிய இணையத்தளத்தில் பார்க்கவும்.

Exit mobile version