Diriya

சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆபத்துக்களை இனங்காணுதல்

இன்று வணிகங்கள் தங்கள் ஆட்சி நிர்வாகம் மற்றும் இணக்கப்பாடு நோக்கத்தை கணக்கியல் மற்றும் செயல்பாடுகளின் குறுகிய எல்லைகளுக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தி விட முடியாது. வணிக தொடர்ச்சி மற்றும் போட்டித்திறன் தொடர்பான பல ஆபத்துகள், மற்றும் சமூக அல்லது ஒழுங்குமுறை (அல்லது இரண்டும்) “செயல்படுவதற்கான உரிமம்”, “சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆட்சி நிர்வாகம்” என பொதுவாக அறியப்படும் சுற்றுச்சூழல் அல்லது சமூகப் பிரிவுகளின் கீழ் ஒத்திசைகின்ற ஒரு வணிகத்தை நிர்வகித்து, முன்னோக்கிப் பயணித்தல் வேண்டும். முதலீட்டாளர்கள், கடன் கொடுனர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வருங்கால ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோரால் ஒரு நிறுவனத்தின் செயல்திறன் அதிகமாக மதிப்பிடப்படும் “மும்முனை இலக்கு” என அறியப்படுகின்ற பணியாளர்கள், பூமி, இலாபம் ஆகிய அளவீடுகளுக்கு இவை உட்படுத்தப்படுகின்றன. 

இந்த துறைகளில் கவனம் செலுத்தாத ஒரு நிறுவனத்திற்கு, ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், உண்மையான சேதத்தை ஏற்படுத்தும் வரை வெளித்தெரியாமல் இருக்கலாம்.

இத்தகைய ஆபத்துக்கள் எப்போது எழுகின்றன?

விழுமியங்களை விடவும் இலாபத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் போது

மனிதர்களாகிய நாம், இலகுவில் மீள்நிரப்ப முடியாத வகையில், வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டுள்ள நமது சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாக்கும் தார்மீக கடமையை எப்போதும் கொண்டுள்ளோம். இதேபோல், நமது மிக அத்தியாவசியமான வளமாக, வழக்கமாக நமது மிகப்பெரிய செலவு மையமாக அமைந்துள்ள நமது மனித வளங்கள் அல்லது நமது ஏனைய முக்கிய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக சமூகத்தை வளர்ப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் நாங்கள் மிகவும் பாரதூரமாக செயற்படுகின்றவர்களாக இருக்கக்கூடும்.

இலாபம் ஈட்டுவதற்கான பந்தயத்தில், வெளிப்புற இயக்கச் சூழலுக்கு, மற்றும் நமது வணிகத்திற்குள்ளும் கூட நாம் ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் அல்லது சமூகத்தின் மீதான தீங்குகளை நாம் சில சமயங்களில் மறந்து விடுகிறோம். இது பல தலைமுறைகளை பாதிக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் நிலைமைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், இவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு அவதானத்துடன் கையாள வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகள், நாணயம் மற்றும் விழுமியங்கள் போன்ற சமூக அம்சங்கள் எப்பொழுதும் நிலைநிறுத்தப்பட வேண்டும். மாறிவரும் இந்த காலங்களில், காலநிலை மாற்றத்திற்கான எந்தவொரு பங்களிப்பையும் தணிப்பதற்கும் அதன் அனைத்து விளைவுகளையும் நிர்வகிப்பதற்கும் வணிகமானது அதன் இலக்குகளையும் தயாரிப்புகளையும் சீரமைக்க வேண்டும்.

நிறுவனங்களும் சுற்றுச்சூழலும் ஒன்றையொன்று சார்ந்தது இல்லை என்ற கருத்து

தாம் செயல்படும் பௌதீகச் சூழல் இல்லாமல் நிறுவனங்கள் ஒருபோதும் தளைத்தோங்க முடியாது. அவை தங்கள் வணிகங்களை வெற்றிகரமாக மாற்றச் செய்யும் தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதற்கு சூழலில் இருந்து வளங்களைப் பெறுகின்றன. இந்த பரஸ்பர உறவு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் வணிகத்தின் வளர்ச்சிக்கு அவை பயன்படுத்தப்படுவதற்கும் இடையே ஒரு சமநிலையை தோற்றுவிக்கின்றது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியது முக்கியம்.

