Diriya

அடுத்த வாரிசைத் திட்டமிடலுக்கான உதவிக்குறிப்புகள்

Image by Sasin Tipchai from Pixabay

உங்கள் நிறுவனத்திற்கான உங்கள் அடுத்த வாரிசுக்கான திட்டத்தை நீங்கள் ஆரம்பித்து விட்டீர்களா? நேரமின்மை அல்லது அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தினாலோ அவ்வாறு திட்டமிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதா? சாத்தியமான வாரிசுகளை நீங்கள் இன்னும் அடையாளம் காணவில்லையா அல்லது உங்கள் வாரிசுகளின் திறன்கள் மற்றும் ஆற்றல்கள் குறித்து உங்களுக்கு நிச்சயமில்லையா? உங்கள் குடும்ப வணிகத்தின் நிர்வாகத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டுமா அல்லது உங்கள் வணிகத்தை முகாமைத்துவ நிர்வாகம், பணியாளர்கள் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு விற்க வேண்டுமா? விரைவில் ஓய்வு பெறவுள்ள அந்த ஊழியரின் இடத்திற்கான வருங்கால வாரிசை நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்களா? 40% க்கும் அதிகமான நிறுவனங்கள் அல்லது ஸ்தாபனங்கள் முக்கிய பதவிகளுக்கான அடுத்த வாரிசுகளைத் திட்டமிடுவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், உங்கள் அடுத்த வாரிசுக்கான திட்டமிடலைத் தொடங்குவதற்கு இன்னமும் காலம் உள்ளது என கருதி அதனை தாமதிக்க விடலாகாது.

அடுத்த வாரிசுக்கான திட்டமிடல் என்பது திறன்கள் அல்லது சாத்தியங்களைக் கொண்ட ஊழியர்களை அடையாளம் கண்டு, அவர்களைத் தயார்படுத்தி, உயர் மட்டங்களுக்கு அல்லது வெவ்வேறு பதவிகளுக்கு முன்னேறுவதற்கு உதவும் ஒரு குறிப்பிடத்தக்க முறையாகும். மேலும், அடுத்த வாரிசுக்கான திட்டமிடல் செயல்முறையானது, பணியாளர்கள் பலவீனமாக இருக்கக்கூடிய பல்வேறு செயல்பாட்டு வலயங்களை வேறுபடுத்தி, நீங்கள் செயல்படுத்தும் முடிவுகள் அல்லது செயல்திறன் விளைவுகளை மேற்பார்வை செய்து அவற்றை மேம்படுத்தலாம்.

அடுத்த வாரிசுக்கான திட்டமிடலின் போது ஒரு நிறுவனத்தின் நிர்வாகத் தலைமைத்துவம் கருத்தில் கொள்ளக்கூடிய சில குறிப்புகள் இங்கே உள்ளன.

முக்கியமான பாத்திரங்களை அடையாளம் காணவும்

அடுத்த வாரிசுக்கான திட்டமிடலைத் தொடங்க, வணிகத்தின் அடிப்படையில் முக்கியமான பாத்திரங்களை அடையாளம் காணவும். இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், பொருத்தமான பணியாளர்களை நியமிப்பது அல்லது ஏற்கனவே இருக்கும் ஊழியர்களைக் கொண்டு இந்தப் பதவிகளை நிரப்புவது பற்றி பரிசீலிக்கவும், ஏனெனில் நிரப்பப்படாத பதவிகள் நிறுவனத்தின் வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கலாம். அடிப்படையில், அடுத்த வாரிசுக்கான திட்டமிடல் என்பது நிறுவனத்தின் வணிக படிநிலையின் பிரதிபலிப்பாகும்.

சாத்தியமான அடுத்த வாரிசுகளை அடையாளம் காணவும்

ஒரு குறிப்பிட்ட பதவிக்கான மிகவும் சாத்தியமான ஒருவர் அடையாளம் காணப்பட்டால், அவர்களைச் சந்தித்து அவர்களின் பயிற்சி அல்லது வழிகாட்டுதல் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவது முக்கியம். மறுபுறம், பொருத்தமான அடுத்த வாரிசுக்கான திட்டமிடல், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், கீழ் மட்டத்திலுள்ள பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது.

