தனது சகஊழியர்களை ஆர்வமூட்டல், சாதகமான பணிச்சூழலொன்றை உருவாக்குதல், முரண்பாடுகளை தைரியமாக தீர்த்தல், உபாய ரீதியான தீர்மானங்களை மேற்கொள்தல் போன்றவற்றுடன் தனது வணிகத்திற்கான வழிகாட்டலை வழங்கி உறுதியான பார்வையொன்றை எற்படுத்துவதே தலைவரின் பொறுப்பாக காணப்படுவதுடன் மாற்றங்களை தழுவி வணிகத்தை முன்கொண்டு செல்வதில் திறன்படைத்தவராகவும் இருத்தல் வேண்டும். தொழில்முயற்சியாண்மையாளர்களுக்கு தலைமைத்துவம் முக்கியமானதாகும். உறுதியான தலைமைத்துவமொன்று இல்லாத சந்தர்ப்பத்தில் செயற்பாடுகளின் ஆற்றுகையை நலிவடையச்செய்து அவற்றை தோல்வியடையச்செய்யும்.
பொதுவாக தொழில்முயற்சியாண்மையாளர் வணிக சூழ்நிலையில் வாய்ப்புக்களை கையகப்படுததிக்கொள்ளும் இயலுமையுள்ளவராக இருக்க வேண்டும் என்பதுடன் வளங்களை முகாமைசெய்யும் தலைவராக காணப்படுகின்றார். நிறுவனத்தின் முன்தீர்மானிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கேற்ப விரிவான திட்டத்துடன் இணைந்ததாக முன்னெடுத்துச்செல்லக்கூடியதாக நிறுவனத்தின் நோக்கையும் இலக்குகளையும் தலைவரானவர் அடிப்படையில் இனம்காண்பார்.
உண்மையில் தொழிலாளர்களை ஆர்வமூட்டக்கூடிய வகையில் கடின உழைப்பு மற்றும் தமது தொழில் மீதான பேரார்வம் என்பவற்றின் மூலம் தலைவர் முன்னுதாரணமிக்கவராக திகழவேண்டும். தலைவர்கள் தொழிலாளர்களை மதித்து அவர்களது கடின முயற்சிகளுக்கு கௌரவமளிக்கின்ற போது, எந்தவொரு நிறுவனத்தினதும் வெற்றிக்கான அடிப்படை அம்சமான சாதகமான பணிச்சூழலொன்றை உருவாக்குவதற்கு அவர்கள் விருப்புடன் பங்களிப்புச்செய்வார்கள்.
கொவிட் தொற்றுநிலை மற்றும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளத் தொடங்கியதிலிருந்து தலைவர்களை கடினமான தீர்மானங்களையும் குறுகிய காலஎல்லைகளையும் மேற்கொள்வதற்கு வலியுறுத்தியது. தலைவர்கள் அநேகமான சந்தர்ப்பங்களில் அழுத்தமடைந்ததுடன் பரிச்சயமற்ற கடினமான தீர்மானங்களை எடுப்பதற்கு சவாலுக்குட்படுத்தப்பட்டனர். நடைமுறைப்படுத்துவதற்கு சிறந்த தரமுடைய நீதியானதும் நன்னெறிமிக்கதுமான இக்கடின தீர்மானங்களை தலைவர்கள் மேற்கொள்வதென்பது அத்தியாவசியமானதாகும்.
உறுதியான தலைவருவொரை கொண்டிருத்தல் கொந்தளிப்பான நேரத்திலும் கூட தொழிலாளர்களின் மனவலிமையை மேம்படுத்தி வணிக நிறுவனத்தின் மிகச்சிறந்த வெற்றியை உறுதிசெய்யும். மைக்ரோசொப்ட் இன் இணைநிறுவுனர் பில்கேட்ஸ்; பேர்க்ஸ்சையர் ஹதாவேய் பி.நி.அ வர்ரன் பப்பட்; அமேசன் பி.நி.அ ஜெப் பெசோஸ்; டெஸ்லாவின் பி.நி.அ எலன் மாஸ்க்; போட் இன் நிறுவுனர் ஹென்ரி போட் போன்றவர்கள் வணிகத்தின் போக்கை மாற்றி உலகம்பூராகவும் மில்லியன் கணக்கான மக்களை ஆர்வமூட்டிய உலகம் போற்றும் தலைவர்களாவர்.
