Diriya

கழிவகற்றலும் உற்பத்தி முன்னேற்றமும்

நவீன வணிக உலகம் மிகுந்த போட்டித் தன்மை வாய்ந்தது. எந்தவொரு வணிகமும் முன்னேற்றமடைவதற்கும் தொடர்ச்சியான வளர்ச்சி காண்பதற்கும் பேண்தகு வணிக நடைமுறைகளைப் பற்றியொழுகுவது அவசியமாகும். ஒரு தேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே கழிவகற்றுதலும் உற்பத்தி முன்னேற்றமும் அத்தகைய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் நிலைபெறு தன்மையைப் பேணுவதற்கான அத்தியாவசிய கூறுகளாகக் காணப்படுகின்றன. கழிவகற்றுதலுக்கும் உற்பத்தி முன்னேற்றத்துக்கும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உபாயங்கள் பல காணப்பட்ட போதிலும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தமது நிலைமைக்குத் தக்கவாறு பொருத்தமாக செயற்பாடுகளை முன்னெடுக்க சில உபாய வழிமுறைகள் இனங்காணப்பட்டுள்ளன.

கழிவகற்றலை மேற்கொள்வதற்கான முதற்கட்டப் படிமுறையாக, கழிவுகள் சேருகின்ற பிரதேசங்களை இனங்காண்பதற்கான கழிவுக் கணக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும். கழிவுகளும் போத்தல்களும் இனங்காணப்படின், பொருத்தமான கழிவு முகாமை நுட்பங்கள் நடைமுறைப்படுத்தப்பட முடியும். அவ்வாறான முறைமைகளுள் மூலப்பொருட்கள், வேலையாட்கள், நேரங்கள், நிதிகள் போன்றவற்றின் மூலம் ஏற்படுகின்ற கழிவுகளைக் குறைப்பதற்கான மீளமைப்பு உற்பத்திச் செயன்முறையை நடைமுறைப்படுத்த முடியும். அதிகளவிலான நிலைபேறான பொருட்களின் பாவனை, முற்கூட்டிய திட்டமிடல், தொழிநுட்பங்களையும் உபகரணங்களையும் வாங்குதல், உற்பத்திச் செயன்முறைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒட்டுமொத்த வணிக நடவடிக்கைகள் ஆகியன கழிவுகளைக் குறைப்பதற்குத் துணைபுரிகின்ற அதேவேளை வினைத்திறனையும் உற்பத்தித் திறனையும் முன்னேற்றும். உதாரணமாக, கழிவுகளைக் கையாளுவதற்குக் கட்டணமற்ற இலகுவான மென்பொருளை உபயோகிப்பது செயற்பாட்டை மேற்கொள்வதற்கும், தவறுகளைக் குறைப்பதற்கும் செயற்றிறனை முன்னேற்றுவதற்கும் துணைபுரியும். கடினமான செயற்பாடுகளை விடுவித்து இலகுவான படிமுறையில் செயற்பாடுகளை மேற்கொள்வதனை இது மேம்படுத்துவதுடன் வழக்கமான செயற்பாடுகளை தன்னியக்கம் செய்வதற்கான வழிவகைகளை அறிவதுடன் உயர் பெறுமானம் மிக்க செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அதிகளவில் நேரயம் விரயமாவதையும் இது தடுக்கும்.

மேலதிகமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் பணியாளர்களுக்கான பயிற்சிகளிலும் விருத்திகளிலும் அதிக கவனம் செலுத்துவது கழிவுகளை அகற்றுகின்ற அதேவேளையில் உற்பத்தித் திறனை முன்னேற்றுவதற்கும் துணைபுரிகின்றது. உதாரணமாக பயிற்சி பெற்ற பணியாளர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள வளத்தைத் திறன்மிகு முறையில் பயன்படுத்தி உச்ச அளவில் உற்பத்தித் திறன்வாய்ந்ததாக மாற்றும் வகையில் எவ்வாறு தனது பணிகளை ஆற்ற வேண்டும் என்று அறிந்து செயற்படுவார். அந்த அறிவைத் தனது சக பணியாளருக்கும் கடத்தக் கூடியவராகவும் அவர் செயற்படுவார். வேலைத் தளத்தில் உற்பத்தித் திறனை அதிகரித்த சதவீதத்தில் முன்னேற்றுவதற்குத் துணைபுரிகின்ற வகையிலான விசேட பயிற்சியினைத் தனது பணியாளர்களுக்கு வழங்கியதன் மூலம் அமேசன் நிறுவனம் இதனை மெய்ப்பித்துள்ளது. புதிய தொழிநுட்பம் சார்ந்த பயிற்சிகளை வழங்குதல், தலைமைத்துவ விருத்தி மற்றும் முகாமைத்துவ விருத்தி நிகழ்ச்சிநெறிகளுக்காகச் செலவிடுதல், ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடாத்துதல் போன்றன பணியாளர்களை முன்னரைவிட திறன்மிகுந்த வகையில் பணியாற்ற உதவி புரியும். முன்னேற்றங்களைக் கண்டறிவதற்கான இலக்குகளை நிர்ணயித்தலும் ஸ்மார்ட் செயற்பாடுகளும் முன்னேற்றம் கண்ட பிரிவுகளை இனங்காண்பதற்கும் இத்தகைய பயிற்சிப் பட்டறைகளின் செயற்படு தன்மையைப் பரிசீலிக்கவும் ஏதுவாக்கும்.

முன்னேற்றம் கண்டுள்ள பிரிவுகளைப் பணியாளர்கள் இனங்காண்பதற்கு அவர்களைத் தூண்டுகின்ற வகையிலும் தாம் பணியாற்றுகின்ற சந்தர்ப்பத்தில் கருமங்களை ஆற்றுவதற்கான வழிவகைகளை முன்வைப்பதற்கு ஏற்ற வகையிலும் தொடர்ச்சியாக முன்னேற்றம் காணுகின்ற நடைமுறையினை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் ஏற்றிப்போற்ற வேண்டும். ஏனெனில் எவ்வாறு வணிகம் நடைபெறுகின்றது என்பது பற்றியும் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் எத்தகைய சேமிப்பைக் கொண்டுவர முடியும் என்பது குறித்த நடைமுறை அறிவைப் பணியாளர்களே கொண்டிருப்பர்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் கழிவகற்றல் மற்றும் நிலைபேறான நடைமுறைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு பங்குதாரர்களுடன் தொடர்பைப் பேணமுடியும். நிலையான உற்பத்தி அடையாளத்தைக் கட்டியெழுப்புகின்ற அதேநேரம் கழிவுகளைக் குறைப்பதற்குமான செயற்பாடுகளில் நிலைபேறான நடைமுறைகளை உபயோகிப்பது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் துணைபுரியக்கூடியதாகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் நிலைபெறு தன்மையை மேம்படுத்துவதற்கும் கழிவுகளைக் குறைப்பதற்கும் பின்வரும் வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. காகிதங்கள், திண்மக் காகிதங்கள், பிளாஸ்ரிக் வகைகள் போன்றவற்றின் மூலம் பெறப்படுகின்ற கழிவுகளை மீள்சுழற்சி செய்தல், உணவுக் கழிவுகள் மற்றும் ஏனைய சேதனக் கழிவுகளைக் கொண்டு பசளை தயாரிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், உணவு மற்றும் குடிபானங்களைக் கொண்டு வருவதற்கு மீள்பாவனை செய்யத்தகுந்த பேணிகளைப் பயன்படுத்துமாறு பணியாட்களை அறிவுறுத்துதல், நிலையானதும் சுற்றுச்சூழலுடன் ஒத்துவரக்கூடியதுமான உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் கொள்கையினை நடைமுறைப்படுத்துதல், நிலைபெறு தன்மை கொண்ட நடைமுறைகளைக் கொண்டுள்ள, தீர்வுகளை வழங்கக்கூடிய விநியோகத்தர்களுடன் தொடர்பினை மேற்கொள்ளல், உற்பத்திப் பொருட்களை மீள்சுழற்சிக்குட்படுத்துமாறு வாடிக்கையாளர்களை ஊக்குவித்தல், தெளிவான அறிவுறுத்தல்களையும் பொருத்தமான மீள்சுழற்சி வழிகாட்டல்களையும் வழங்கிப் பொதி செய்தல் போன்றனவாகும். பங்குதாரர்களுடன் இணைந்து செயலாற்றுவது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் மென்மேலும் நிலைபேறான பொறுப்புமிகுந்த உற்பத்தித் திறனை வழங்குகின்ற வணிகச் சூழலைக் கட்டியெழுப்பும்.

