Diriya

நீங்கள் ஒரு தொழில்முனைவோர் என்பதற்கான அறிகுறிகள்

எப்போதும் எதையாவது புதிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்  

● 9 மணி முதல் 5 மணி வரை மட்டும் செயற்படும் எண்ணம் இருக்காது  

● கட்டுப்பாட்டில் இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள்

● எதற்கும் பதில் இல்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதவர்கள்  

 இந்த நாட்களில் தொழில்சார் தலைப்புகளில் மிகவும் கவர்ச்சிரமான தலைப்புகளில் ஒன்றாக தொழில்முனைவு காணப்படுகின்றது. ஆனால் அதனை மிகவும் வசீகரமாக்குவது எது? நீங்களே உங்கள் சொந்த முதலாளியாக இருப்பதன் ஊடாக உங்களை மிகவும் கவர்ந்த விஷயம் என்ன? மற்றும் நீங்கள் ஒரு தொழில்முனைவோராக இருக்கின்றீர்கள் என நீங்கள் கருதுகின்றீர்களா? நீங்கள் அப்படிப்பட்டவர் என்ற நினைப்பு உங்களுக்கு இருக்கலாம். ஆனால் அது உறுதியாக உங்களுக்கு தெரியாவிடின், உங்களுக்கான சில அறிகுறிகள் கீழே தரப்பட்டுள்ளன.  

 எப்போதும் புதிய இலக்கை அடைவதே உங்கள் நோக்கம்  

‘இது போதும் என்ற அளவு” திருப்தியை நீங்கள் அடையாத அமைதியற்ற மனப்பான்மையானது உங்களுக்கு தொடருமாயின் நீங்கள் ஒரு சிறந்த தொழில்முனைவோராக இருப்பதற்கான   அறிகுறியாகும். வியாபாரத்தின் உரிமையாளர் என்பது உங்கள் வெற்றியை தொடர்ச்சியாக பேணுதல் மற்றும் பணிகளை உங்களுக்கு சார்பான சொகுசான இடத்தில் முன்னெடுப்பது மட்டுமல்ல. நீங்கள் சாதிக்க வேண்டு;ம் என்ற ஆசை கொண்டிருந்தால், எப்போதும் அந்த தாகம் உங்களிடம் இருப்பதாக தோன்றினால், தொழில்முனைவோர் என்பது உங்களுக்கானது.  

9 மணி முதல் 5 மணி வரை மட்டும் செயற்பாடதீர்கள்  

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை என்ற பாரம்பரியத்தில் தவறில்லை. எவ்வாறாயினும், உங்களுக்கு ஏதாவது சொந்தமாக செய்ய வேண்டி இருந்தாலோ, உங்கள் நேரத்தையும் பன்முகத் திறனையும் வெளிப்படுத்த தேவையிருப்பின், நீங்கள் ஒரு தொழில்முனைவோராக இருப்பதற்கான நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன. 9 மணி முதல் 5 மணி வரை பணியாற்றுவதால்   மாதாந்தம் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்திற்கு நீங்கள் மட்டுப்படலாம். அதேவேளை ஒரு தொழில்முனைவேராக இருந்தால், நிதி ரீதியாகவோ அல்லது வளர்ச்சியின் அடிப்படையிலோ அத்தகைய உச்சகட்ட எல்லைகள் கிடையாது. இந்த எண்ணமானது உங்களை தொடர்ந்தும் கவர்ந்திழுக்குமாயின், நீங்கள் அதற்காக ஏதாவது செய்ய விரும்புகின்றீர்களா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.  

நீங்கள் கட்டுப்பாட்டில் இருத்தல் அவசியம்  

கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது எப்போதும் நேர்மறயான பண்பல்ல. ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும்; தமது வெற்றி இலக்கை அடைவதற்கு ஒரு குழுவினர் தேவை. நீங்கள் பொறுப்பிலிருந்து, உங்கள் இலக்குகளை மற்றவர்கள் உதவியுடன் அடைந்தால், நீங்கள் ஒரு நல்ல தொழில்முனைவோராக முடியும். அதுதவிர மறுபுறம் நீங்கள் உங்கள் சொந்த முதலாளியாக இருப்பதால், நீங்களே உங்களை பிரதிநிதித்துவம் செய்ய முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இருந்தாலும் எவராலும் தமது வியாபாரத்தின் அனைத்து பகுதிகளையும் தனித்து நடத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  

இல்லைஎன்ற பதிலை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரில்லை  

பல தொழில்முனைவோர், இல்லை என்ற பதிலை ஏற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். மாறாக மற்றவர்களின் தோல்வியை, தமக்கு வாழ்க்கை கொடுத்திருக்கும் ஒரு வாய்ப்பாக அவர்கள் நோக்குகின்றனர். இந்த மனநிலையானது ஒரு தொழில்முனைவோருக்கு மிக முக்கியமானது, ஏனெனில் விடயங்கள் கடினமாக இருக்கும்போது முன்னேறிச் செல்ல இது உங்களுக்கு உதவுகிறது.  முழு உலகமும் இல்லை என சொன்னாலும், நீங்கள் உங்கள் எண்ணத்தின் மீது நம்பிக்கை வைத்து உங்களால் முடிந்தவரை அதனை முயற்சி செய்வீர்கள்.  
நீங்கள் ஒரு தொழில்முனைவோராக உருவாவதற்காக அறிகுறிகளின் பட்டியல் நீண்டு செல்கின்றது.  ஆனால் நீங்கள் அந்த இலக்கை அடைவதற்கான சில முக்கியமான அடையாளங்களே இவையாகும். எனவே உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு தொழிலதிபராக இருக்க முடியுமா?


Exit mobile version