வாரிசுகள் நிறுவனத்தின் உள்ளே அல்லது நிறுவனத்திற்கு வெளியே இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவும்

பெரும்பாலான நேரங்களில், பல காரணிகளின் அடிப்படையில், நிறுவனத்திற்குள் இருந்து வாரிசுகளை அடையாளம் காண முடியும். இது ஆட்சேர்ப்பு மற்றும் பணியில் புதியவர்களை உள்வாங்குவதற்கான செலவுகளைக் குறைக்கலாம். அதே நேரத்தில் அந்நபர் நிறுவனத்தின் செயல்முறைகள் மற்றும் கலாச்சாரத்தை நன்கு அறிந்தவர் எனில், வெளிப்புற ஆளணியை விட அதிக உற்பத்தித்திறன் கொண்டவராக இருக்க முடியும். எவ்வாறாயினும், தற்போதுள்ள ஊழியர்களுக்கு நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்கும் திறன் இல்லை என்றால், ஒரு வாரிசு நிறுவனத்திற்கு வெளியில் இருந்து பணியமர்த்தப்படலாம். அவசரமாக வாரிசொன்றை பணியமர்த்த வேண்டி ஏற்பட்டால், உயர் நிர்வாக மட்டங்களில் ஒருவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிப்பதைக் கருத்தில் கொள்ளும்போது அல்லது குறிப்பிட்ட திறன்கள் தேவைப்படும்போது, நிறுவனத்தின் உள்ளே ஒரு வாரிசைக் கண்டுபிடிப்பதை விட வெளிப்புறத்திலிருந்து அதனை நிரப்புவது மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் ஏற்கனவே உள்ள ஊழியர் தன்னை அப்பணிக்கு மாற்றுவதற்கான பயிற்சி மற்றும்ஃஅல்லது பணி மாற்ற செயல்முறைக்கு முதலில் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு சாத்தியமான தலைவர் அல்லது திறமையான பங்களிப்பாளராக அவர் மாற முடிகின்ற அதேசமயம் எதிர்பார்க்கப்படும் குணநலன்களைக் கொண்ட ஒரு நபரை குறுகிய காலத்தில் நிறுவனத்திற்கு வெளியேயிருந்து பணியமர்த்த முடியும்.

சிறப்பாக செயல்படுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்

உங்கள் நிறுவனத்தில் சிறந்த செயல்பாட்டாளர்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வதற்கு, ஒரு நோக்கு நிலை சார்ந்த மற்றும் முறையான செயல்முறை தேவைப்படுகிறது. வழிகாட்டுதல் இணைப்புகள், நிழல் பணி மற்றும் தயார்படுத்தல் ஆகியவற்றை வழங்க வேண்டும். அவை புதிய திறன்களை வளர்க்கவும், ஏற்கனவே உள்ளவற்றை மேம்படுத்தவும் உதவும் பெறுமதிமிக்க பயிற்சிகளாகும். சிறந்த தலைவர்கள் கருணைப்பாங்கு மற்றும் சிறந்த பேச்சு, எழுத்து தொடர்பாடல் திறன்கள் போன்ற திடமான தனிப்பட்ட திறன்களைக் கொண்டுள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

திறந்த மனதுடன் உங்கள் இலக்கினை வெளிப்படுத்துங்கள்

உயர் பதவிகளில் செழிப்புற முக்கியமான சிறந்த திறன்களைக் காண்பிக்கும் நபர்களைத் தேடுங்கள், அவர்களின் தற்போதைய பணி நிலைக்கு சற்று கௌரவம் அளியுங்கள். உங்கள் தொழில் முன்னேற்ற ஏற்பாட்டினை மனிதவளத் திணைக்களம் மற்றும் உங்கள் உயர்மட்ட நிர்வாக முகாமைத்துவ பணியாளர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சாத்தியமான தலைவர்களை அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதன் மூலமும், அடுத்த வாரிசுக்கான ஒரு திட்டத்தை உருவாக்குவதன் மூலமும், உயர்-வாய்ப்பும், சாத்தியமும் கொண்ட பணியாளர்கள் தங்கள் பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுவதாகவும், வணிகத்தில் தங்கள் திறனை வெளிக்கொணர உற்சாகமாகவும் தம்மை உணர நீங்கள் உதவுவீர்கள்.

Exit mobile version