Diriya

சர்வதேச சந்தையின் சவால்கள்

சர்வதேச சந்தை என்பது ஒரு நிறுவனத்தின் உள்ளுர் செயற்பாட்டின் புவியியல் எல்லைகளை தாண்டிய சந்தையாகும். இத்தகைய சந்தைகளின் வருகையானது புதிய சந்தைகளின் வளர்ச்சி, புதிய வாடிக்கையாளர்களின் நுழைவு மற்றும் நிறுவனத்தின் கொள்திறன்கள் மற்றும் இயலுமைகளின் பயன்பாடு மூலம் வணிகத்தை இலகுபடுத்துகின்றது. இத்தகைய பலன்களை அடைந்த போதிலும், சந்தையிலுள்ள ஏனைய பெறுநிறுவனங்களுடன் ஒப்பிடும் போது பலமான கொள்திறன்களையும் இயலுமைகளையும் கொண்டிராத குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயாற்சியாண்மைகள் சில சவால்களை எதிர்கொள்கின்றன. நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஆற்றுகைக்கு தடைஏற்படுத்தக்கூடிய சர்வதேச சந்தைகளை விரிவுபடுத்துவதற்கு முன்னர் அந்நிறுவனங்கள் சில அபாயங்களை கையாளல் அவசியமாகும்.    

சர்வதேச சந்தைகளில் பிரவேசிக்கின்ற போது தாம் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயாற்சியாண்மையாளர்கள் அறிந்துவைத்திருத்தல் அவசியமாகும். ஏற்படக்கூடிய செலவு மற்றும் வழங்கப்படும் பொருட்களுக்கான எதிர்கால சந்தைகளை இணம்காண்பதற்கு முதலீடுசெய்வதற்கான நேரம் என்பன மிகப்பெரிய சவால்களாகும். சர்வதேச சந்தையை முறையாக நிர்வகிக்க தவறுகின்றமை நிறுவனத்தின் ஆற்றுகையை பாதிப்பதுடன் நிறுவனத்தின் நற்பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்தும். ஆனால், சந்தையிலுள்ள சவால்களை முறையாக இணம்கண்டு அதன்மூலம் ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைக்க மூலோபாயங்களை வகுத்தல் சர்வதேச சந்தையில் நிறுவனத்தின் சாதகமான மேம்பாட்டிற்கு வழியமைக்கும்.    

கலாசார வேறுபாடுகள், மொழித்தடைகள், ஒழங்குபடுத்தல் தடைகள் மற்றும் ஏற்கனவே நிறுவப்பட்ட பாரியளவு பொருளாதார நன்மைகளைக்கொண்ட பலமான வணிகங்களினுடைய கடுமையான போட்டி என்பன சர்வதேச சந்தைகளில் வணிகம் எதிர்கொள்ளக்கூடிய மிகப்பிரதான சவால்களாகும். 

இலங்கையின் மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதியாளர்களுள் ஒருவரான டில்மாஹ் டீ (Dilmah Tea) ஐக்கிய அமெரிக்க அரசிற்கு இற்கு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது. இது வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரம் மற்றும் நிறுவன சந்தைப்படுத்தல் விடயத்திற்கு கலாசார வேறுபாடுடையதாகவும் ஐ.அ.அ சந்தையின் சுவை மற்றும் விருப்புக்களுக்கேற்ப மாற்றப்பட வேண்டியதாகவும் இருந்தது. சில சவால்கள் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பெரும்பாலான சவால்கள் திடீரென எற்படுவதுடன் சந்தையில் நிலைத்திருப்பதற்கு வணிக நிறுவனங்களிடமிருந்து உடனடியான நடவடிக்கைகளை வேண்டிநிற்கின்றன.   

சவால்கள் 

ஒவ்வொரு சம்பந்தப்பட்ட தரப்பினரும் புதிய சந்தையில் காணப்படும் கலாசார வேறுபாடுகளை கவனத்திற்கொள்ள வேண்டுமென்பதை சர்வதேச சந்தைகளின் வணிக விரிவாக்கம் நினைவூட்டுகின்றது. ஒவ்வொரு சமுதாயமும் சந்தையும் தனக்கென தனித்துவமான பண்பாடுகள், வழக்கங்கள் மற்றும் வணிகத்தை நடாத்தவதற்கான வழிகளை கொண்டுள்ளார்கள் என்பதை தொழில்முனைவோர்கள் கவனத்திற்கொள்ளல் வேண்டும் என்பதுடன் அதற்கு மதிப்பளித்தல் வேண்டும். கலாசார வேறுபாடுகளை சரியாக இணம்காணல், வணிக பரிமாற்ற செயற்பாடுகளின் போது தவறான புரிதல்களையும் சகலவகையான முரண்பாடுகளையும் தவிர்க்கும். சான்றாக, இலங்கை நாட்டு சூழலில் அமைதி என்பது அநேகமாக மரியாதையின் அடையாளமாக பார்க்கப்பட்டாலும் அதேநரத்தில் ஐக்கிய அமெரிக்கா நாட்டில் அது ஆர்வமின்மை மற்றும் அல்லது மறுப்பு என்பவற்றிற்கான அடையாளமாக இருக்கடியும். இச்சிறிய விடயங்களை புரிந்துகொள்ள தவறுகின்றமை இருபங்காளர்களுக்கிடையிலான உடன்படிக்கையை இறுதிப்படுத்தகின்ற வேளை பாரிய செலவை ஏற்படுத்தமுடியும்.      

