Diriya

சிறு மற்றும் நடுத்தரள அளவு வியாபாரத்தில் ஏற்படும் சிதைவுகளிலிருந்து தப்பித்தல்

c பொதுவாக இவை வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளில் ஏற்படும் மாற்றங்களால் நிகழ்கின்றன அல்லது இம்மாற்றங்கள் உண்மையில் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளில் மாற்றங்களைக் கொண்டு வரலாம், இதுதவிர பல்வேறு வியாபாரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். சீர்குலையும் மாற்றங்கள் காரணமாக ஏற்படக்கூடிய கொள்கை மாற்றங்கள் மற்றும் காரணிகளை முற்கூட்டியே நிறுவன தலைவர்கள் அறிந்துகொண்டால் இந்த நிலையை மாற்றியமைக்கலாம்.  

சீர்குலைக்கும் மாற்றம் என்றால் என்ன?

ஒரு தொழிலில் அல்லது வியாபாரத்தின் அடிப்படை யோசனை மற்றும் செயல்முறைகள் மாறத் தொடங்கும் போது சீர்குலைக்கும் மாற்றம் ஏற்படுகிறது. இத்தகைய அதிகரிப்பு கொண்ட சிறிய   மாற்றங்கள் வியாபாரங்களையும் அவற்றின் ஊழியர்களையும் காலப்போக்கில் மெதுவாக மாற்றியமைக்கும். அதேநேரம் சீர்குலைக்கும் மாற்றத்திற்குட்பட்டு தமது நிறுவனம் நீண்டகாலம் நீடிக்கும் என்பதை உறுதிப்படுத்த நிறுவன தலைமைத்துவத்திற்கு உயர் மூலோபாய திட்டங்கள் அவசியம். சீர்குலைக்கும் மாற்றங்கள் ஏற்படும்போது புதிய கலாச்சார எதிர்பார்ப்புகள் அல்லது தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக தற்போதைய உற்பத்திகள் மற்றும் பணி அமைப்புகள் மதிப்பை இழக்கக்கூடும். வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது ஊழியர்களுடன் வியாபாரங்கள் தொடர்புகளை பேணும் விதத்திற்கு சீர்குலைக்கும் மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தும். 

சீர்குலைக்கும் மாற்றத்திற்கு சிறந்த உதாரணமாக இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை குறிப்பிடலாம். அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவானது வாடிக்கையாளர்களது நடத்தையை மாற்றியுள்ளது. மக்களது கொள்வனவு சக்தியின் வீழ்ச்சி, பணவீக்க அதிகரிப்பு போன்றவற்றை அவர்களது நிதிப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களாக உணருகின்றனர். ஓராண்டுக்கு முன்னர் அவர்கள் கொள்வனவு செய்த பட்டியல் பொருட்களுக்கும் தற்போது கொள்வனவு செய்யும் பட்டியல் பொருட்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. அந்த பொருட்கள் தற்போது ஆடம்பர பொருட்களாக மாறியுள்ளமையே அதற்கான காரணங்களாகும்.  

ஒரு சிறு மற்றும் நடுத்தர அளவு தொழில்முனைவோராக இந்த சீர்குலைவு மாற்றத்தை எவ்வாறு காண்கின்றீர்கள்?  

உறுதியாக இருங்கள்

நீங்கள் ஒரு உறுதியான நபராக இருந்தால் மட்டுமே பல இடையூறு விளைவிக்கும் மாற்றங்களை வெற்றிகரமாக  வழிநடத்திச் செல்லலாம். உறுதியாக இருப்பது என்பது பல்வேறு தொழில்முனைவோர் மற்றும் வியாபாரங்களுக்கு வேறு வகையான விடயங்களை அர்த்தப்படுத்தும். இருப்பினும், பொதுவாக மற்றவர்கள் கூறும் பின்னூட்ட கருத்துகள் நீங்கள் உறுதியாக இருப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும். உங்களை வழிநடத்துபவர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும் நண்பர்களிடமிருந்து தொடர்ந்து கருத்துக்களைப் பெற வேண்டும். இடையூறுகளைக் கண்டறிவதில் ஏற்படும் தோல்வியானது, சுய விழிப்புணர்வையும் தோல்வியாக்கும். நீங்கள் உண்மையிலேயே யார்? நீங்கள் யாராக இல்லை? இவ்வாறு செய்வதால் நீங்கள் புறக்கணிக்க எதிர்பார்க்கும் உண்மைகளை கவனிக்க உங்கள் கண்களுக்கு அது பயிற்சி அளிக்கின்றது.  உண்மையில், நீங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறீர்களோ, அவ்வளவு நம்பகத்தன்மை உங்கள் வியாபாரத்தில் இருக்கும். அது வலுவாக வெளிப்படும் என்பதும் உண்மையே.  