தலைமைத்துவ திறன்கள்
ஏனையவர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய இயலுமையுடன் தொடர்பாடல், தீர்மானம் எடுத்தல், சமயோசித சிந்தனை, பிரச்சினை தீர்த்தல் என்பன தலைவர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய மிகமுக்கியமான திறன்களாகும். கட்டாயமாக தீர்க்ப்படவேண்டிய சவால்கள், அதிருப்திகள், முரண்பாடுகள் என்பவற்றை வழக்கமாக தலைவர்கள் எதிர்கொள்வதுடன் படிப்படியான தீர்மானங்களை அடையக்கூடியதாக உரிய தரப்பினர்களுடன் பலமான தொடர்பாடல்களை கொண்டிருத்தல் மிகமுக்கியமானதாகும். நிறுவனத்தின் குழு அங்கத்தவர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் ஆரோக்கியமான உறவுகளை பேணுவதும் மிகமுக்கியமானதாகும்.
வணிக உலகின் தற்கால போக்குகள் மற்றும் காலத்திற்கு காலம் முகாமைத்துவ பரிமாணங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் விரைவான தொழினுட்ப முன்னேற்றங்களின் தொழினுட்பங்களை நிர்வகித்தல் தொடர்பாக தொடர்ச்சியாக கற்பவராக தலைவர் இருப்பார். தலைவர் கருத்துக்கணிப்புக்கள் மற்றும் தவறுகளை குறைப்பதற்கு துணைபுரியும் வகையில் ஏனையவர்களின் குரல்களை செவிமடுப்பவராகவும் இருக்கவேண்டும் என்பதுடன் இருவழித்தொடர்பாடல்களை கொண்டிருப்பது பணியிடத்தை சூழ சாதகமான சூழலொன்றை உருவாக்குவதற்கான சொந்த உணர்வை ஏற்படுத்தும். தலைவரானவர் துணிவுகளை மேற்கொள்வதில் விருப்புடையவராகவும் சந்தை நிலவரங்களுக்கேற்ப நெகழிவுத்தன்மையுடன் கவனம்செலுத்தக்கூடியதுமான நிறுவனத்திற்கு துணைபுரியக்கூடிய நகர்வுகளில் தன்னம்பிக்கையுடையவலாகவும் இருத்தல் வேண்டும்.
உத்வேகமானதும் சாதகமானதுமான சூழல்
தலைவர் தெளிவாகவும் வினைத்திறனாகவும் தொடர்பாடக்கூடிய சிறப்பாக உத்வேகமளிக்கப்பட்ட குழுவொன்றைக் உருவாக்குவதில் பலமான தொடர்பாடல் முதலாவது படியாக காணப்படும். தலைவரின் நோக்கினை ஒவ்வொருவரும் தெளிவாக புரிந்துகொள்கின்ற போது முன்தீர்மானிக்கப்பட்ட இலக்குகளை அடைந்துகொள்வதும் மாற்றங்களிற்கேற்ப இலகுதன்மை பெறுவதும் மிக இலகுவானதாக காணப்படும். குழுவினரின் முழுமையான ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான சூழலொன்றை உருவாக்குதல் கற்பதற்கும் வளர்ச்சியடைவதற்குமான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்குவதுடன் அவர்களின் கடின முயற்சிகளுக்கு மதிப்பளித்து மனவலிமையை மேம்படுத்தும். மதிப்பு, கௌரவம் மற்றும் உதவியை தொழிலாளர்கள் உணரக்கூடிய சாதகமான பணிச்சூழலைப் போன்ற சாதகமான சூழலொன்றை உருவாக்குதல் போட்டித்தன்மைமிக்க வணிக உலகில் வெற்றிபெறுவதற்கு மிக முக்கியமானதாகும். தொழிலாளர்கள் தங்களை சௌகரிகமாக உணரக்கூடிய மற்றும் தங்களது சிறப்பான பணியை மேற்கொள்ளக்கூடிய இடமாக இது காணப்படும்.
தலைவர் குழுவினரிடமிருந்து தொடர்ச்சியான கருத்துக்கணிப்பை பெற வேண்டும் என்பதுடன் அது குழு மற்றும் நிறுவனத்தின் செயலாற்றுகையை மேம்படுத்தும். தொழிலாளர்களால் அடையப்படும் முக்கியமான இலக்குகளின் வெற்றியை தலைவர் கொண்டாட வேண்டும் அது கடின வேலைகளை செய்யவும் நிறுவனத்திற்கு சிறந்ததை வழங்கவும் அவர்களை மேலும் ஊக்குவிக்கும். சூழல் கடினமானதாக இருத்தல் கூடாது. உகந்த மட்டத்தில் செயலாற்ற குழுவினருக்கு ஆறுதலான பணியிடத்தை வழங்க்ககூடிய வேடிக்கையானதும் ஈடுபாடுடைய சூழலாகவும் இருத்தல் வேண்டும்.
