Diriya

வெள்ளப்பெருக்கினை எதிர்கொள்ள உங்கள் வணிகத்தை தயார்படுத்துதல்

வணிகங்கள் பெரும்பாலும் பெருமழை மற்றும் வெள்ளப்பெருக்கு தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றன, இது பெரும்பாலும் சொத்து சேதம் மற்றும் வழக்கமான வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்படும் இடையூறுகள் மூலம் கணிசமான இழப்புகளை ஏற்படுத்துகிறது. வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பித்து மீள்வதற்கு நீங்கள் எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறீர்கள்?

பேரிடரை முகாமைத்துவம் செய்வதை தயார்படுத்தல், தணிவிப்பு, பேரிடர் அபாயத்தைக் குறைத்தல், திறன் மேம்பாடு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து உதவுவதை இலக்காகக் கொண்ட ஒரு அமைப்பான (A-PAD உடன் இணைந்த) Asia Pacific Alliance for Disaster Management Sri Lanka (A-PAD SL) தயாரித்த உள்ளடக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது.

வெள்ள அபாயங்களை எதிர்கொள்வது மூன்று படிநிலைகளில் செய்யப்படலாம். முதலாவதாக, வெள்ளம் ஏற்படும் முன் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். பின்னர், நாம் ஒரு வெள்ளப்பெருக்கு சூழ்நிலையை எதிர்கொண்டால், சேதம் இல்லாமல் அல்லாமல் முடிந்தளவு குறைவான சேதத்துடன் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இறுதியாக, சேதங்கள் ஏற்பட்டால், வெள்ளத்திற்குப் பிறகு அதிலிருந்து மீள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றைக் கீழேயுள்ளவாறு சுருக்கமாகக் கூறலாம்.

பட உதவி: A-Pad SL

பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, வணிகங்கள் மற்றும் நிறுவன வளாகங்களுக்கு இன்னும் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படலாம்.

பட உதவி: A-Pad SL

வெள்ளத்திலிருந்து மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து இப்போது நீங்கள் அடிப்படைப் புரிதலைப் பெற்றிருக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள கையேட்டைப் பார்க்கவும், குறிப்பாக உங்கள் வணிகச் செயல்பாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதியில் நடந்தால், நீங்கள் இன்னும் கூடுதலாக அதிலிருந்து மீள்வதற்கு உதவும்.

Exit mobile version