சர்வதேச சந்தைக்குள் பிரவேசிக்கின்ற போது தொழில்முனைவோர் எதிர்கொள்ளக்கூடிய அடுத்த மிகப்பெரிய சவால் மொழித்தடை ஆகும். வணிக செயற்பாடுகளின் வெற்றிக்கு வினைத்திறனனான தொடர்பாடல் அவசியம் என்பதுடன் பிழையான தொடர்பாடல் துரதிஷ்டவசமான செலவை ஏற்படுத்தும். மொழிப்பயன்பாடு வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களின் உள்ளங்களில் உறவுகளை கட்டமைப்பதால் சந்தைப்படுத்தலின் முக்கியமான கூறாக காணப்படுகின்றது. வாடிக்ககையாளர்களிடையே உற்பத்தியை நம்பவைப்பதற்கும் பங்காளர்களிடையே நெருக்கமான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் மொழி ஒரு தடையாக காணப்படுகின்றது. வணிக உலகில் நீண்டகாலம் நிலைத்திருக்ககூடிய உறுதியான தொடர்புகளை ஏற்படுத்தல், சர்வதேச சந்தையில் நிறுவனமொன்றின் வளர்ச்சிக்கு மிகஅவசியமாகும். சான்றாக, இலங்கையிலுள்ள தொடர்பாடல் தொழினுட்ப (IT) நிறுவனமொன்று ஐரோப்பிய சந்தைக்குள் பிரவேசித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் பல தொழினுட்ப வாசகங்களை பயன்படுத்துதல் செயற்படுத்தப்படும் திட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். உள்ளுர் மொழிப்பிரயோகம், தொழினுட்ப வாசகங்கள் என்பன தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களினால் கவனமாக பயன்படுத்தப்படல் வேண்டும்.    

சர்வதேச சந்தைக்குள் பிரவேசிக்கின்ற போது எதிர்கொள்ளக்கூடிய அடுத்த மிகப்பாரிய சவாலாக பல்;வேறு நாடுகளின் வெவ்வேறுபட்ட ஆட்சிஅமைப்புக்களால் அமுல்படுத்தப்படும் ஓழுங்குபடுத்தல் சவால்கள் காணப்படுகின்றன. சம்பந்தப்பட்ட சர்வதேச சந்தை ஆவணங்கள், தரநிலைகள் மற்றும் ஒழுங்குகள் என்பவற்றுடன் இசைந்துசெல்லல் எந்தவொரு வணிக செயற்பாட்டிற்கும் அவசியமானதாகும். சில சந்தர்ப்பங்களில் இச்செயன்முறைகள் இயல்பாகவே சிக்கல்நிறைந்தவையாகவும் நேரவிரயத்தை ஏற்படுத்தக்கூடியவையாகவும் காணப்படும்.   

ஏற்கனவே நிறுவப்பட்ட வணிகங்களிடமிருந்து ஏற்படும் அச்சுறுத்தல் மற்றுமொரு சவாலாக காணப்படுவதுடன் சந்தையில் பிரவேசித்தல், அதனை கைப்பற்றல் மற்றும் மிகமுக்கியமாக சந்தையை பாதுகாப்பதில் சவாலை ஏற்படுத்துகின்றது. அவ்வாறான நிறுவனங்கள் சந்தையில் உறுதியான வியாபார நாமத்தை கொண்டிருப்பதுடன் பாரியளவிலான பொருளாதாரங்களுடன் மிகவிசாலமான தமது வாடிக்கையாளர் தளத்தை பாதுகாக்கின்றனர். இச்சூழ்நிலைகள், தங்களது வழங்கல்களில் ஆக்கபூர்வமானவர்களாக திகழ்வதற்கு சர்வேதச சந்தைக்குள் பிரவேசிக்கம் புதிய நிறுவனங்களுக்கு அழுத்தமேற்படுத்துவதுடன் பாரம்பரிய சந்தைக்கு சீர்குலைவை ஏற்படுத்தவும் முடியும். உலகம்பூராக உள்ள வளர்ச்சிமிக்க ஊபர், நெட்பிலிக்ஸ் என்பன அவற்றிற்கு சான்றாகும்.  