முரண்பாடு தீர்த்தல்
இயல்பாகவும் தனிநபர் வேறுபாடுகள், இலக்குகள், பணிமுறைகள் என்பவற்றின் விளைவாக நாளாந்த வணிக செயற்பாடுகளின் போது ஏற்படக்கூடிய முரண்பாடுகள் தவிர்க்கமுடியாதவை. முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது தலைவர் என்ற வகையில் மிகவும் அமைதியாகவும் மற்றவர்களின் கருத்;துக்கு செவிசாய்த்தல் தவறான புரிதல்களை தவிர்த்துக்கொள்வதற்கு துணைபுரியும். சம்பந்தப்பட்ட சகல தரப்பினர்களுக்கும் கௌரவமளித்தல் தலைவர் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய சிறந்த பண்பாகும். தலைவர் நபர்களின் மீது கவனம்செலுத்துவதை விட பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்த வேண்டும். இது இலக்குரீதியாக செயற்படுவதற்கும் எதிர்கொண்ட பிரச்சினைக்கான மிகப்பொருத்தமான தீர்வை கண்டறிவதற்கும் துணைபுரியும். தலைவர் பேரம்பேசுவதில் மிகச்சிறந்தவராகவும் சமரசம் செய்வதில் விருப்புடையவராகவும் திகழ்தல் வேண்டும். அதிகமான எதிர்நிலை நிகழ்வுகள் இருதரப்பினர்களுக்கிடையிலான சமரசம் ஊடாகவே தீர்க்கமுடியும் என்பதனால் தலைவர் அத்தகையை நிலைமைகளை முகாமைசெய்வதில் வல்லவராக இருத்தல் வேண்டும். சில நிகழ்வுகள் தலைவரால் தீர்க்ககூடிய இயலுமைக்கு அப்பாற்பட்டமையால் அத்தகையை விடயங்களை தீர்ப்பதற்கு மூன்றாம்தரப்பு மத்திஸ்தர் ஒருவர் அவசியமா இல்லையா என்பதை புரிந்துகொள்ள கூடிய இயலுமை தலைவருக்கு இருக்கவேண்டும்.
உபாயரீதியான தீர்மானங்கள்
உபாயரீதியான தீர்மானங்கள் எடுத்தல் தலைவரின் வழக்கமான பணியாக காணப்படுவதுடன் சூழ்நிலைகளை அடிப்படையாககொண்டு எடுக்கப்படும் சில தீர்மானங்கள் கடினமானதாகவும் காணப்படும். தனிப்பட்ட விருப்புக்களுக்கு அப்பால் நிறுவனத்தின் நலத்தை கருத்திற்கொண்டு தீர்மானம் எடுப்பதில் தலைவர் வல்லமை உடையவராக இருத்தல் வேண்டும். வெற்றிகரமான தலைவராக திகழ்வதற்கு, உணர்வுகளை அடிப்படையாக கொண்டு தீர்மானங்களை சமரசம்செய்வதை காட்டிலும் தீர்மானங்களை எடுத்தல்வேண்டும். குறித்த வணிகத்துறையின் தற்கால போக்குகள் மற்றும் முன்னேற்றங்களில் தலைவர் விழி;ப்புணர்வுள்ளவராக இருத்தல் நிறுவனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளை வழங்குவதை எளிதாக்கும். தலைவர் செயற்படுத்த வேண்டிய சில உபாய ரீதியான தீர்மானங்கள் பிரபலமான தீர்மானங்களாக இல்லாவிட்டாலும் நிறுவனத்தின் நலனை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். எடுக்கப்படும் தீர்மானங்களில் தலைவர் திடமானவராக இருப்பதுடன் அவற்றை வேறுபடுத்தாமல் திட்டத்துடன் இணைத்தல் வேண்டும். குறிப்பாக வணிக உலகின் (ஏற்றஇறக்கம், நிச்சயமற்றதன்மை, சிக்கல்நிலை, மற்றும் சந்தேகநிலை) VUCA செயற்பாட்டில் உள்ள போது சிறந்த நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் முறையான கருத்துக்கணிப்பு வழிகள் என்பன சிறந்த உபாயரீதியான தீர்மானங்களுக்கு வசதியளிக்கும். சான்றாக, 1977ம் ஆண்டில், அப்பிள் இன்க் வங்குரோத்துநிலையின் விளிம்பில் இருந்தாலும் ஸ்டீவ் ஜொப்ஸ் மெக் மற்றும் ஐபெட் உற்பத்திகளில் அதிக கவனம்செலுத்தி பலமான உபாயரீதியான தீர்மானங்களை எடுத்தார். இந்நிலை விற்பனை நாமத்தை மாற்றி உலகின் மிகச்செல்வந்த நிறுவனமாக்கியதுடன் அப்பிளை வரலாற்றில் மிகவும் வெற்றிகரமானதாக மாற்றியது. எனவே, ஒரு தலைவரால் நிறுவனத்தின் திசையை மாற்றியமைக்கமுடியும்.
