நாம் ஒரு புதிய ஆண்டை ஆரம்பிக்கும் போது, நாட்டில் வரவிருக்கும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் உலகளாவிய வளர்ச்சிப் போக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள இலங்கையின் தொழில்முனைவோர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு காணப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டில் கருத்தில் கொள்ள வேண்டிய ஆறு முக்கிய இலக்குகள் கீழே சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது:
1. டிஜிட்டல் மாற்றங்களுக்கு உள்ளாகுதல்: ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இன்றைய உலகில், டிஜிட்டல் மாற்றம் இனி ஒரு விருப்பத்தேர்வு அல்ல, அது ஒரு கட்டாயத் தேவை. இலங்கையில் தொழில்முனைவோர்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், புதிய வருவாய் வழிகளை உருவாக்கவும் Artificial Intelligence, Machine Learning மற்றும் Internet of Things (IoT) போன்ற நவீன தொழில்நுட்பங்களை பின்பற்ற முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
2. நிலைபேறுதன்மையில் கவனம் (Sustainability Focus): நுகர்வோர் தேர்வு மற்றும் முதலீட்டாளர் ஆர்வத்தின் முக்கிய இயக்கியாக நிலைபேறுதன்மை மாறி வருகின்றது. இலங்கையின் புதிய தொழில் முயற்சியாளர்கள் கழிவுகளைக் குறைத்தல், சக்தியைப் பாதுகாத்தல் மற்றும் நெறிமுறைப் பொருட்களை வாங்குதல் போன்ற நிலையான நடைமுறைகளுடன் தங்கள் வியாபாரங்களை ஒழுங்கமைக்க வேண்டும். இது சுற்றுச்சூழலுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், வியாபாரநாமத்தின் நற்பெயரினையும் வலுப்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் உணர்வுள்ள நுகர்வோரையும் ஈர்க்கின்றது.
3. ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராயுங்கள்: எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவையும் பன்முகத்தன்மையைப் பார்க்க வேண்டும். ஏற்றுமதி என்பது இப்போது இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய வார்த்தையாக மாறி வருகின்றது. எனவே உங்கள் தயாரிப்பு உலகிற்கு சந்தைப்படுத்தக்கூடியதாக இருந்தால், அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இதுவாகும். இல்லையென்றால், உலகளவில் எடுக்கக்கூடிய ஒரு பக்க தயாரிப்பாக இருப்பது பற்றி நீங்கள் சிந்திக்கலாம். சேதன உணவு (Organic Foods), கைவினைப்பொருட்கள் (Artisanal Crafts) மற்றும் Software Solutions போன்ற சர்வதேச தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அடையாளம் காண்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் அந்நிய செலாவணி வருவாய்க்கு வழிவகுக்கும்.
4. திறன் மேம்பாட்டில் முதலீடு செய்யுங்கள்: எந்தவொரு வெற்றிகரமான வியாபாரரத்திற்கும் திறமையான பணியாளர்கள் முதுகெலும்பாக இருப்பார்கள். இலங்கை தொழில்முயற்சியாளர்கள் தங்கள் அணிகளின் திறனை மேம்படுத்தவும், போட்டியில்
முன்னணியில் இருப்பதற்கும் ஊழியர் பயிற்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கற்கைநெறிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க கல்வி நிறுவனங்கள், தொழில் சங்கங்கள் அல்லது Online கற்றல் தளங்களுடன் இணைவது இதில் அடங்கும்.
5. வலுவான இணைப்புக்களை உருவாக்குங்கள்: சிக்கலான வணிக அமைப்பினை வழிநடத்துவதற்கு ஒத்துழைப்பு முக்கியமானது. இலங்கையின் ஏனைய தொழில்முயற்சியாளர்கள் மற்றும் ஏனைய வணிகங்கள், அரசாங்க முகவர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைவதற்கான வியூக விடயங்களை ஆராய வேண்டும். இந்த இணைப்புக்கள் புதிய சந்தைகள், வளங்கள் மற்றும் நிபுணத்துவத்திற்கான அணுகலை வழங்க முடியும் என்பதோடு புத்தாக்கத்தினை வளர்க்கும் மற்றும் வளர்ச்சியை துரிதப்படுத்தும்.
6. சமூக தாக்கத்தை தழுவுதல்: இலாபத்தை அதிகப்படுத்துவதற்கு அப்பால், இலங்கை தொழில்முனைவோர்களுக்கு நேர்மறையான (Positive) சமூக தாக்கத்தை உருவாக்கும் சக்தி உள்ளது. தங்கள் வணிக மாதிரிகளில் சமூகப் பொறுப்பை ஒருங்கிணைப்பதன் மூலம், வறுமை, சமத்துவமின்மை மற்றும் சுற்றுச்சூழல் அழிவு போன்ற சிக்கலான சமூக சவால்களை அவர்கள் எதிர்கொள்ள முடியும். இது வர்த்தகநாம நற்பெயரை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் இலங்கையின் மிகவும் நிலையான மற்றும் சமமான எதிர்காலத்திற்கும் பங்களிக்கிறது.
மேற்குறிப்பட்ட இலக்குகளை நிர்ணயித்து அதனைப் பின்பற்றுவதன் மூலம், இலங்கை தொழில்முயற்சியாளர்கள் துரிதமாக மாறிவரும் உலகப் பொருளாதாரத்தில் நீண்டகால வெற்றிக்காக தங்களை நிலைநிறுத்த முடியும்.
2025ஆம் ஆண்டானது இலங்கையின் தொழில்முனைவோர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு புத்தாக்கம், வளர்ச்சி மற்றும் நேர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கட்டும்.
உங்கள் வெற்றிக்காக Diriya குழுவின் நல்வாழ்த்துக்கள்!