சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை வெற்றிகரமான முறையில் கொண்டு செல்வதற்கு இன்றியமையாத அம்சமாக பதிவு பேணுதல் காணப்படுகின்றது. நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை முறையாகப் பதிவுசெய்தல், ஒழுங்கமைத்தல், கண்டறிதல், நிறுவனம் ஒன்றின் நிதிசார் நலன் குறித்த துல்லியமான விளக்கத்தை வழங்குதல் போன்றவற்றை இது உள்ளடக்குகின்றது. பதிவு பேணுதல் என்பது அவ்வப்போது கவனிக்கப்படாததாகவும் குறைமதிப்பு செய்யப்படுவதாகவும் இருக்கின்ற அதேவேளை திறன்மிகு பதிவுபேணல் நடைமுறையானது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் வளர்ச்சிக்கும் உறுதிப்பாட்டுக்கும் குறிப்பிடத்தக்களவில் தாக்கம் செலுத்துகின்றது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் பதிவு பேணலின் முக்கியத்துவம், அதனை மேற்கொள்ளவதற்கான அடிப்படை அம்சங்களை ஆராய்தல், பலதரப்பட்ட பதிவுபேணல் முறைமைகளை அறிதல், சிறந்த நடைமுறைகளை வழங்குதல், அதில் பொதுவாகக் காணப்படுகின்ற சவால்களைத் தீர்த்து வைத்தல், பதிவுபேணல் சேவைகளை வெளியிடத்தமர்த்திப் பெற்றுக்கொள்ளல் சம்பந்தமான தெரிவுகளைக் கருத்திற்கொள்ளல் என்பவை குறித்த புரிந்துகொள்ளலை வழங்குவது இவ்வாக்கத்தின் நோக்கமாகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் சிறந்த வகையிலான பதிவுபேணல் நடைமுறைகளை அறிந்து நடைமுறைப்படுத்துவது தமது நிதிசார் செயற்பாடுகள் குறித்த பெறுமதிமிக்க நோக்குகளை வழங்குவதோடு தகவலறிந்து தீர்மானம் மேற்கொள்வதற்கும் சட்டதிட்ட விதிமுறையறிந்து அதற்கேற்ற வகையில் செயலாற்றுவதை உறுதிப்படுத்துவதற்கும் துணைபுரியும்.
வரவுகளையும் செலவுகளையும் கண்டறிவதன் மூலமும் நிதிசார் திட்டங்களுக்கும் தீர்மானம் மேற்கொள்ளலுக்கும் துணைநல்குவதன் மூலமும் சட்டத்துக்கு அமைய செயற்படுவதனை உறுதிப்படுத்துவதன் மூலமாகவும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் பதிவுபேணுதல் முக்கிய பங்கு வகிக்கின்றது. பணப்புழக்கத்தைக் கண்காணித்தல், வருவாய் முறைமைகளையும் செலவு முறைமைகளையும் ஆராய்தல், வள ஒதுக்கீடுகள் குறித்து தகவலறிந்து தெரிவுகளை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் மேற்கொள்வதற்கு பதிவுபேணல் ஏற்படுத்திக்கொடுகின்றது. நிதிசார் இலக்குகளை வகுத்தல், செயற்றிட்டங்களின் இலாபமீட்டற் தன்மைகளைப் பரிசோதித்தல், செலவினங்களை மீதப்படுத்துகின்ற வாய்ப்புகளை இனங்காணுதல் போன்ற விடயங்களை ஒழுங்குமுறையான பதிவுபேணல் வளப்படுத்துகின்றது. மேலும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் வரி செலுத்துதல் சம்பந்தமான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும், நிதிசார் அறிக்கையிடல் தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும், தண்டப் பணங்கள் செலுத்துவதனைத் தவிர்த்துக்கொள்வதற்கும் பதிவுகளை உரியவாறு பேணிவருவது துணைபுரிகின்றது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் துல்லியமான நிதிசார் பதிவுகளைப் பேணுவதற்கு பதிவுபேணல் பற்றிய கொள்கைகள் அவசியமாகின்றன. கொடுக்கல் வாங்கல் பற்றிய துல்லியமான பதிவுகள் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான நம்பத்தகுந்த தரவுகளை உறுதிப்படுத்துகின்றன. வணிகங்களையும் தனிப்பட்ட கணக்குகளையும் வேறுபிரித்து வைத்துக்கொள்வது பதிவுபேணலை