Diriya

தலைமைத்துவம் – தவறுகள் மற்றும் செய்யத் தகாதவை

தலைமைத்துவம் பற்றியும்> ஒரு உந்துதல் அளித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியான தலைவராக
மாறுவது பற்றியும் நிறைய தகவல்கள் உள்ளன. ஆயினும்> தலைமைத்துவம் இலகுவானதல்ல. சில
சமயங்களில்> சிறந்த ஆளுமைமிக்க தலைவர்கள் கூட பல ஆண்டுகள் செயற்பட்டு பெறுகின்ற
அனுபவத்திலேயே திறமையான நிலையைப் பெறுகிறார்கள். தலைவர்கள் தற்செயலாக செய்யக்கூடிய பல
பொதுவான தவறுகள் உள்ளன. அவை பணி செயல்முறைகளை சிதைத்துவிடும். அவற்றை நீங்கள்
எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

மக்களுடன் இணைந்து பழக நேரம் ஒதுக்காமை

மக்களுடன் பிணைப்பு கொள்ள ஆர்வம் காட்டாத ஒரு தலைவர் நிச்சயமாக மோசமான நிலைமைக்கு
ஆளாவார். ஒருவருடனான பிணைப்பை ஏற்படுத்த நீங்கள் அவர்களை விரும்ப வேண்டும் என்று
அவசியமில்லை. நீங்கள் எவரையும் அறிமுகமானவராக அல்லது சக ஊழியராகக் கருதலாம். ஆனால்
அவர்களுடன் பணியிடத்தில் எந்த வகையான அறிவு மாற்றத்தை வழங்க முடியும் என்பதைப் பற்றிய
நோக்கு கொண்ட மாற்றங்களில் அவர்களை பிணைத்துக்கொள்ளலாம். நீங்கள் இந்த பிணைப்புக்கு
நேரத்தை ஒதுக்க தவறினால்> ஒரு தலைவராக உங்கள் தீர்மானங்களை வெற்றியை நோக்கி கொண்டு
செல்ல முடியாது என்பதை ஞாபகத்;தில் வைத்திருங்கள்.

கிடைக்காததும் அணுக முடியாததும்

நீங்கள் நிச்சயமாக ஒரு தலைவராக பணிகளை ஒப்படைக்க வேண்டும். இருப்பினும், உணர்ச்சி ரீதியில்
அதிலிருந்து விடுபடுதல் என்பது அதன் பொருளல்ல. நீங்கள் ஒரு பணியை ஒதுக்கி கைவிட்டு
வெளியேறினால்> உங்கள் மக்களைக் நீங்கள் கைவிடுவதாகக் கருதப்படுவீர்கள். நீங்கள் ஒரு நல்ல
தலைவராக இருப்பது எவ்றாறென்றும்> எவ்வாறு பிரதிநிதித்துவம் செய்வது என்பதையும் நீங்கள்
அறிந்திருத்தல்> அணுகக்கூடியதாகவும் இணைக்கப்பாகவும் இருத்தல் என்பதாகும். ஒவ்வொரு சிறிய
கோரிக்கைக்கும் நீங்கள் எப்போதும் பதிலளிக்கிறீர்கள் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. இருப்பினும்>
மக்கள் உங்களைத் தொடர்புகொள்வதற்காக நீங்கள் வழிவகுப்பதாக அமைத்துள்ளீர்கள் என்றே
பொருள்படும்.

திறமையை வளர்ப்பதை புறக்கணித்தல்

பல நேரங்களில்> தலைவர்கள் சாதனைக்கான காரணியாக மற்றும் நிறுவனத்தின் இலக்குகளை
ஏற்படுத்தவே பிரத்தியேகமாக செயல்படுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் கற்க வேண்டிய
மனிதனின் உள்ளார்ந்த தேவையை மறுதலித்து விடுகின்றனர். மக்கள் தங்கள் வேலைகளைச்
செய்யும்போது அவர்களின் திறன்களையும்> திறமையையும் விரிவுபடுத்த விரும்புகிறார்கள் மற்றும் அந்த
முக்கியமான காரணியைப் புரிந்துகொள்வது உங்களை ஒரு விதிவிலக்கான தலைவராக மாற்றும். நீங்கள்
கற்றலுக்கு முன்னுரிமை அளிக்கும்போது>அதை அறியாத நபர்களின் திறமையைக் கண்டறிந்து
வளர்க்கக்கூடிய சிறந்த தலைவராக நீங்கள் மாறுவீர்கள். நீங்கள்> மிக எளிமையாக, திறமையை
கண்டறிந்து வெளிக்கொண்டு வருபவராக மாறுகின்றீர்கள்.

செயல்திறன் பற்றிய வழக்கமான கருத்துக்களை வழங்காமை

மக்கள் செயல்திறனைப் பற்றி அறிந்திருந்தால் மட்டுமே> அவர்களின் அதிகபட்ச செயல்திறனைப் பெற
முடியும். தலைவர்கள் சில சமயங்களில் மக்களின் எதிர்காலத்திற்கான திறவுகோலைக் சூரையாடும்
போக்கைக் கொண்டுள்ளனர். ஒரு நல்ல தலைவர் என்பது தங்கள் குழுவிற்கு முறையான கருத்துக்களை
வழங்குபவர். குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையிலேயே அவர் அவ்வாறு செயற்படுவார்.

உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்ளாமை

உணர்ச்சிகள் இழப்பு> ஏமாற்றம்> தோல்வி மற்றும் பிரிவினை ஆகியன மனிதர்களாக நாம்
அனுபவிப்பவை. யாரோ ஒருவர் வேலையில் இருப்பதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில்
இத்தகைய உணர்ச்சிகளை அனுபவிப்பதைத் தடுக்காது. சில சமயங்களில்> இது அவர்களின் ஆற்றலில்
பிரதிபலிக்கும். ஒரு தலைவராக நீங்கள் இதை ஒப்புக்கொண்டு அவர்களுக்கு ஆதரவளிப்பது முக்கியம.
அவர்களை மீண்டும் நல்ல மனப்பான்மையுடன்> பச்சாதாபத்துடன் வழிநடத்துங்கள்.

நாம் முன்பு கூறியது போல், ஒரு தலைவராக இருப்பது எளிதான காரியம் அல்ல> ஆனால்
தலைமைத்தவத்தை சரியாக செய்தால் அது மிகவும் பலனளிக்கும் ஒன்றாகும். தலைமைத்துவத்தைப்
பற்றிய மேலும் பல தகவல்களை இவ்விடத்தை பாருங்கள்.

தலைமைத்துவம் – தவறுகள் மற்றும் செய்யத்தகாதவை பற்றிய மேலதிக தகவல்களை திரிய இணையத்தளத்தில் பெறலாம்.

Exit mobile version