Diriya

பணப்புழக்கத்தின் முக்கியத்துவம்

பணப்புழக்கம் என்றால் என்ன?

எளிமையான வார்த்தைகளில், பணப்புழக்கம் என்பது உங்கள் கையில் எவ்வளவு பணம் இருக்கிறது, மேலும் உங்களிடம் இருக்கும் மற்ற சொத்துக்களை எந்த அளவுக்கு எளிதாக பணமாக மாற்றுவது என்பதாகும். சந்தை மற்றும் சொத்தின் தன்மையைப் பொறுத்து, ஒவ்வொரு சொத்துக்கும் வெவ்வேறு அளவிலான பணப்புழக்கத்தை நாம் தீர்மானிக்க முடியும். பொருளாதாரத்தில் மிகுந்த திரவ சொத்து எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எதை எளிதாக பணமாக மாற்றலாம்? இந்த அர்த்தத்தில் மிகவும் திரவ சொத்து… பணம்.

எளிமையானது, இல்லையா? பணத்திற்கு அடுத்தபடியாக, வங்கியில் உள்ள பணத்தை மிக எளிதாக பணமாக மாற்றலாம்.

இருப்பினும், நிலம் போன்ற ஒரு சொத்தை பணமாக மாற்றுவது ஒப்பீட்டளவில் கடினம் அல்லவா? நாங்கள் விளம்பரம் செய்ய வேண்டும், வாங்குபவர்களை அதனை வாங்க வைக்க வேண்டும் மற்றும் சில சமயங்களில் தரகர்களை இப்பணிக்கு அமர்த்த வேண்டும். நீங்கள் பரம்பரையாக பெற்ற ஒரு அரும்பொருளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதை விற்று பணமாக மாற்றுவது எவ்வளவு கடினமாக இருக்கும்? சரி, இதற்கான பதில் மிகவும் கடினமாக இருக்கும் என்பதே. அதேபோல், வெவ்வேறு சொத்துக்கள் வெவ்வேறு அளவு பணப்புழக்கத்தைக் கொண்டுள்ளன.

பணப்புழக்கம் ஏன் முக்கியமானது?

தினசரி செயல்பாடுகள் மற்றும் அவசரநிலைகளில் இருந்து அனைத்து செலவுகளையும் கையாள உங்கள் வணிகத்தில் போதுமான பணப்புழக்கத்தை பேணிப் பராமரிப்பது இன்றியமையாதது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில் உங்களை கற்பனை செய்து பாருங்கள்: உங்களிடமிருந்த பணமெல்லாவற்றையும் செலவழித்து, உங்கள் வணிகத்திற்கான இயந்திரங்களை வாங்கிவிட்டீர்கள். செயல்பாடுகளில் இருந்து அதிக பணம் பெறும் வரை வணிக நடவடிக்கைகளுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் அன்றாட செலவுகளை எப்படி கையாளப் போகிறீர்கள்? பணியாளர்களுக்கான ஊதியம்? எனவே, உங்கள் வணிகத்தில் சரியான பணப்புழக்க சமநிலையை பேணிப் பராமரிப்பது முக்கியம்.

பணப்புழக்கத்தின் அளவை எவ்வாறு தீர்மானிப்பது?

உங்கள் வணிகத்தில் திரவப் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு சில சொத்துக்களும் தேவைப்படும், இல்லையெனில் நீங்கள் எந்த வகையான வணிகத்தை நடத்துகிறீர்கள்? ஒரு வணிகத்திற்கான உகந்த பணப்புழக்கத்தை எவ்வாறு தீர்மானிப்பது? இந்த நோக்கத்திற்காக பணப்புழக்க விகிதங்கள் பயனுள்ளதாக இருக்கும். இந்த விகிதங்களின் உதவியுடன், பணப்புழக்கத்தின் அடிப்படையில் உங்கள் வணிகம் நிலையானதா என்பதை நீங்கள் இனம் காண முடியும். இதில் அடங்கியுள்ள விகிதங்கள்:

  1. நடப்பு விகிதம்
  2. விரைவு விகிதம்
  3. செயல்பாட்டு பணப்புழக்க விகிதம்

நடப்பு விகிதமானது தற்போதைய பொறுப்புகள் தொடர்பாக நிறுவனத்தின் தற்போதைய சொத்துக்களுக்கு இடையிலான விகிதமாகும். அது,

