Diriya

உங்கள் விற்பனை முனைப்புகளை கொள்வனவுகளாக மாற்றவும்

நீங்கள் முயற்சி செய்யும் ஒவ்வொரு விற்பனை முனைப்பும் தோல்வியில் முடிவடைவதைப் போல் உணர்கிறீர்களா? வாய்ப்புகள் போதுமான அளவில் வாடிக்கையாளர்களாக மாறவில்லையா? நீங்கள் ஒரு சிறிய தந்திரத்தை கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, சிறந்த விற்பனை முனைப்புக்களில் கவனம் செலுத்துவது வெற்றியை அதிகரிக்க வழிவகுக்கிறது.

நீங்கள் எப்போதாவது ஒரு கடைக்குச் சென்றிருக்கிறீர்களா, அதில் கடையின் உரிமையாளர் உங்களுக்கு வீட்டில் உள்ளதைப் போல சௌகரியத்தை உணரச் செய்தாரா? காலம்காலமாக பின்பற்றப்படுகின்ற “வாழ்க்கை எப்படி போகிறது?” மற்றும் “காலை வணக்கம் ஐயா, நீங்கள் எதை வாங்க முயற்சிக்கிறீர்கள்?” போன்றவை சிநேகபூர்வமான வாழ்த்துக்களுக்கு உதாரணங்கள். நீங்கள் புறக்கணிக்கப்பட்ட மற்றும் முகம் சுளிக்கின்ற கடையை பார்ப்பதை விட, மேற்குறிப்பிட்ட வகையில் அத்தகைய கடையைப் பார்க்க நாம் அனைவரும் மிகவும் விரும்புகிறோம், இல்லையா? சரி, இது அடிப்படையில் உறவுமுறை சந்தைப்படுத்தல். உங்கள் வாடிக்கையாளர்கள் அல்லது விற்பனை முனைப்புக்களுடன் நீங்கள் உறவுமுறையைக் கட்டியெழுப்பும்போது. அவர்கள் வாடிக்கையாளர்களாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். முதலில், உங்கள் வாடிக்கையாளர்களுடனான உறவை மேம்படுத்துவதற்கான சில எளிய வழிமுறைகளைப் பற்றி கலந்துரையாடுவோம்.

தரமான வாடிக்கையாளர் சேவையை வழங்குங்கள்: எப்படி கேட்பீர்கள்? நாம் அறிந்துகொள்வோம். சரி, பெயர் குறிப்பிடுவது போலவே, தரமான வாடிக்கையாளர் சேவை என்பது வாடிக்கையாளருடன் தனிப்பட்ட மட்டத்தில் தொடர்புகொள்வது மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களாக ஆவதற்கு அவர்களை சாதகமாக வலுப்படுத்துவதாகும். இதை எப்படி செய்வது என்பதற்கான சில எளிய உதவிக்குறிப்புகளைத் தருகிறேன்.

இவை அனைத்தும் மிகவும் எளிமையான விடயங்களாகத் தோன்றுகின்றன, இல்லையா? சரி, உண்மை தான். இருப்பினும், இந்த மிகவும் சிறிய குறிப்புகளை நடைமுறையில் எடுத்துக்கொள்வது அவ்வளவு பொதுவானதல்ல. ஒரு வாடிக்கையாளரின் கடினமான நாளில் நீங்கள் அவருக்குக் கொடுக்கும் ஒரு எளிய புன்னகை அவர்களை உங்களின் மிகவும் விசுவாசமான வாடிக்கையாளர்களாக மாற்றும். இதன் மூலமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும் என்பதை மறக்க வேண்டாம்.  

Exit mobile version