மாற்றங்களைச் சமாளிக்கும் திறன்களை உருவாக்குங்கள்  

செயல்முறைகள் என்பது வளங்களைப் போன்று நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவோ அல்லது  மாற்றியமைக்கக்கூடியதாகவோ இருக்காது. பெறுமதிகள் குறைவான நெகிழ்வுத்தன்மையை கொண்டவை.  எனவே சீர்குலைக்கும் மாற்றங்களை நீங்கள் கண்டறிந்து அதனை பேணினால் அல்லது புத்தாக்கப்படுத்தினால் உங்கள் வியாபாரத்திற்கு புதிய திறன்கள் தேவைப்படும். வேறு வகையில் சொல்வதெனின், முகாமையாளர்கள் திறன்கள் கொண்டதொரு சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்கு மூன்று சாத்தியமான வழிகள் உள்ளன. முகாமையாளர்கள் அவற்றை முயற்சிக்க வேண்டும்.  

● புதிய செயல்முறைகளை ஏற்படுத்தக்கூடிய கூட்டுறவு நிறுவன எல்லைகளுக்குள் புதிய நிறுவன கட்டமைப்புகளை உருவாக்கவும்.

● ஏற்கனவேயுள்ள நிறுவனத்தில் இருந்து ஒரு சுயாதீனமான அமைப்பை ஏற்படுத்தி, அதற்குள் புதிய செயல்முறைகள் மற்றும் சிக்கலைத் தீர்க்க தேவையான புது மதிப்புகளை உருவாக்குங்கள்.

● செயல்முறைகள் மற்றும் பெறுமதிகள் கொண்ட பணியின் தேவைகளுடன் நெருக்கமாகப் பொருந்தக்கூடிய வேறு நிறுவனத்தை கண்டறியுங்கள்.  

இவை மாற்றங்களை மிகவும் திறமையாக வழிநடத்தி கொண்டு செல்லவும், நிச்சயமற்ற காலங்களில் வியாபாரத்தை உறுதிப்படுத்துவும் உதவும்.  

 உங்கள் போட்டியாளர்களைக் கவனியுங்கள்  

உங்கள் போட்டியாளர்கள் எவ்வாறு செயற்படுகின்றார்கள்? அவர்கள் எத்தகைய புதிய தயாரிப்புகளை வழங்கின்றனர்? மற்றும் வாடிக்கையாளர்களுடன் நெருங்குவதற்கு அவர்கள் எத்தகைய செயல்முறைகளைப் பயன்படுத்துகிறார்கள்? போன்றன தொடர்பில் கவனம் செலுத்துங்கள். புதிய போட்டியாளர்கள் எப்போது சந்தைக்கு வருகின்றார்கள் அல்லது ஏற்கனவே உள்ள போட்டியாளர்கள் புதிய பிரிவுகளாக எவ்வாறு தமது வியாபாரத்தை விரிவுபடுத்துகின்றார்கள் என்பதைக் கண்டறியுங்கள். எந்த உத்திகள் மிகவும் பயனுள்ளவை மற்றும் மாற்றத்திற்கு பதிலளிக்கக்கூடியவை என்பதை அடையாளம் காண தொழில் விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு பேணுவது மிக மிக அவசியம்.இடையூறுகள் எப்போதும் ஒரு மோசமான விடயமல்ல என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்.  உண்மையில், உங்கள் கைவசமுள்ள துருப்புச்சீட்டை சரியாக பயன்படுத்தி விளையாடினால், சீர்குலைக்கும் மாற்றங்கள் உங்கள் வியாபாரத்திற்கு வளமாகவும், மூலோபாய சிந்தனையாகவும், புத்தாக்க திறன் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்ததைக் கொண்டு வர முடியும் என்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே தொடர்ந்து பயணியுங்கள். இடையில் கைவிடாதீர்கள்.

Exit mobile version