பொருளாதார வளர்ச்சியைக் கவனத்திற் கொள்ளும்போது தொழில்மயமாக்கல் என்பது பொருளாதாரத்தின் பிரதான அம்சமாகும். தொழில்துறைகள் பற்றிய மேம்படுத்தல்களை மேற்கொண்ட நாடுகள், உலகின் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாக ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
பெரும்பாலான அபிவிருத்தியடைந்த நாடுகள் தங்கள் தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு தொழில்துறையை எவ்வகையிலும் ஊக்குவிக்கின்றன. இலங்கையில் கடந்த பத்து வருடங்களாக பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கைத்தொழில் துறையானது வருடாந்தம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திற்கு 27% பங்களிப்பை வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பின்னர்> இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இத்தருணத்தில், உள்நாட்டு தொழில் வளர்ச்சியின் மூலம் நாட்டின் வருமானத்தை அதிகரித்து> இறக்குமதிக்கு செலவிடும் செலாவணியை குறைப்பதற்கு பங்களிப்பு செய்ய முடியும்.
உள்நாட்டு துறைகளை அபிவிருத்தி செய்யக்கூடிய சில வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்;ளன.
விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி தொழில்துறைகள்
உலகமானது இன்று உணவு பற்றாக்குறையை எதிர் கொள்வதுடன் இலங்கை போன்ற அதிக பணவீக்கம் கொண்ட நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்வுகூறப்படுகின்றது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உயிர்வாழ்வதற்கான பிற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் தவிக்கும் சுமார் 5.2 மில்லியன் இலங்கையர்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை ஐக்கிய நாடுகள் ஏற்கனவே கோரத் தொடங்கியுள்ளது. உணவுப் பயிர்கள் உற்பத்தி செய்யக்கூடிய மிகப் பெரும் நிலப்பரப்பை கொண்டிருப்பது இலங்கையின் ஒரு சிறப்பம்சமாகும். இரசாயன உரப் பற்றாக்குறையை போக்குவதற்கான தீர்வுகளுடன் உள்நாட்டு விவசாயச் செய்கைகள் மற்றும் உணவு பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்களை அபிவிருத்தி செய்தல் போன்றன இலங்கையில் நிலவும் உணவு பற்றாக்குறையை சமாளிப்பதற்கான ஒரு தீர்வாகும்.
உற்பத்தித் தொழில்கள்
உள்நாட்டு உற்பத்தி சார் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். முக்கியமாக ஆடைகள் மற்றும் மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில்கள் உள்ளுர் ரீதியாக உருவாக்கப்பட வேண்டும். முடிவு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் இலாபத்தில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதி பயன்படுத்தப்படுவதால்> இலங்கையின் நிதியம் பாதிப்படைவதை ஆடைத் உற்பத்தி தொழில் ஊடாக மிகவும் தெளிவாகத் காணலாம். எனவே> ஆடைத் தொழிற்சாலைகள்> தேயிலைத் தொழிற்சாலைகள் போன்ற இரண்டாம் நிலை தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்ய முதல் வரிசைக்கு உதவியாக சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் மற்றும் உள்ளக வீட்டு கைத்தொழில்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதன்மூலம் வெளிநாடுகளுக்கு நாம் செலுத்தும் பணம் சேமிக்கப்படும் என்பதுடன் அதிக இலாபத்தையும் எம்மால் ஈட்ட முடியும்.
விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா
கொவிட்-19 இற்கு முன்னைய காலகட்டம் வரை சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையானது இலங்கைக்கு மிகக் கணிசமான வெளிநாட்டு நாணயத்தை ஈட்டித் தந்த ஒரு துறையாக விளங்கியது. நாடு தொடர்ச்சியாக முடக்கப்பட்ட நிலைமை மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளதுடன்> நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை அழகு நிறைந்த எமது இலங்கை குட்டித் தீவானது வெளிநாட்டவர்களை கவர்ந்திழுப்பது எமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் ஆகிய இரு துறைகளையும் மேம்படுத்துவதன் மூலம் உள்நாட்டு பொருளாதார அபிவிருத்தியை மீள் ஏற்படுத்த பாரிய பங்களிப்பை செய்ய முடியும்.
ஒரு தேசம் என்ற வகையில் தொழில்துறையை மேம்படுத்துவதற்கு நாம் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் மிகவும் கடினமானவை. எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையானது எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை வரையறுக்கின்றது. எனினும் நாட்டின் அபிவிருத்திக்கான முன்னேற்றமான கலந்துரையாடல்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகளால் தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை உள்நாட்டில் முன்னெடு;க்க உதவுவதன் ஊடாக எமது நாட்டை எம்மால் மீள கட்டியெழுப்ப முடியும்.
ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையில் : Role of Small Industries in Economic Development of Sri Lanka: A Quantitative Aspect