Diriya

நெருக்கடியின்போது சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கான விற்பனையாளர் தேர்வின் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் என்ன?

SME Vendors

வியாபாரத்தில் உற்பத்தி மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது நீங்கள் யாருடன் பங்குதாரர்களாக சேர விரும்புகின்றீர்கள் என்பதை தீர்மானிக்க விற்பனையாளர் தேர்வு முக்கியமானது. இந்த பொறுப்புகளின் தன்மை மற்றும் அபாயங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால், விற்பனையாளரைத் தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக விவேகமாக தீர்மானித்து முடிவெடுக்க வேண்டும். விற்பனையாளர் தேர்வு செயல்முறை தந்திரமானது. எனவே நீங்கள் ஒரே நேரத்தில் பல சுயவிவரங்கள் மற்றும் முன்மொழிவுகள் ஊடாகவே பயணிக்க வேண்டும். முதலீடு மீதான வருமானத்தை அதிகரிக்கவும், விற்பனையாளரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் வீணாகாமல் செல்லவும், சரியான விற்பனையாளரைத் தேர்ந்தெடுப்பது அடிப்படையாகிறது. தற்போது நிலவும் நெருக்கடியின் மத்தியில் சரியான விற்பனையாளர்களைத் தேர்ந்தெடுப்பற்காக சில வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.

சிறந்த விலைகளைத் தேடுங்கள்

உங்கள் இலக்கானது எப்போதும் குறைந்த செலவில் அதிகபட்ச பெறுமதியை கொண்டிருத்தல் வேண்டும். நீங்கள் சிறந்த ஒப்பந்தத்தையே பெற்றுள்ளீர்கள் என்பதைப் பற்றி உறுதிப்படுத்தி> நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விலை கோரல்களைப் பெற்றிருத்தல் அவசியம். மற்றவர்களை விட மிகக் குறைவான விலை கோரல்களை சமர்ப்பித்திருக்கும் விற்பனையாளர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விட குறைவானதையே பெறக் கூடியதாக இருக்கும். அல்லது முதலில் உங்களுக்கு வழங்கப்பட்ட உத்தேச செலவுகளுக்கு மேலதிகமாக செலவுகள் அதிகரிக்கக் கூடும். உங்கள் தேவைகளின் ஒட்டுமொத்த அளவையும் குறிப்பிட்டால் மட்டுமே உங்களால் துல்லியமான விலை கோரல்களை பெற முடியும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

அவர்களது வியாபார இருப்பு எத்தகையது?

அவர்கள் வியாபார உலகில் எவ்வளவு காலம் இருக்கிறார்கள் என்பதை அவர்களது அனுபவம் மற்றும் நற்பெயரே மறைமுகமாக எமக்கு எடுத்துக் காட்டும். உங்கள் விற்பனையாளர்கள் ஆற்றிய பணிகள் மற்றும் திட்டங்களை நீங்கள் இலகுவாக பார்க்க முடியும். அவற்றின் இருப்பு காலத்தை கவனத்தில் கொள்வது, புதிய நிறுவனங்களைத் தொடரத் தகுதியற்றது என்று அர்த்தமல்ல. ஏனெனில் இது நீங்கள் எதிர்பார்க்கும் வேலையைப் பொறுத்தது. அவர்களின் ஒன்லைன் மதிப்பீடுகள் மற்றும் ஒன்லைன் இருப்;பை பாருங்கள். மேலும், எதிர்மறையான மற்றும் அதிருப்தியான வாடிக்கையாளர்களது கருத்துக்களை தேடிப் பாருங்கள்.

அபாயங்களைக் குறைக்க நடவடிக்கை எடுங்கள்

அனர்த்த விவரங்கள் அனைத்து வழங்குநர்களுக்கும் அல்லது குறைந்தபட்சம் முக்கியமானவர்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும். இருந்தாலும் நடுத்தர அல்லது பெரிய சப்ளையர்கள் உட்பட நிதி ஆபத்தில் உள்ள வியாபாரங்கள் தொடர்பாக ஆராய்ந்த கவனம் செலுத்துங்கள். அவர்கள் இந்த போராட்த்தின் மத்தியிலும் வெற்றியைக் காணலாம். பொருளாதாரப் போக்குகள், தொழில்துறை அறிக்கைகள், நிறுவனத்தின் நிதி முடிவுகள் மற்றும் சந்தை தொடர்பான பிற சிக்கல்களுக்கு கவனம் செலுத்துங்கள். உங்கள் முன்னணி விநியோகத்தர்கள் தங்கள் நீட்டிக்கப்பட்ட விநியோகச் சங்கிலிகளிலுள்ள அழுத்தங்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விரிவான பகுப்பாய்வுகளைப் பாரருங்கள். சாத்தியமான அல்லது உண்மையான ஆபத்தைத் தணிக்க மாற்றங்களைச் செய்ய தயாராகவும் இருங்கள்.

நிலைத்தன்மை மற்றும் நிதி ஸ்திரத்தன்மை

உங்கள் விற்பனையாளர்களில் ஒருவர் நிதிப் பற்றாக்குறைகள் காரணமாக பாதிக்கப்பட்டு பின்வாங்குவராயின், நிலைத்தன்மையை அடைவதற்கு பல மாதங்கள் செல்லும். அவர்களின் நிதி நிலைமைகளுக்காக ஆதாரங்களை சரிபாருங்கள். அதுதவிர அவர்களது முன்னாள் நிதி விபரங்களையும் சரிபார்க்கவும். அவர்களால் சரியான நேரத்தில் நிதிப் பொறுப்புகளைச் செலுத்த முடியவில்லை அல்லது நிதி உதவி பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏதேனும் உள்ளதா? என பார்க்கவும். அவர்களால் தொடர்ந்து உங்கள் விநியோகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமா? எனச் சரிபாருங்கள். தேவைப்பட்டால் அளவை அதிகரிக்கவும். குறிப்பாக இப்போது நாம் முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியின் மூலம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், உங்களுக்கான உறுதிப்பாட்டைத் தொடரக்கூடிய வலுவான விற்பனையாளர்கள் உங்களிடம் இருக்க வேண்டியது அவசியமாகும்.

உங்கள் வியாபாரத்திற்கான சரியான விற்பனையாளர்களை கவனமாக தேர்வு செய்வதை உறுதிசெய்யக்கூடிய சில முறைகளே இவையாகும். அவர்களுடன் வியாபாரம் செய்வதன் ஊடாக அதிகப்பட்ச பலன்களை நீங்கள் பெறலாம்.

Exit mobile version