மேற்கூறிய சவால்களுக்கு மேலதிகமாக, வரிவிதிப்புக்கள், கட்டண கொள்கைகள் மற்றும் பரிமாற்ற விகிதங்களின் ஏற்றஇறக்கம் தொடர்பான தளவாட (Logistic) சவால்களையும் தொழில்முனைவோர் எதிர்கொள்கின்றனர். தளவாடங்களுடன் தொடர்பான சவால்களை தீர்க்க தவறுகின்றமை உரிய வேளையில் இலக்கு  சந்தைக்கு நிறுவனத்தின் உற்பத்திகளை விநியோகிப்பதற்கும் செலகுகுறைந்த முறைமையில் பெறுவதற்கும்; அச்சுறுத்தலை ஏற்படுத்தும். பரிமாற்ற விகித ஏற்றஇறக்கங்கள் மற்றும் வரிவிதிப்புக்கள் செயற்பாடுகளின் இலாபத்தில் நேரடியாக பாதிப்புச்செலுத்துவதுடன் சர்வதேச சந்தைக்கு நுழைவதற்கு முன்னர் வணிக செயற்பாடுகளின் ஒவ்வொரு நடவடிக்கையினதும் சாத்தியமான தன்மையயை மதிப்பிடல் அத்தியாவசியமானதாகும்.    

சவால்களை எதிர்கொள்ளல்  

சாத்தியமான மதிப்பீடுகளைக்கொண்ட முழுமையான சந்தை ஆய்வை மேற்கொள்ளல் சர்வதேச சந்தையில் பிரவேசிப்பதற்கான தீர்மானத்தை எடுக்கும் தொழில்முனைவோர் அல்லது வணிக நிறுவனமொன்றின் முதற்படியாக இருத்தல்வேண்டும். சந்தை ஆய்வானது குறித்த சந்தையின் தேவைகள் மற்றும் விருப்பங்களை அறிந்துகொண்டு இலக்கு சந்தையை பகுப்பாய்வுசெய்வதுடன் மேலும் சந்தையின் மிகப்பெரிய அச்சுறுத்தல்களை புரிந்துகொள்வதற்கு அவசியமான போட்டித்தன்மைமிக்க அமைவிடம் பற்றிய உட்பார்வைகளை வழங்கும். சந்தை ஆய்வானது, சந்தையில் காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் கட்டாயமாக தவிர்க்கப்படவேண்டிய மிகமுக்கியமான இடர்பாடுகளை காண்பிப்பதனால் சர்வேச சந்தையில் பிரவேசிப்பதில் மேற்கொள்ளப்படும் மிகமுக்கியமான செயற்பாடாக காணப்படும். சந்தை ஆய்வு ஊடாக, குறித்த சர்வதேச சந்தையில் பிரவேசிப்பதற்கு காணப்படுகின்ற சாத்தியமான இடர்பாடுகளை இணம்காண்பதற்கு முடிவதுடன் அவ்இணம்காணப்பட்ட இடர்பாடுகளை நிர்வகிக்க மூலோபாயங்களை வகுப்பதில் தொழில்முனைவோருக்கு துணைபுரியும். சில இடர்பாடுகளானவை அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார நிலையற்றதன்மை மற்றும் ஏனைய கலாசார காரணிகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ளன. ஆகவே, விரிவான தயார்படுத்தல் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்வதை இலகுபடுத்தும்.     

பெறுமதிதொடர்பு எந்தவொரு வணிகத்தினதும் மற்றுமொரு பிரதானமான கூறாகும். எனவே, உள்ளுர் பங்காளர்களுடன் பலமான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளல், சர்வதேச சந்தையொன்றில் பிரவேசிக்கும்போது ஏற்படக்கூடிய பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்ள துணைபுரியும். அத்தகைய தொடர்புகளை கட்டமைத்தல் வளங்கலை அனுகுவதற்கும் எவ்வித தடையுமின்றி உள்ளுர் வணிக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் வழியமைக்கும்.  உள்ளுர் பங்காளர்கள் வாடிக்கையாளர்களுடனான நம்பிக்கைத்தன்மையுடன் கூடிய உறுதியான நாமத்தை உறுதிப்படுத்துவதுடன் நிறுவனம் மற்றும் பங்காளர்கள் ஆகிய இருதரப்பினர்களுக்கும் வெற்றி நிலைக்கு இட்டுச்செல்லும்.   