இலகுபடுத்துவதுடன் குழப்பங்களையும் தடுக்கின்றது. பணப்புழக்கத்தைக் கண்டறிதல், பெற்றுக்கொள்ள முடியுமான கணக்குவழக்குகளைக் கண்டறிதல், செலுத்த வேண்டிய கணக்குவழக்குகளைக் கண்டறிதல் ஆகியன சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தமது நிதிசார் விடயங்களை வினைத்திறன் மிக்க வகையில் பேணுவதற்குத் துணைபுரிகின்றன. இத்தகைய கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் பலம்வாய்ந்ததொரு நிதிக் கட்டமைப்பை நிறுவ முடியும் என்பதுடன் தகவலறிந்து முடிவுகளை எட்டவும் நிதிசார் விடயங்களில் உறுதியாகவும் செயற்பட முடியும்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தம்முடைய நிதிசார் பதிவுகளை வினைத்திறனான முறையில் பேணுவதற்கு பொருத்தமான பதிவுபேணல் முறையைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானதாகும். கையெழுத்து முறை மூலமான பதிவுபேணல் நடைமுறை என்பது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் நிறுவனத்துக்குள் மேற்கொள்ளப்படுகின்ற நடைமுறையாக உள்ளது. இப்பாரம்பரிய முறையானது நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை கையெழுத்து மூலமாக பேரேடுகளிலும், பத்திரிகைகளிலும், பதிவுத்தாள்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது. சிறிய அளவிலான நிதிசார் தேவைகளைக் கொண்டுள்ள சிறிய வகை வணிகங்களுக்கு கையெழுத்து மூலமான பதிவுபேணல் பொருத்தமானதாகும். ஏனெனில், அது குறைந்தளவிலான செலவுகளைக் கொண்டமைந்ததாகும். எனினும், அது நேரத்தை செலவழித்து மேற்கொள்வதாக இருப்பதுடன் பிழைகள் ஏற்படுவதற்கும் வணிகம் வளர்ச்சியுற்று வருகின்ற வேளைகளில் அவசியப்படுகின்ற அளவீட்டுத் தன்மையில் குறைபாடு ஏற்படுவதற்கும் இடம்பாடு உள்ளது. மேலும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தமது நிதிசார் பதிவுகளை மேற்கொள்வதற்கு பதிவுத்தாள்கள் பயன்படுகின்றன. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் பலவற்றில் மைக்ரோசொஃப்ட் எக்சல் அல்லது கூகிள் தாள்கள் போன்ற மென்பொருள் பதிவுத்தாள்கள் பதிவுபேணல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பதிவுத்தாள்கள் நெகிழ்ச்சியான, பழக்கப்படுத்திக்கொள்ளக்கூடிய வகையிலான தெரிவுகளைக் கொண்டுள்ளன. அவை வணிகங்களில் தமது வசதிக்கேற்ற வகையில் பதிவு வடிவங்களையும் சூத்திரங்களையும் வடிவமைத்துக்கொள்வதற்கு வசதியளிக்கின்றன. எனினும், அவைகளும் பிழையில் சிக்கிக்கொள்ள முடியும் என்பதுடன் பாதுகாப்பு குறைவானதாகவும் உள்ள அம்சங்களைக் கொண்டிருப்பதனால் கையெழுத்து மூலமான தரவுப் பதிவையே வேண்டிநிற்கக்கூடும். இன்று அதிகளவில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற மென்பொருளாகக் கணக்கீட்டு மென்பொருள் காணப்படுகின்றது. இம்மென்பொருளானது ஒருங்கமைந்த மற்றும் தன்னியக்க முறையிலான பதிவுபேணல் தீர்வினை வழங்குகின்றது. குயிக்புக்ஸ், செரோ, பிரஷ்புக்ஸ் போன்ற கணக்கியல் மென்பொருள்கள் தன்னியக்க கொடுக்கல் வாங்கல் பதிவுகள், வங்கி ஒருங்கமைப்புகள், நிதிசார் அறிக்கையிடல்கள், கட்டண அறிக்கைகள் போன்ற அம்சங்களை வழங்குகின்றன. அவை பதிவுபேணல் செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் கையெழுத்தில் ஏற்படும் பிழைகளைக் குறைத்து தற்காலத்துக்கேற்ற நிதிசார் நோக்குகளை ஏற்படுத்திக்கொடுக்கின்றது. எனினும், கணக்கியல் மென்பொருள்கள் ஆரம்பகட்ட முதலீடுகளையும் கொண்டிருக்கக்கூடும்.
