Diriya

‘எண்கள் விளையாட்டை” வெற்றி கொள்ளுதல்

Image by Steve Buissinne from Pixabay

வணிகங்களை முன்னெடுக்கும் போது, எங்களை அடிக்கடி குழப்பும் பல சொற்பதங்கள் உள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வணிகங்கள் முதன்மையாக எண்களைக் கையாள்வதே இதற்குக் காரணம். மேலும், அவை எண்களைக் கையாளும் விதம் அன்றாடம் எண்களைக் கையாள்வதில் இருந்து வேறுபட்டது. இலாபம் மற்றும் நட்டம் போன்ற பொதுவான சொற்பதங்களுக்கு அப்பால் சென்று, நிதிப்பிரிவானது பல்வேறுபட்ட நிதியியல் விகிதங்கள் (ratios) போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. இது எந்த ஒரு சாதாரண தொழில் முயற்சியாளருக்கும் அந்நிய சொற்பதமாகத் தோன்றலாம். எவ்வாறாயினும், இந்த சொற்பதங்கள் எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதை அறிந்துகொள்வது, வணிக கட்டமைப்பில் மிகவும் சௌகரியமாக இருக்க உதவும் அத்தகைய எண்கள் மற்றும் சொற்பதங்களை நாம் எளிதாக அறிந்துகொள்ள வழிகோலுகிறது. விகிதங்கள் மற்றும் சொற்களஞ்சியம் பற்றிய விபரமான கலந்துரையாடலை இந்தத் தளத்தில் வேறு ஒரு பகுதியில் நீங்கள் கண்டறிந்துகொள்ள முடியும். அதன் மூலமாக நீங்கள் சொற்பதங்களின் கூடுதல் வரையறைகளை அறிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறையாவது, உங்கள் செயல்திறன் எண்களின் வழக்கமான சோதனை ஆய்வுகளை மேற்கொள்வது முக்கியம். கணக்காளர் போன்று நிதிகளைக் கையாள உங்கள் வணிகத்திற்கு அதற்கென நியமிக்கப்பட்ட நபர் இருந்தால், தயவுசெய்து அவருடன் இது தொடர்பில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய வணிகம் ஒரு தனிநபர் முயற்சியாக இருந்தால், நிதியியல் சொற்பதங்கள் மற்றும் நிதியியல் அறிக்கையின் விளக்கத்தை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக உங்களுடைய வணிகம் கணிசமான முதலீடு(கள்) மற்றும் / அல்லது வருமானம் கொண்ட வணிகமாக இருந்தால் இது மிகவும் முக்கியம். உங்கள் நிதியியல் அறிக்கைகளின் புள்ளிவிவரங்கள் போன்றவை நேரடியாகக் கிடைக்கும் போது, ஏனைய சில குறிப்பிட்ட எண்கள் கணிப்பீடு செய்யப்பட வேண்டும். கணிப்பீடு செய்யப்பட்ட முடிவுகளைக் கண்காணிப்பது உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதை எளிதாக்கும். இது உங்களை மேலும் கட்டுப்பாட்டுடன் இருப்பதாக உணர வைக்கும். தினசரி அடிப்படையில் கணிப்பீடுகளைச் செய்வது பயனற்றதாக இருக்கும் என்பதால், இதைச் செய்வதற்கான சிறந்த வழி, மாதாந்தம் அல்லது காலாண்டு அடிப்படையில் அவற்றைக் கணிப்பீடு செய்து சரிபார்ப்பதாகும். ஆண்டு இறுதி வரை காத்திருப்பது நல்லதல்ல, ஏனெனில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை நீங்கள் அவதானிக்கும் நேரத்தில் அதற்குரிய தீர்வை மேற்கொள்வதற்கான காலம் தாழ்ந்து போகலாம்.

உதவியைப் பெற நீங்கள் தயங்கக்கூடாது என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். நீங்கள் எதையும் தெளிவுபடுத்த வேண்டும் அல்லது வணிக சொற்பதங்கள் அல்லது சிக்கலான விகிதங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் போதெல்லாம் நிதியியல் துறைசார் வல்லுனரை அணுகுவது நீங்கள் விபரங்களை அறிந்து வைத்திருப்பதற்கும், வணிகத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், துறையில் பலரும் இருப்பதால், நீங்கள் இதற்காக நாடுகின்ற நபரைத் தீர்மானிப்பதில் அவதானமாக இருக்க வேண்டும். ஆனாலும் உங்கள் வணிகத்தின் தன்மையை அனைவரும் விளங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர் உங்களது சிந்தனைக்கும் வணிகத்தின் தன்மைக்கும் எதிர்மாறானவராக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், வேறு ஒரு நிதியியல் ஆலோசகரை நாடுங்கள். தவறான ஆலோசகர் ஒருவர் உங்கள் வணிக முயற்சியில் கணிசமான, எதிர்பாராத வகையிலான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு நிறுவனத்திடமிருந்து கடன் வசதியைப் பெற்றிருந்தால், அதன் நிதியியல் ஆலோசகர்கள் இதற்கு சிறந்த வழிகாட்டுதலாக இருக்க முடியும்.

உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தனியொரு நிபுணர் தீர்வு அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வெவ்வேறு துறைகளைக் கையாளும் வெவ்வேறு வல்லுநர்கள் தங்கள் சொந்த துறை சார் அனுபவத்தினூடாக உங்களுக்கு எழும் சிக்கல்களைச் சமாளிக்க உங்களுக்கு உதவுவார்கள். உதாரணமாக, வரி அறிக்கை (tax reporting) தேவைகள் மற்றும் செயல்பாட்டு மூலதன தேவைகள் (working capital) ஆகியன இரண்டு வெவ்வேறுபட்ட துறைகள். பல்வேறு வணிகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்ற கம்பனி காரியதரிசி சேவை வழங்குநரிடமிருந்தும் நீங்கள் உதவியை நாடலாம். தெளிவான மற்றும் துல்லியமான ஆவணப் பதிவுகளை வைத்திருப்பது சாத்தியமான செயல்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்களில் இருந்து உங்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், நீங்கள் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் போது அல்லது முதலீட்டாளர்களைத் தேடும் போது பயனுள்ளதாக இருக்கும்.

Exit mobile version