மற்றொரு முக்கியமான அம்சம் என்னவெனில், தொழில்முனைவோர் தயாரிப்புகளின் அடிப்படையில் தயாரிப்புகளை தனிப்பயனாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், பொதிசெய்தல், சந்தைப்படுத்தல் அணுகுமுறைகள் வெற்றிகரமான வழிகளில் உள்ளுர் சந்தையின் சுவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு அந்தந்த சர்வதேச சந்தையில் வணிகம் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தலாம்.  

எதிர்பாராத சவால்களை உடனுக்குடன் எதிர்கொள்ளும் வகையில் திட்டமிடல் எவ்வளவு முழுமையானது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம், மேலும் சந்தையில் புதிய முன்னேற்றங்களுக்கு ஏற்ப நெகிழ்வாக இருக்கும்போது தொழில்முனைவோர் பொறுமையாக இருக்க வேண்டும். தொழில்முனைவோர் ஒருவர் எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் சமாளிக்க வேண்டிய அவசியமான மனநிலையின் அடிப்படையான தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதும், முன்னேறுவதும் அவசியம்.

வெற்றிக்கதைகள்.

1988 ஆம் ஆண்டில், திரு. மெர்ரில் ஜே. பெர்ணான்டோ என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட டில்மாஹ் பிரசித்தி பெற்றற வர்த்தக நாமமாக திகழ்வதுடன் 100 இற்கு மேற்பட்ட  நாடுகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. தரத்தை நோக்கிய அர்ப்பணிப்பு, நிலைபேண்தகு செயற்பாடுகள், மற்றும் புத்தாக்கமிக்க சந்தைப்படுத்தல் அணுகுமுறைகள் பல்வேறு தளங்களில் இலங்கையை அடையாளப்படுத்த டில்மாஹ் டீ (Dilmah Tea) இற்கு துணைபுரிந்துள்ளது.  பல்வேறு தொழில் முனைவோர் மற்றும் வணிக முயற்சியாளர்கள் தங்களது பயணத்தில் உச்சத்தை தொடுவதற்கு டில்மாஹ் ஓர் உண்மையான உந்து சக்தியாக திகழ்வதுடன் அதன் பிரசைகள் சார்ந்த நிறுவன செயற்பாடுகள் அத்துறையில் குறிப்பிடத்தக்க அம்சமாக  திகழ்கின்றது.

நாட்டின் ஆடைத்துறையை விரிவுபடுத்தும் நோக்கில் 1978 ஆம் ஆண்டில் திரு. மகேஷ் அமலியன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட எம்ஏஎஸ் ஹோல்டிங்ஸ் (MAS Holdings), தொழிற்துறை சார்ந்த நெறிமுறை நியமங்களுடன் கூடிய பலமான தர நியமமொன்றை நிறுவியுள்ளது. தற்போது, MAS Holdings ஆனது அதிகளவான வெளிநாட்டு நாணய வருகையை உறுதிப்படுத்தக் கூடிய மிகப்பாரிய தொழில் முயற்சிகளில் ஒன்றாக காணப்படுகின்றது.  

இந்நிறுவனம் பிரதானமாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்கின்ற அதேவேளை உலகம் பூராகவும் உள்ள பல்வேறு பிராந்தியங்களில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.

எனவே, சர்வதேச சந்தையின் வெற்றியானது, தொழில் முனைவோர் அல்லது வணிக முயற்சியாளர்களினால் நடாத்தப்படும் முழுமையான சந்தை ஆய்வினை அடிப்படையாகக் கொண்ட உபாயங்களின் கண்டுபிடிப்பிலேயே பிரதானமாக தங்கி இருக்கின்றது. போட்டித் தன்மை வாய்ந்த அமைவிடம் உள்ளடங்களான புதிய சந்தையில் பிரவேசிக்கும் போது சவால்களின் தோற்றத்தை இவ்வாய்வு வழங்கும். சர்வதேச வணிக இலக்குகளின் வெற்றிக்காக உள்ளுர் பங்காளர்களுடன் பலமான தொடர்புகளை உருவாக்குகின்ற அதேவேளை சர்வதேச சந்தைகளில் பிரவேசிக்கவும் வினைத்திறனான உபாயங்களுடன் அபாயத்தை எதிர்கொள்வதற்கும் தொழில் முனைவோருக்கான பல வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.


இந்த உள்ளடக்கமானது CeFEnI/COSME இன் உதவியுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்டதாகும்.

Exit mobile version