பதிவுபேணல் முறைமையொன்றைத் தெரிவு செய்கின்ற சந்தர்ப்பத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் நிறுவனத்திற்குள் காணப்படுகின்ற நிதிசார் கொடுக்கல் வாங்கலில் காணப்படுகின்ற சிக்கற் தன்மை, வணிகத்தின் அளவு, வணிகம் அளவீடு செய்யப்படுவதற்கான தேவைப்பாடு, கையிருப்பிலுள்ள பணம், தொழில்நுட்பம்சார் நிபுணர்களின் அளவு போன்ற காரணிகளைக் கருத்திற்கொள்ளல் வேண்டும். பாவனையாளருக்கு உகந்த முறையில் உள்ளதா என்பதையும் வாடிக்கையாளருக்கு ஏற்ற வகையில் உள்ளதா என்பதையும், வணிகத்தின் ஏனைய அம்சங்களுடன் பொருந்தும் தன்மை கொண்டதாக உள்ளதா என்பதையும் மதிப்பிட்டுக்கொள்ளல் இன்றியமையாததாகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் வித்தியாசமான அம்சங்களைக் கவனமாகப் பரிசீலிப்பது தமது குறிப்பிட்ட தேவைகளுடன் ஒத்துப்போகின்ற விடயங்களைத் தேர்ந்தெடுப்பதற்குத் துணைபுரிவதுடன் தமது நீண்ட கால நிதிசார் இலக்குகளுக்கும் துணைபுரிகின்றது.
முதலீடுகளிலிருந்து உச்சபட்ச நன்மைகளை ஈட்டிக்கொள்வதற்கு திறன்மிகுந்த கணக்கியல் முறைமையொன்றைப் பெற்றுக்கொள்வது மாத்திரம் போதுமானதாக அமையாது. அந்த முறைமைகளானவை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் பதிவுபேணல் நடைமுறைகளை சிறந்த வகையில் மேற்கொள்வதோடு இணைந்ததாக அமைதல் வேண்டும். இல்லாவிடின் முதலீடானது ஈற்றில் பிரயோசனமற்றதாகிவிடும்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் ஒழுங்கமைந்த பதிவுபேணல் நடைமுறைகளானவை நிதிசார் பதிவுகள் ஒழுங்குமுறையில் பேணப்படுவதற்குத் துணைபுரியும். கொடுக்கல் வாங்கல்களை உரியவாறு வகைப்படுத்திப் பட்டியலிடல், பற்றுச்சீட்டுகளினதும் கட்டணச்சீட்டுகளினதும் பிரதிகளைப் பத்திரப்படுத்துதல், அறிவார்ந்த முறையில் ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற விடயங்களை இது உள்ளடக்குகின்றது. வலுவான பதிவுபேணல் முறையொன்றை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தகவல்களை இலகுவாக மீளப்பெற்றுக்கொள்வதற்கும் நிதிசார் செயற்பாடுகளைக் கண்டறிந்து கொள்வதற்கும், கணக்காய்வு அல்லது நிதியியல் ஆய்வுகளுக்கு அனுசரணை வழங்குவதற்கும் இவகுவாக இருக்கும். அடுத்தபடியாக உள்ள சிறந்த நடைமுறைதான் தொடர்ச்சியான மீளிணக்கம் ஆகும். அதாவது வங்கிக் கூற்றுகளையும், கடனட்டைக் கூற்றுகளையும், ஏனைய நிதியியற் கூற்றுகளையும் தொடர்ச்சியாக மீளிணக்கப்படுத்தி வருவது இன்றியமையாததாகும். ஏதேனும் முரண் தென்படுகின்றதா என்பதனை இனங்காண்பதற்கு பதிவுபேணல் தரவுப்பேழையில் உள்ள பதிவுகளை சரியான முறையில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்ட வங்கிக் கூற்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இச்செயன்முறையில் அடங்குகின்றது. தொடர்ச்சியான மீளிணக்கமானது பிழைகளை இனங்காண்பதற்கும், மோசடி நடவடிக்கைகளைக் கண்டறிவதற்கும், நிதியியற் பதிவுகளின் துல்லியமான தன்மையினை உறுதிப்படுத்துவதற்கும் துணைபுரிகின்றது. மேலும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் நிதியியற் கூற்றுகளையும் அறிக்கைகளையும் தொடர்ச்சியாக மாற்றியமைத்து மீளாய்வு செய்தல் வேண்டும். இவற்றுள் வருமான கூற்றுகள் (இலாப நட்ட கூற்றுகள்), ஐந்தொகை, பணப்புழக்கம் பற்றிய அறிக்கைகள் போன்றவை அடங்கும். இத்தகைய அறிக்கைகளை ஆராய்வது வணிகத்தின் நிதிசார் ஆரோக்கியம் குறித்த நோக்குகளை வழங்குவதுடன் வணிகத்தின் போக்குகளைத் திட்டவட்டப்படுத்தி தீர்மானம் மேற்கொள்வதற்கும் துணைபுரிகின்றது. மேலும், மீளப்பெற்றுக்கும் வகையிலான தரவுகளை வைத்துக்கொள்வதும் முக்கியமானதாகும். தரவுகள் தொலைந்து போவதைத் தடுப்பதற்கு பதிவுபேணல் தரவுகளைத் தொடர்ச்சியான முறையில் மீளப்பெற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தமது