● வர்த்தக நாம பொதியிடல் ஏன் முக்கியமானது?
● உங்கள் வர்த்தக நாமத்திற்கான தரம் மற்றும் அதன் பலன்களைத் தேர்ந்தெடுப்பது
● மறுபயன்பாடு இப்போது ஏன் கவர்ச்சிகரமாக உள்ளது?
● பொதியிடல் அற்ற நிலைக்கு பின்னாலுள்ள கோட்பாடு
தயாரிப்பு பொதியிடல் என்பது கார்ட்போர்ட் மற்றும் டேப் இற்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். தரம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பொதியிடலானது, உங்கள் நிறுவனம் தனது நெருங்கிய போட்டியாளர்களிடமிருந்து தனித்து நின்று வர்த்தக நாம விழிப்புணர்வை அதிகரிக்க உதவும் என்று கூறலாம். உங்களிடம் காணப்படுகின்ற படைப்பாற்றலைப் பயன்படுத்தி, தனிப்பயன் பெட்டி அல்லது பை பயன்படுத்தி தனித்துவமான லேபள் வர்ணங்கள் வரை உங்கள் வர்த்தக நாம விழிப்புணர்வு இலக்குகளை அடைய உதவும். உண்மையில், உங்கள் பொதியிடலானது உங்கள் தயாரிப்பு மற்றும் வர்த்தக நாமத்திற்கான சிறு பிரச்சாரமாக விளங்குகின்றது. வாடிக்கையாளர் நடத்தை மற்றும் உளவியல் அடிப்படையின்படி ஒரு பொருளின் பொதியிடல் வடிவமைப்பானது பெரும்பாலும் கொள்முதல் முடிவுகளை பாதிக்கும் என்பது முக்கியமானது. ஆனால் உங்கள் பொதியிடல் சரியான தோற்றத்தை வழங்குகின்றது என்பதை உறுதிப்படுத்துவது எவ்வாறு என நாம் பார்ப்போம்.
உங்கள் பொதியிடலை உங்களது மிகப் பெரிய வர்த்தக தூதுவராக மாற்றிக் கொள்வது எவ்வாறு என்பதை பார்ப்போம்.
தரத்தை தேர்வு செய்யுங்கள்
உங்கள் தயாரிப்புகளின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை காரணமாக, உங்களது வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகளை விரும்புவார்கள் மற்றும் மீளவும் கொள்வனவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் விலை குறைந்த பொதியிடலால் வாடிக்கையாளர் தவறான எண்ணத்தை பெறுவாராயின், உங்கள் பொதியிடலுக்கு நீங்கள் பயன்படுத்தும் பொருளின் தரம் தொடர்பாக கவனம் செலுத்துவது அவசியமாகும். முதல் ஈர்ப்பு மிக முக்கியமானது என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். அத்துடன் மோசமான முதலாவது அபிப்பிராயத்தால் ஏற்படக்கூடிய தீங்கினை மீள சரி செய்வதும் மிக கடினமானது. வியாபாரத்தை பொறுத்தமட்டில் முதலாவது தோற்றத்திற்கு கிடைக்கும் சக்தி பெறுமதியானது. எனவே புத்தாக்கம் மற்றும் உங்கள் போட்டியாளர்களிடமிருந்து உங்களை தனியே வேறுபடுத்திக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் வர்த்தக நாமம் எப்போதும் தரத்திற்கு முன்னுரிமை அளிப்பதையே தலையாக கடமையாக கொண்டுள்ளது என்பதை வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டும் வகையில் தரத்தை தேர்வு செய்யுங்கள்.
மீளப்பயன்படுத்துவது என்பது எக்காலத்திற்கும் பொருந்தும்
பொதியிடல் என்பது ஒரு தடவைக்கான செலவு என்ற அனுபவ எண்ணத்தை உங்களுக்கு தரலாம். இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு தயாரிப்பை தேர்ந்தெடுக்க உதவுகின்றதுடன் அதனை மறக்க முடியாததாகவும் மாற்றுகின்றது. ஆனால் உற்பத்தியானது திறக்கப்பட்ட பின்னர் அது அதன் நோக்கத்தை நிறைவேற்றிவிடும். ஆனாலும் உங்கள் பொதியிடல் இன்னும் அதிகமாக எதையாவது வழங்க முடியுமா? உங்கள் பொதியிடலை மீளவும் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுவது சுற்றாடலுக்கு உதவுகின்றது. வர்த்தக நாம அங்கீகாரத்தை அதிகரிக்கின்றதுடன் உங்கள் நேரடி வாடிக்கையாளர்களுக்கு அப்பாற்பட்ட மக்களுக்கான விளம்பரமாகவும் அது காணப்படுகின்றது. உங்கள் பொதியிடலானது அழகான ஆபரணங்கள் மற்றும் பூந்தொட்டிகளாக மாற்றக்கூடிய கவர்ச்சிகரமான பொதியிடல் அனுபவத்தை உங்கள் வாடிக்கையாளர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. உங்கள் வர்த்தக நாமத்தில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டால், ஒவ்வொரு முறையும் நீங்கள் மீண்டும் பயன்படுத்திய பொதியிடல் சமூக ஊடகங்களில் பகிரப்படும்போது அல்லது வாடிக்கையாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவற்றை பார்க்கும்போது உங்கள் வர்த்தக நாமத்திற்ககு ஒவ்வொரு தடவையும் இலவச விளம்பரம் கிடைக்கும் என்;பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதனை அனுபவமாக்குங்கள்
ஓர் அனுபவத்தை உருவாக்குவது உங்கள் வர்த்தக நாம அங்கீகாரத்திற்கு பெரிய மேம்படுத்தலைத் தரும். இ-கொமர்ஸ் வர்த்தக நாமங்களுக்கு இது மிக முக்கியமானது என கூறலாம். அங்கே உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் பொதியிடலை திறக்கும் வரை அதனை பார்வையிட மாட்டார்கள். உங்கள் தயாரிப்பினை பெருமையுடன் வெளிப்படுத்த தனிப்பயனை உட்புகுத்துங்கள். அல்லது எதிர்பாராத வர்ணத்தைப் பெறுவதற்கு கண்களைக் கவரும் வர்ணத்தை பயன்படுத்துங்கள். உங்கள் உற்பத்தியை பொதியிடலிருந்து வெளியே எடுக்கும்போது வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்து, அதனை சமூகத்தில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இது தான் பொதியிடலற்ற நிலைமைக்கு பின்னாலுள்ள மிகப் பெரிய கோட்பாடாகும். இது தற்போது உண்மையிலேயே உலகளாவிய நிகழ்வாக மாறியுள்ளதுடன் தற்போது வரை தொடர்ந்து வெற்றி பெற்றும் வருகின்றது. முதன்முறையாக ஒரு உற்பத்தியை திறக்கும்போது மக்கள் உற்சாகத்தையும், சிறப்பையும் உணர விரும்புகிறார்கள். உங்கள் உற்பத்தி பொதியிடல் மூலம் அந்த உணர்ச்சிகரமான அனுபவத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கண்டுபிடிப்பது உங்கள் பணியாகும்.
உங்கள் வியாபாரத்திற்கு நன்மை பயக்கும் உற்பத்தி பொதியிடல் பற்றி மேலதிக யோசனைகள் உங்களிடம் உள்ளதா? அவற்றை எம்முடன் பகிருங்கள். உங்களிடமிருந்து அறிந்து கொள்வதற்கு நாமும் தயாராக உள்ளோம்.