Diriya

படைப்பாற்றல் புத்தாக்கமும் வியாபாரமும்

படைப்பாற்றல் எந்தவொரு தொழிலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உண்மையில்> பணியிடத்தில்
படைப்பாற்றலை ஊக்குவிப்பதன் ஊடாக> வியாபாரத்தில் அவர்களது வாடிக்கையாளர்களும் ஊழியர்களும்
பாராட்டப்படக்கூடிய தனித்துவமான தீர்வுகள் மற்றும் புதுமையான சலுகைகளைக் கொண்டு வர உதவும்.
ஆக்கப்பூர்வமாக இருப்பதற்கும் புதுமைகளை உருவாக்குவதற்கும் இந்த திறன் உங்கள் வியாபாரத்தில்
போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்தி> சரியான வாடிக்கையாளர்களையும் ஈர்க்க உதவும்.

பணியிடத்தில் படைப்பாற்றல் என்றால் என்ன?

இச்சொல் வியாபாரத்தில் புதுமையான தீர்வுகள் மற்றும் கற்பனையான யோசனைகளைக் கொண்டு வந்து>
பின்னர் அவற்றை யதார்த்தமாக்குவதற்கான உங்கள் திறனைக் குறிக்கிறது. உங்கள் ஊழியர்களுக்கு
ஊக்கமளிக்கும் ஒத்துழைப்பு மற்றும் நேர்மறையான பணிச்சூழலின் உணர்வை வளர்ப்பதற்கு இந்த
படைப்பாற்றலை நீங்கள் பயன்படுத்தலாம். ஆக்கப்பூர்வமான செயல்முறையானது> பல்வேறு
கண்ணோட்டங்களில் கேள்விகளைக் கேட்கவும்> எந்த சவாலையும் அணுகவும் உங்களை அனுமதிக்கிறது.
இந்த குணங்கள் அதிக குழுப்பணி மற்றும் எண்ணங்கள் தோற்றங்களுக்கு ஊக்குவிக்க உங்களுக்கு உதவும்.
இது இறுதியில் வியாபாரத்திற்கு பயனளிக்கும். உங்கள் பணியாளர்கள் அச்சமற்ற தன்மைக்கு இடமளிப்பது
படைப்பாற்றலை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

புதிய வாய்ப்புகளை அடையாளம் காணுதல்

நீங்கள் உங்கள் மனதைத் திறந்து> புதிய மற்றும் ஆக்கபூர்வமாக விடயங்களை பார்க்க ஆரம்பிக்கையில்>
நீங்கள் இதுவரை பார்த்திராத வாய்ப்புகளை அடையாளம் காணத் தொடங்குவீர்கள். எல்லாவற்றையும்
சவாலாகவும் வளர்ச்சிக்குத் தடையாகவும் பார்க்காமல்> வியாபாரத்தில் வளர உங்களை அனுமதிக்கும்
கேள்விகளைக் கேளுங்கள். இதுவே அடிப்படையில் வளர்ச்சி மனப்பான்மை எனப்படுகின்றது. மேலும்
எந்தவொரு வணிகத்திலும்> எந்தத் தொழிலிலும் ஒவ்வொருவரும் ஊக்குவிக்க வேண்டும் மற்றும் பயிற்சி
வழங்க வேண்டும்.

படைப்பாற்றல் மற்றும் புதுமைகள் ஒன்றையொன்று ஊக்குவிக்கின்றன

புதுமை என்பது புதிய கருத்துக்கள் மற்றும் யோசனைகளை அறிமுகப்படுத்தி பயன்படுத்துவதற்கான
செயல்முறையாகும். படைப்பாற்றல் என்பது உங்களை அதற்கு வழி நடத்தும் செயல்முறையாகும். இதன்
விளைவாக> புதுமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவை வியாபாரச் செயல்பாட்டில் ஒன்றையொன்று
தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. இது உங்கள் குழுவிலுள்ள அனைவரையும் புதிய யோசனைகளைத் தேட
ஊக்குவிக்கும். எப்பொழுதும் கவனத்துடன் பணியாற்றும் ஒருவர் உங்களிடம் இருக்கும்போது> ஒரு வணிகமாக
உங்கள் பாதை ஒவ்வொரு நாளும் வலுவடைகிறது.

பணியிடத்தில் புதுமை மற்றும் படைப்பாற்றல் என்பதை எவ்வாறு ஊக்குவிக்க முடியும்?

ஒரு தொழில்முனைவோராகவோ அல்லது தலைவராகவோ> பணியிடத்தில் படைப்பாற்றல் மற்றும்
புதுமைகளை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இதோ சில பயனுள்ள குறிப்புகள் :

சுருக்கமாக கூறின்> புதுமைகளை வளர்ப்பதற்கான முக்கிய காரணிகள் எதுவெனின் நோக்கம்> உங்கள்
பணியாளர்களுக்கு அச்சமின்றி தமது எண்ணங்களை கூறுவதற்கும்> திறந்த மனதுடன் அதனை
முன்னெடுத்துச் செல்வதற்குமான மனப்பான்மையை ஊக்குவித்தலாகும்.

பணியிடத்தில் படைப்பாற்றல் திறன் பற்றிய மேலதிக தகவல்களை திரிய இணையத்தளத்தில் பார்க்கலாம்.

Exit mobile version