Diriya.lk என்றால் என்ன?
Diriya.lk என்பது தொழில்முனைவோருக்கு விரிவான அடிப்படையில் கல்வி போதிக்கின்ற இணையவழி அறிவுத்தளமாகும். அத்துடன் இது சிறிய தொழில்கள் தொடக்கம் நடுத்தர வியாபார நிறுவனங்கள் (MSME) அடங்கலாக புதிய வியாபாரங்கள் (Start-ups) என அனைத்திற்கும் அறிவு வழங்குவதனை இலக்காக கொண்டிருக்கின்றது. இது டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் நிலைபேறுதன்மை மற்றும் சமூகப் புத்தாக்க முயற்சிகளில் ஒன்றாகும். Diriya.lk அதன் பயனாளர்களுக்கு வியாபார அறிவு, விழிப்புணர்வு என்பவற்றுக்கு இடையிலான இடைவெளியை இல்லாமல் செய்வதோடு அவர்களை வேகமாக மாறும் வணிக உலகின் சவால்களைச் சமாளிக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றது.
பொறுப்புத்திறப்பு
Diriya.lk டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் நிலைபேறுதன்மை மற்றும் சமூகப் புத்தாக்க முயற்சிகளில் ஒன்றாகும். இங்கே பகிரப்படும் உள்ளடக்கங்கள் சமகால உலகின் வியாபார வளர்ச்சியினை கருத்திற் கொண்டு சிறிய தொழில்கள் தொடக்கம் நடுத்தர வியாபார நிறுவனங்களுக்கு (MSME) கல்வி வழங்கவும், வழிப்படுத்தவும், உதவும் நோக்கிலுமே காணப்படுகின்றன. எனவே Diriya.lk இன் உள்ளடக்க உபயோகம் மூலம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, விஷேடமாகவோ, தொடர்ச்சியாகவோ ஏற்படும் (உங்கள் விாயாபாரத்தில்) வருமான இழப்பிற்கோ, முதலீடு இழப்பிற்கோ, தண்டனை மூலமான இழப்பிற்கோ அல்லது சேமிப்பு இழப்பிற்கோ அல்லது தரவு இழப்பிற்கோ டயலொக் ஆசியாட்டா நிறுவனமோ, அதன் ஊழியர்களோ அல்லது இயக்குனர்களோ பொறுப்புதாரர்களாக ஆக மாட்டார்கள்.
தனியுரிமைக் கொள்கை
டயலொக் ஆசியாட்டா நிறுவனம் (இனிமேல் “டயலொக்” “நாங்கள்” “எமது” அல்லது “எங்களுடைய” என்னும் பதங்கள் மூலம் குறிப்பிடப்படலாம்) உங்கள் தனியுரிமையை மதிக்கவும், பொருந்தும் வகையிலான தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்களுக்கு இணங்கி நடக்கவும் உறுதி கொண்டுள்ளது. நீங்கள் www.diriya.lk (டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தினால் இயக்கப்படும் இணையத்தளம்) இற்கு தனிப்பட்ட தகவல்களைச் சமர்ப்பித்தால், டயலொக் உடனான உங்கள் தொடர்ச்சியான உறவை பேண மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவோம். எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நீங்கள் பார்வையிடும்போது அல்லது பயன்படுத்தும் போது உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள இந்த தனியுரிமைக் கொள்கையை நாங்கள் உங்களுக்காக வழங்குகின்றோம்.