நீண்ட கால நிலைபேற்றியலை விட குறுகிய கால இலக்குகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் போது

குறுகிய கால இலக்குகளை அடைவதற்கு எளிதான குறுக்குவழிகள் அற்புதமானவை என்பதில் சந்தேகமில்லை. எவ்வாறாயினும், குறுகிய கால பெறுபேறுகளின் பின்விளைவுகளை மதிப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் அவை முன்னெப்போதும் இல்லாத, வலிந்த நிதி கட்டமைப்பின் விளைவுகள், மன உறுதி இழப்பு அல்லது நிறுவனத்தின் வெளித்தோற்றத்திற்கு ஏற்படும் சேதாரம், சுற்றுச்சூழல் மாசுபாடு அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதாரம் போன்ற நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்துகின்றன. 

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மனித செயல்பாடுகளால் வளிமண்டலம், நீர் மற்றும் நிலத்தில் தற்காலிக அல்லது நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்துகின்றவையாக இருக்கலாம். சுற்றுச்சூழல் தாக்கம் என்பது ஒரு நிறுவனத்தின் அ) செயல்பாடுகள், ஆ) தயாரிப்புகள், இ) செயல்முறைகள் அல்லது ஈ) சேவைகளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுற்றுச்சூழலில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்படும் மாற்றமாகும்.

பணியிட நடவடிக்கைகளில் சமூகப் பிரச்சினைகள் காணப்படுவதுடன், அவை சுற்றியுள்ள சமூகங்களையும் பாதிக்கலாம்.

மிகவும் பொதுவான சுற்றுச்சூழல் மற்றும் சமூக அபாயங்களில் சில

சுற்றுச்சூழல் அபாயங்கள்சமூக அபாயங்கள்
காற்று உமிழ்வுகள்தொழிலாளர் மற்றும் பணி நிலைமைகள்
எரிசக்தி பயன்பாடுதொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு
அபாயகரமான பொருள் பயன்பாடு சமூக ஆரோக்கியம், காப்பு மற்றும் பாதுகாப்புஆதிவாசி அல்லது பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் நலன்
நில மாசுபாடுகலாச்சார பாரம்பரியம்

ஆழமாக ஆராய்தல்: வெளிப்படக்கூடிய ஆபத்துக்களின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது

பொறுப்பு ஆபத்து: செயல்பாடுகளில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆபத்துக்களை நிர்வகித்தல் மற்றும் மாசுபாட்டை சுத்தம் செய்வதில் உள்ள அலட்சியத்தால் ஏற்படும் சேதங்களுக்கான மூன்றாம் தரப்பு இழப்பீட்டுக் கோரல்களை நிவர்த்தி செய்வதற்கான தண்டங்கள், அபராதங்கள் மற்றும் செலவுகள் உட்பட. வாடிக்கையாளரின்/முதலீட்டாளரின் செயல்பாடுகளுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆபத்துக்கள்.

நிதி ஆபத்து: சுற்றுச்சூழல் மற்றும் சமூக பிரச்சனைகளின் விளைவாக செயல்பாடுகளில் ஏற்பட வாய்ப்புள்ள இடையூறுகளிலிருந்து ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறைகளைத் திறம்பட கையாளத் தவறினால், வணிகச் செயல்பாடுகளும் வங்கியும் ஆபத்திற்கு உள்ளாகக்கூடும்.

நற்பெயர் ஆபத்து: மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக நடைமுறைகளுடன் தொடர்புடைய எதிர்மறையான விளம்பரம் மற்றும் அதன் வர்த்தகநாம மதிப்பு மற்றும் தோற்றத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

கடன் ஆபத்து: சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகளின் விளைவாக கொள்வனவாளர் ஒருவர் ஒப்பந்த ரீதியான தனது கடப்பாடுகளை நிறைவேற்ற முடியாத போது.

சந்தை ஆபத்து: சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் காரணமாக பரிவர்த்தனையுடன் தொடர்புடைய பிணையத்தின் மதிப்பு குறைவதில் இருந்து உருவாகிறது.

நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய இறுதியான விளைவு நற்பெயருக்கு ஏற்படுகின்ற களங்கம் – இது உண்மையான நீண்ட கால நிதி மற்றும் மனிதவள தாக்கங்களை ஏற்படுத்தும்; இலாப இழப்பு அல்லது சொத்து இழப்பு, ஒரு நிறுவனமாக உங்கள் வெற்றியின் நீண்ட காலப் பயணத்தில் பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடியது.

Exit mobile version