Diriya

பொருளாதாரத்திட்டமிடல் மூலம் உங்கள் எதிர்கால பிரச்சினைகளை தவிர்க்கவும்

Caught in Weeds

நீங்கள் வியாபாரமொன்றை நடத்திச் சென்றாலும், வியாபாரத்திற்காக வேலை செய்தாலும், பலமான நிதி எதிர்காலத்திற்காக பொருளாதாரத்திட்டமிடல் எப்போதும் மிக முக்கியமானது. நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார சரிவுகளை தவிர்த்துக் கொள்வதற்கு அது உங்களுக்கு உதவும். நீங்கள் அதற்காக செய்ய வேண்டிய சில எளிய வழிமுறைகள் கீழே உள்ளன.

பொருளாதாரத்திட்டமிடல் ஊடாக உங்கள் வரவை விட குறைவாக செலவிடுங்கள்

நீங்கள் கணிசமான இலாபம் ஈட்டுவதால், உங்கள் செலவையும் அதிகரிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. நீங்கள் ஈட்டும் மேலதிக இலாபம் எதிர்காலத்தில் வரக்கூடிய கடினமான காலத்திற்கான சேமிப்பாக அல்லது வியாபாரத்தின் வளர்ச்சிக்காக மீள முதலீடு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தை விட அதிகமாக செலவு செய்தால், நீண்டகால இழைப்பை சந்திப்பது உறுதியாகும்.

பொருளாதாரத்திட்டமிடல் ஊடாக தேவையான நேரத்தில் உதவியை பெறுங்கள்

உங்களால் உங்கள் வர்த்தக யுத்திகளை சரியாக கையாள முடியாவிட்டால், திட்டமிட முடியாவிட்டால் அல்லது அதை திறம்பட செய்ய போதுமான அனுபவம் இல்லாவிட்டால், அதற்குரிய சரியான வளங்கள் உள்ளன. நீங்கள் அவற்றை தெரிவு செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் வியாபாரத்திற்கு பணிப்பாளர் சபை ஒன்றை நிறுவதற்கு அல்லது ஒவ்வொருவருக்கு அறிவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ஒத்துழைக்கும் உள்ளுர் வியாபார குழுக்களுடன் இணைந்து கொள்ள முடியும். இல்லாவிடின் வியாபார ஆலோசகர் ஒருவரை நியமிக்கலாம். அவ்வாறு இல்லாவிடின் வீட்டிலுள்ள மூத்த உறுப்பினர் ஒருவரை கூட உங்களுக்கு உதவுவதற்காக தெரிவு செய்ய முடியும்.

பன்முகத்தன்மை மற்றும் ஒத்துழைப்புடன் வேலை செய்யுங்கள்

வியாபாரத்தை வலுப்படுத்த பல்வகைப்படுத்தல் தேவை. இது தொடர்பாக எமது முன்னைய கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும் இங்கேயும் மீள வலியுறுத்துகின்றோம். உங்கள் வியாபாரமானது ஒரு தன்மை அல்ல என்பதால் அதற்கேற்றவாறு வேறு தயாரிப்புகளைத் தேடுங்கள். அதுதவிர நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றதும் உங்கள் வியாபாரத்தை மிகவும் செயற்திறன்மிக்க வகையிலும் மேம்படுத்தக்கூடிய ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டாண்மைகளை நோக்கிப் பாருங்கள்.

எப்பொழுதும் எதிர்கால சிந்தையுடன் இருத்தல்

ஒரு வியாபாரத்தை நடத்திச் செல்வதற்கு சிறந்த திட்டமிடல்> முன்யோசனை ஆகியன இருக்க வேண்டும். நீங்கள் தெளிவான நோக்குடன் வாய்ப்புகளைக் கண்டறிந்து சவால்களைக் கணிக்க முடியாவிட்டால் பொருளாதார ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். எப்போதும் எதிர்காலத்தைப் காண்பதற்கு பழகிக் கொள்ளுங்கள். எத்தகைய சிக்கல்களைத் தீர்க்கவும் உங்கள் முதலீட்டாளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்த மூன்று படிகளும் வெளிப்படையானவை போல் தோன்றினாலும் அதிகமாக தொழில்முனைவோர் அவற்றைத் செய்வதற்கு தவறுகின்றனர். அவர்கள் இந்த சிக்கல்கள் தோன்றும் வரை இவற்றை உணர்வதில்லை. இன்றே இவற்றை நீங்கள் கடைபிடிப்பதன் மூலம் நிதி திட்டமிடல் ஏமாற்றங்களை தவிர்க்கலாம்.

பொருளாதாரத்திட்டமிடல் பற்றிய மேலதிக தகவல்களை திரிய இணையத்தளத்தில் பார்க்கவும்.

Exit mobile version