மேற்குறித்த உபாயங்களுக்கும் அப்பால், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் கழிவுகளைக் குறைப்பதற்கும் நிறுவனரீதியான உற்பத்தித் திறனை முன்னேற்றுவதற்கும் உரிய துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்களை வெளியிடத்தமர்த்தலும் சிறந்த உபாயமாக அமையும். உதாரணமாக, கணக்காளர், காசாளர், வாடிக்கையாளர் சேவை அலுவலர் போன்ற சிறந்த சேவை வழங்குநர்களை வெளியிடத்தமர்த்துவதன் மூலமாக வணிகத்தின் வெளிக்கள செயற்பாடுகளில் அதிக நேரம் செலவாவதனை விடுவிக்க முடியும் என்பதுடன் அதிக செலவினங்களையும் குறைக்க முடியும். அதேநேரம் அவர்கள் தத்தமது சந்தைகளில் போட்டியிடுவதற்கான தமது திறன்களை வளர்க்கவும் அது துணைநல்கும். வெளியிடத்தமர்த்தல் செயற்பாட்டின் மூலம் முன்னேற்றம் கண்ட நிறுவனமாக வட்ஸ்அப் நிறுவனத்தினை முதன்மை முன்னோடியாகக் கொள்ளலாம். வட்ஸ்அப் செயலியானது சிறிய அளவிலான வணிகமாகக் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் தனது தொடர்பாடல் தொழிநுட்பத் திறன்களை அது வெளியிடத்தமர்த்தி தனது செலவினங்களைத் திறன்பட முகாமை செய்தது. அதன் பயனாக அது துரித வளர்ச்சி கண்டது.

நிறைவாக, கழிவுகளைக் குறைப்பதும் உற்பத்தியை வளர்ப்பதும் ஒன்றுக்கொன்று சமமானது என்பது தெளிவு. கழிவுகளை இழிவாக்கும் உபாயங்களை உள்வாங்குவதன் மூலம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மேலும் போட்டித் தன்மை வாய்ந்தனவாகவும், வருவாய் மிக்கதாகவும், நின்று நிலைக்கும் தன்மை வாய்ந்தவையாகவும் மாற்றமுறும். மூலப் பொருட்களின் செலவினங்களைக் குறைத்தல், மீள்சுழற்சி செய்தல், திறன்வாய்ந்த செயற்பாட்டை முன்னேற்றுதல், சுற்றுச்சூழற் தாக்கத்தைக் குறைத்தல் ஆகியன நிலைபேறான வணிகங்களை நாடுகின்ற வாடிக்கையாளர்களை அதிகளவில் கவருவதற்குத் துணைபுரியும். அதிகரித்துவருகின்ற உற்பத்தித் திறனானது முன்னேற்றமடைந்த தரத்தினைக் குறித்து நிற்கின்றது. ஏனெனில், மீள்பணிக்கான செலவுகளும் இழப்பீடுகளும் பரந்துபட்டே அமையும். அதன் விளைவாக வாடிக்கையாளர்களும் நிறைவுகொள்வர். மேலும், கழிவுகளை இழிவாக்குவதும் உற்பத்தித் திறன் முன்னேற்றமும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் வெற்றிக்கு இன்றியமையாத காரணிகளாகும். கழிவுகளை இழிவாக்குவதிலும் உற்பத்தித் திறன் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்துவதன் மூலம் நிலைபேறான பொறுப்புவாய்ந்த வணிகச் சூழலை உருவாக்குவதில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. வணிக உலகில் அவற்றின் சாதனைகளை நோக்கிய குறிப்பிடத்தக்க உகந்த மாற்றத்தினை உருவாக்குவதில் கழிவுகளை இழிவாக்குவதும் உற்பத்தித் திறன் முன்னேற்றமும் மகத்தான பங்களிப்பை வழங்குகின்றன.


Exit mobile version