Diriya

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் எவ்வாறு சிறு வியாபாரத்தை கட்டியெழுப்புவது?

How to Grow a Small Business

இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில் சிறு வியாபாரத்தை கட்டியெழுப்புவதானது, தொற்றுநோய்க்கு முன்பே குறிப்பிட்ட அளவு கணக்கிடப்பட்ட ஆபத்து நிறைந்ததாக இருந்தது. இப்போது முழு உலகமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பது சவால் நிறைந்தது. ஆனால் அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில் சிறு வியாபாரத்தை மேம்படுத்துவது சாத்தியமற்றது அல்ல. இவற்றை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

பொருளாதார சரிவை சமாளித்தல்

உங்கள் வியாபார உத்தி அல்லது மாதிரியின் ஒரு பகுதியாக உங்களுக்குத் தேவைப்படும் முதலாவது விடயமாக இருப்பது எதுவெனின் பொருளாதார சரிவை சமாளிக்க உதவும் செயற்திட்டமாகும். நீங்கள் தீட்டிய திட்டம் இனி சாத்தியப்படாது அல்லது சில காரணங்களால் வழக்கற்றுப் போய்விட்டது என்பதை நீங்கள் உணர்ந்தால், உங்கள் வியாபாரத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய யதார்த்தமான மற்றும் உற்பத்தி வழிகளை பயன்படுத்த வேண்டும். பொருளாதார சரிவை சமாளிக்க நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டங்கள் உங்கள் வியாபாரத்தின் தன்மை, நாட்டில் உங்கள் வியாபாரத்திற்கான இடம், முக்கிய ஆதாரங்களுக்கான அணுகல் ஆகியவற்றின் அடிப்படையில் பெரிதும் மாறுபடும். நீங்கள் எதிலும் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்னர், இதனை ஆராய்தல் நல்லது. ஒரு சிறந்த நிதி முதலீட்டு நிபுணரிடம் கலந்துரையாடி ஆலோசனை பெறுவது உங்களுக்கு உதவும்.

சமூக ஊடகத்தை அதிகபட்சம் பயன்படுத்துங்கள்

அபிவிருத்தியடைந்த வரும் நாட்டில் உங்கள் சிறு வியாபாரத்தை மேம்படுத்துவதே சிறந்த அணுகுமுறையாகும். உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மையின் போது, சமூக ஊடகங்கள் மூலம் வரும் வியாபார திறனை அதிகப்படுத்துவதே உங்கள் தீர்வாக இருக்க வேண்டும். Facebook, Instagram, LinkedIn, YouTube, Twitter, Tiktok போன்ற அனைத்து சமூக ஊடக நீங்கள் பயன்படுத்த முடியும். இது எவ்வாறு உங்களுக்கு உதவும் என சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

வாடிக்கையாளரால் நிர்மாணிக்கப்பட்ட உள்ளக உருவாக்கம்

பொருளாதார மந்தநிலையின் போது கூட ஒரு சிறு வியாபாரத்தை வளர்ப்பதற்கான மற்றொரு எளிதான மற்றும் குறைந்த மூலதன வழி, உங்கள் வாடிக்கையாளர்கள் மூலம் உங்களுக்குத் தகுதியான நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் வெல்வதாகும். உங்கள் மதிப்புகள் மற்றும் உயர் தரங்களை உங்கள் வாடிக்கையாளருக்கு சொல்வதற்கு பதிலாக, பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்துங்கள். வாடிக்கையாளர்களிடம் நேர்மையான கருத்து மற்றும் மதிப்புரைகளைக் கேட்டு அவற்றை செயற்படுத்துங்கள். வாடிக்கையாளர்கள் ஒரு வர்த்தக நாமத்தின் மீது மற்ற வாடிக்கையாளர்களை நம்புவார்கள்.

எப்போதும் சிறு அளவில் வியாபாரத்தை தொடங்குங்கள்

உங்கள் வணிக யோசனை எதுவாக இருந்தாலும், சிறியதாகத் தொடங்குவது எப்போதும் விவேகமானது. நீங்கள் எப்பொழுதும் பௌதீக ரீதியாக விற்பனையகத்தை தொடங்குவதற்குப் பதிலாக ஒன்லைன் வியாபாரததை வைத்திருக்கலாம். நீங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை வியாபாரத்தின் வளர்ச்சிக்காக மீண்டும் முதலீடு செய்யுங்கள். முழுமையான தேவையில்லாத செலவினங்களைக் குறைத்து அதன் மூலம் சேமிக்க நடவடிக்கை எடுங்கள்.

அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில் சிறு வியாபாரத்தை வளர்ப்பது சவாலானதாக இருக்கும் என்பதே உண்மை. இருப்பினும், நீங்கள் ஆராய்ச்சி செய்தால், இந்த விதிகளில் சிலவற்றைப் பின்பற்றி, உங்கள் வியாபாரத்தில் தொடர்ந்து முதலீடு செய்தால், அது வளர்ச்சியடைந்த செல்லும்.

எங்கள் வலைப்பதிவை தொடர்ந்து வாசித்து நினைவில் கொள்ளுங்கள், ஏனென்றால் இலங்கையின் பொருளாதாரத்தில் நீங்கள் எவ்வாறு செழிப்பானவர்களாக முடியும் என்பதற்கான மேலதிக தகவல்கள் உள்ளன. மேலும் பல உத்திகள் தரப்பட்டுள்ளன.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சிறு வியாபாரத்தைக் கட்டியெழுப்புவது பற்றிய மேலதிக தகவல்களைப் பெற திரிய இணையத்தளத்தைப் பார்க்கவும்.

Exit mobile version