நிதிசார் பதிவுகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு இணையவழி அமைந்த தரவுச் சேகரிப்பை அல்லது உபரியான தகவற்சேகரிப்பான் மூலமான தரவுச் சேகரிப்பைப் பயன்படுத்திக்கொள்ளல் வேண்டும். தொடர்ச்சியான முறையில் தரவுகளை மீளப்பெற்றுக்கொள்ளும் செயற்பாடானது வன்பொருள் செயலிழத்தல், திருட்டு, அனர்த்தங்கள் போன்றவற்றின் மூலமாக தரவுகள் தொலைந்து போவதிலிருந்து தரவுகளைப் பாதுகாப்பதுடன் மிகமுக்கியமான நிதிசார் தகவல்களது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிசெய்கின்றது. அதேசமயம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தரவுகளின் பாதுகாப்பைப் பேணிப்பராமரிப்பதும் உணர்பூர்வமான நிதிசார் தகவல்களைப் பாதுகாப்பதும் இன்றியமையாததாகும். கடவுச்சொல் பாதுகாப்பு, குறியாக்கம் மற்றும் அணுகுதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தல் போன்ற பொருத்தமான பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தமது பதிவுபேணல் தரவுகளைப் பாதுகாப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். தரவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் இணையவழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கின்ற வகையில் மென்பொருளையும், தரவுப்பேழையையும் தொடர்ச்சியான முறையில் இற்றைப்படுத்துதல் போன்ற விடயங்களில் பணியாளர்களை அறிவூட்டுவது முக்கியமானதாகும்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் எதிர்கொள்ளப்படுகின்ற பதிவுபேணல் சார்ந்த சவால்கள் என்று வரும்போது அவற்றுள் கால நேரம் சார்ந்த மட்டுப்பாடுகள், தொழிநுட்பம் சார்ந்த சிக்கல்கள், மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள், நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் தட்டுப்பாடு போன்றவை அடங்கும். பதிவுபேணல் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் பற்றாக்குறை, போதியளவு நேரம், தொழிநுட்பம் சார்ந்த விடயங்களை உள்வாங்குவதிலும் பயன்படுத்துவதிலும் காணப்படும் சிக்கல்கள் ஆகியன சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் சவால்களைத் தோற்றுவிக்கின்றன. மேலும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் அதிகளவில் நிதி அடிப்படையிலும் மனிதவள அடிப்படையிலும் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. அவை பதிவுபேணலில் துல்லியத் தன்மையையும் நேரத்துக்குள் நிறைவேற்றுவதையும் பாதிப்புறச் செய்கின்றன. இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் பதிவுபேணல் நடவடிக்கைகளை வெளியிடத்தமர்த்துவதையும் அறிவையும் திறனையும் வளப்படுத்துவதற்கான பயிற்சிகளையும் கல்வியையும் வழங்குவதையும் பாவனையாளருக்கு உகந்த வகையிலான தொழிநுட்பத் தீர்வுகளை ஏற்படுத்திக்கொடுப்பதையும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.வினைத்திறன் மிக்க பதிவுபேணல் நடவடிக்கைகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் பற்பல நன்மைகளை ஈட்டிக்கொடுக்கின்றன. தகவலறிந்து தீர்மானம் மேற்கொள்வதற்கான துறைபோன நிதியியற் பார்வை, சட்டரீதியான தேவைப்பாடுகளையும் வரி சம்பந்தப்பட்ட தேவைப்பாடுகளையும் அமைந்து ஒழுகி நடத்தல், நிதி ஒதுக்கீடுகளுக்கும் கடன் ஒதுக்கீடுகளுக்குமான மேம்பட்ட நம்பகத் தன்மை, வணிக ஆய்வுக்கும் திட்டமிடலுக்கும் தேவையான பெறுமதிமிக்க தரவுகள், செயற்றிறன் மிக்க கணக்காய்வுகள், நேர்த்தியான கவனமான முன்நகர்வு நடவடிக்கைகள் ஆகியன அத்தகைய நன்மைகளுள் அடங்குகின்றன. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் பதிவுபேணலின் முக்கியத்துவத்தை அறிந்து தேவையான வளங்களைக் கொள்வனவு செய்வதன் மூலம் தமது நிதி முகாமைத்துவத்துக்குத் திடமான அடிப்படையை நிறுவி எதிர்கால வெற்றிக்கு வழிகோல முடியும்.