நடப்பு விகிதம் = நடப்பு சொத்துக்கள் / நடப்பு பொறுப்புகள்

உங்களிடம் உள்ள தற்போதைய சொத்துக்களைப் பயன்படுத்தி உங்கள் வணிகம் அனைத்து குறுகிய கால கடன்களையும் (ஒரு வருடத்திற்குள்) செலுத்த முடியுமா என்பதை இந்த விகிதம் அளவிடும். Investopedia தற்போதைய சொத்துக்களை நிலையான வணிக நடவடிக்கைகளின் மூலம் சௌகரியமாக விற்கப்படும், நுகரப்படும், பயன்படுத்தப்படும் அல்லது தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் அனைத்து சொத்துக்களையும் வரையறுக்கிறது. ஒரு வருடத்திற்குள் அல்லது ஒரு சாதாரண இயக்க சுழற்சிக்குள் ஒரு நிறுவனத்தின் குறுகிய கால நிதிப் பொறுப்புக்கள். விகிதம் 1 ஐ விட அதிகமாக இருந்தால், அது ஒரு சிறந்த பணப்புழக்க நிலை என்று கருதப்படுகிறது. எவ்வாறாயினும், சரியான புரிதலைப் பெறுவதற்கு, தொழில்துறையில் உள்ள வணிகங்களின் தற்போதைய விகித நிலைகளை நம்முடன் ஒப்பிட வேண்டும்.

அடுத்த பணப்புழக்க விகிதம் விரைவு விகிதம். விரைவு விகிதம், அமில சோதனை விகிதம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு நிறுவனத்தின் குறுகிய கால பணப்புழக்க நிலையை அளவிடுகிறது. விரைவு விகிதம் தற்போதைய கடன்களுக்கு எதிராக உங்கள் பணத்திற்கும் பணத்திற்கு சமமானவற்றுக்கும் இடையிலான விகிதத்தை அளவிடுகிறது. 

விரைவு விகிதம் = பணம் மற்றும் பணத்திற்கு சமமானவை + சந்தைப்படுத்தக்கூடிய பத்திரங்கள் + வருமதி / நடப்பு பொறுப்புகள்

இந்த கூறுகள் எதைக் குறிக்கின்றன என்று நீங்கள் குழப்பமடைந்தால், மேற்கொண்டு இலகுவாக இணைய தேடலை மேற்கொள்ளுங்கள். இங்கேயும், 1க்கு மேல் உள்ள விகிதம் உகந்த பணப்புழக்க நிலையாகக் கருதப்படுகிறது.

இப்போது, நாம் கலந்துரையாடும் கடைசி விகிதம் செயல்பாட்டு பணப்புழக்க விகிதம். பெயர் மிகவும் சுய விளக்கமாக உள்ளது. வணிகத்தின் தற்போதைய பொறுப்புகளை வணிகத்தின் செயல்பாட்டு பணப்புழக்கங்களை மட்டும் பயன்படுத்தி எவ்வளவு சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதை இந்த விகிதம் விளக்குகிறது.

செயல்பாட்டு பணப்புழக்க விகிதம் = செயல்பாட்டு பணப்புழக்கம் / தற்போதைய பொறுப்புகள்

இந்த விடயத்திலும், ஒன்றுக்கு மேல் உள்ள விகிதம் உகந்ததாகக் கருதப்படுகிறது. இப்போது, இந்த மூன்று பணப்புழக்க அளவீடுகளையும் நாம் கருத்தில் கொள்ளும்போது, நாம் அளவிட முயற்சிப்பது, நமது சொத்துக்களைப் பயன்படுத்தி நமது பொறுப்புகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதன் செயல்திறனைத்தான். எனவே, அதிகப்படியான பணப்புழக்கத்தைப் பேணிப் பராமரிப்பது உங்கள் வணிகத்திற்கு எந்தச் சாதகத்தையும் ஏற்படுத்தாது, ஏனெனில் அதன் பண வடிவத்தில் பணம் எந்த வட்டியையும் வருமானத்தையும் ஈட்டித்தராது. எனவே, பணப்புழக்கத்திற்காக பணத்தைச் தங்கி இருக்க விடாமல் சொத்துக்கள் அல்லது வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் நீங்கள் எப்போதும் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். பணப்புழக்க முகாமைத்துவக் கலையை பயிற்சி செய்து கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்!

Exit mobile version