Diriya

சமூக ஊடக சந்தைப்படுத்தல் விடயத்தில் எப்போதும் அதிக கவனம் செலுத்துங்கள்

தற்போது பெரும்பாலான வணிகங்களுக்கு சமூக ஊடக பிரசன்னத்தைக் கட்டியெழுப்புவது அவசியம். இது ஒரு போட்டி மிக்க களமாகும். உங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த வேண்டுமா? சமூக ஊடகங்களைப் பயன்படுத்துங்கள். வர்த்தகநாமம் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்க வேண்டுமா? சமூக ஊடகங்களைப் பயன்படுத்துங்கள். வணிக உலகில் உங்கள் தனி முத்திரையை பதிக்க வேண்டுமா? சமூக ஊடகங்களைப் பயன்படுத்துங்கள். தொடக்க வணிக முயற்சிகளுக்கு கூட ஆட்சேர்ப்பு செய்வதற்கும், நிதி திரட்டுவதற்கு அவர்களின் சுயவிவரத்தை கட்டியெழுப்புவதற்கும், பயனர் தளத்தை கட்டியெழுப்புவதற்கும் மற்றும் பல அத்தியாவசிய செயல்பாடுகளுக்கும் சமூக ஊடகங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் சமூக ஊடக செயல்பாட்டை பேணி முன்னெடுப்பது எளிதானது அல்ல. கடினமாக உழைத்து ஒரு அந்தஸ்தை கட்டியெழுப்பி, நிலைநாட்டி மற்றும் பேணிப் பராமரிக்க பாரிய முயற்சி எடுக்க வேண்டும்.

வெற்றிபெறும் சமூக ஊடக அந்தஸ்தை ஸ்தாபிப்பதற்கு எந்தவொரு நேர்த்தியான திட்டமும் கிடையாது. இருப்பினும், உங்கள் சமூக ஊடக பிரசன்னத்தை மேம்படுத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட வழிமுறைகள் உள்ளன. அவற்றில் மூன்று வழிமுறைகள் பின்வருமாறு.

  1. எப்போதும் செயல்பாட்டுடன் இருங்கள்.
    உங்கள் கருத்துகள் அல்லது நேரடி செய்திகளுக்கு ஒருவர் உடனடியாக பதிலளிக்கும் போது நீங்கள் அதை விரும்ப மாட்டீர்களா? ஆம், இது உங்களுக்கு மதிப்பளிக்கப்படும் முன்னுரிமை உணர்வைத் தருகிறது. எல்லோருடைய உணர்வும் அத்தகையதே. உங்கள் கருத்துகள் மற்றும் செய்திகளுக்கு எப்போதும் உடனடியாக பதிலளிக்கவும்.
  2. ஏற்புடையதாக இருங்கள்.
    மக்கள் தம்மைப் போலவே பேசுபவர்களையும், நினைப்பவர்களையும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி பேசுபவர்களையும் விரும்புகிறார்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றுகிறார்கள். இணையத்திலும் மற்றும் இணைத்திற்கு வெளியிலும் என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம் உங்கள் தகவல்தொடர்பாடல்களில் கவனம் செலுத்துங்கள். ஓரிரு மீம்ஸ்களை முயற்சிக்கவும்.
  3. மிக முக்கியமாக, நம்பத்தகுந்தவராக இருங்கள்.
    போலி விளம்பரங்கள் பலவற்றை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம், இல்லையா?
    “நீங்கள் ஒரு மில்லியன் டொலர்களை (எவ்விதமான தொடர்புகளுமின்றி) வென்றுள்ளீர்கள்!!”
    “நீங்கள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்!!”
    அல்லது பின்வருபவை போன்ற உட்கிடக்கையாக வெளிப்படுத்துபவையா?
    “உள்ளூரில் சிறந்த விலை, அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்!”

இவ்வாறு விளம்பரம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது வேண்டாம். எதையாவது விற்பனை செய்ய முயற்சிப்பதை விட, ஒரு வர்த்தகநாமத்தைக் கட்டியெழுப்புங்கள். மக்கள் உங்களை ஆராயந்து பார்த்துவிட்டு, லைக் அல்லது ஃபொலோ பட்டனை அழுத்தி, நீங்கள் உண்மையானவர் என்று அவர்கள் உணர்ந்தால், அது அவர்களுக்குப் புதியதாகவோ அல்லது வித்தியாசமாகவோ இருந்தாலும் கூட, உங்களுடனேயே தங்கிவிடுவார்கள். உங்களைப் பின்தொடர்பவர்களை பெரும் எண்ணிக்கையில் உருவாக்கினால், அந்த நபர்கள் உங்கள் செயல்பாடு மற்றும் உங்கள் தயாரிப்புகளை அதிகளவில் வரவேற்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் உங்களுடனும் உங்கள் வர்த்தகநாமத்துடனும் பரஸ்பர உரையாடலின் ஒரு அங்கமாக இருப்பார்கள். இது வெறுமனே பேசுவது மட்டும் இல்லாமல், உங்களின் மிக முக்கியமான பங்குதாரர்களான உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களாக மாறும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு இதன் மூலமாக உத்வேகம் பெறுவதற்கான சிறந்த வழியாகும்.

ஒட்டுமொத்தமாக, சமூக ஊடகம் என்பது ஒரு சிக்கலான இணையமாகும், இதில் பலரும் செயல்படலாம், ஆனால் சிறந்தவை மட்டுமே வளர்ந்து, செழிப்படையும். நீங்கள் சரியான நேரத்தில் சரியானவற்றைச் செய்து, உங்கள் நகர்வுகளைச் சரியாகச் செய்தால், நீங்கள் எளிதாக செழிப்படையும் ஒரு முயற்சியாக மாற முடியும். இந்த மூன்று விதிகளை கடைபிடிப்பதுடன், ஈடுபாடுகளை முன்னெடுப்பதற்கு தயங்காதீர்கள்.

Exit mobile version