மாற்றங்களை எற்றல்
எப்பொழுதும் மாற்றமடைந்துகொண்டிருக்கும் உலகில் “மாற்றம்” ஒன்றே மாறாதது. வணிக நிறுவனங்கள் மாற்றங்களை ஏற்க கூடியதாக இருக்க வேண்டும் என்பதுடன் அம்மாற்றத்தினூடாக ஏற்படக்கூடிய முன்னேற்றத்தையும் தைரியமாக எதிர்கொள்தல் வேண்டும். மாற்றம் தவிர்க்கமுடியாதது என்பதுடன் மாற்றமுறும் வணிக சூழலொன்றில் விரைவாக மாற்றம்பெற முடியாமை வெற்றிகரமான நிறுவனத்தின் இருப்பையும்; செழிப்பையும் சோதிக்கும். பொறுப்பை வழங்கல் மற்றும் குழு அங்கத்தவர்களை வலுவூட்டுதல் என்பன ஒரு பலமான தலைவர் கொண்டிருக்க வேண்டிய மிகச்சிறந்த பண்புகளில் ஒன்றாக காணப்படுவதுடன் விரைவான தீரமானங்கள் மேற்கொள்வதை இலகுபடுத்தி மாற்றங்களை ஏற்பதற்கு நெகிழ்வுத்தன்மை உயைதாக நிறுவனக்கட்டமைப்பை மாற்றிமைக்கும். மாற்றங்கள் இடம்பெற நேரம் தேவைப்படுகின்ற போது தலைவர் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன் நிறுவனம் தனது இறுதி இலக்குகளை சுமூகமாக அடைவதை உறுதிப்படுத்தக்கூடியதாக நிறுவனத்தினுள் மாற்றத்தை பழக்கப்படுத்துவதற்கு உறுதியான கலாசாரத்தை கொண்டிருத்தல் வேண்டும். மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர், மாற்றகாலத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் தலைவர் பலமிக்க நேர்மறையான மனப்பாங்கை கொண்டிருத்தல் வேண்டும். எலன் மாஸ்க் தன்னை பின்தொடர்பவர்கள் மாற்றமடைவதற்கு வழிநடாத்துவதில் முன்மாதிரிமிக்கவராக உருவெடுத்தார். டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) எனும் அவரது நிறுவனத்தின் ஊடாக, குறிப்பிட்ட வட்டத்திற்கு அப்பால் சென்று சிந்திக்குமாறு வணிக சமூகத்தினருக்கு உறுதியான தகவலொன்றை வழங்கியுள்ளார். எலன் மாஸ்க்கினால்; டெஸ்லா ஊடாக முழு உலகத்திற்கும் மின்கார்களை ஊக்குவிப்பதற்கு முடிந்ததுடன் இறுதியல் நிலைத்துநிற்கும் தெரிவுகள் பற்றி வெளிப்படையாக கலந்துரையாட சமூகத்தினரின் கண்களை திறப்பதற்கு உதவியுள்ளார்.
தலைவர் மாற்றத்தின் முகவராக திகழ்வதுடன் வணிக நிறுவனத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமானவராக காணப்படுகின்றார். வணிக சூழலில் பலமான தலைவர்களை கொண்டிருத்தல் உலகின் பெருநிறுவன ஜாம்பவான்களின் முன்னால் இலங்கை திறம்பட செயற்படுவதற்கு துணைபுரியும்.
இந்த உள்ளடக்கமானது CeFEnI/COSME இன் உதவியுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்டதாகும்.