இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர வியாபார தொழில் முயற்சியொன்றில் பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பில் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும். விலைநிர்ணயத்திற்கான காரணிகள் நுட்பமான முறையில் ஆராயப்பட வேண்டும்.
நீங்கள் விலை நிர்ணயத்தின் போது பின்பற்ற வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்:
- உற்பத்திக்கான செலவு
- நேரடி செலவுகள்: இதில் மூலப்பொருட் செலவுகள், தொழிலாளர் மற்றும் பொதி செய்தல் ஆகியவை அடங்கும்.
- மறைமுக செலவுகள்: இவை வாடகை, மின், நீர் கட்டணங்கள் மற்றும் நிர்வாக செலவுகள் போன்ற மேலதிக செலவுகள்.
- இறக்குமதி வரிகள் உட்பட ஏனைய வரிகள்: மூலப்பொருட்கள் அல்லது தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதற்காக விதிக்கப்படும் சுங்க வரிகள் மற்றும் ஏனைய வரிகள் இறுதி விலையினைப் பாதிக்கும்.
- நுகர்வோரின் கொள்வனவுத் திறன்
- வருமான அளவுகள்: நீங்கள் இலக்கு வைக்கும் சந்தைகளின் சராசரி வருமானத்தைப் புரிந்துகொள்வது குறிப்பிட்ட சந்தைகளின் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யக்கூடிய விலைநிர்ணய வரம்பினை தீர்மானிக்க உதவுகின்றது.
- பொருளாதார நிலைமைகள்: பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் பணப்பரிமாற்ற விகிதங்கள் போன்ற பொருளாதார காரணிகள் நுகர்வோர் செலவு செய்யும் அளவினை பாதிப்பதாக இருக்க முடியும்.
- போட்டித்தன்மைமிக்க விலை நிர்ணயம்
- போட்டியாளர்கள் குறித்த ஆய்வு: போட்டியாளர்களால் வழங்கப்படும் குறிப்பிட்ட அதே தயாரிப்புக்களின் விலைகளை பகுப்பாய்வு செய்வது உங்கள் தயாரிப்பை போட்டித்தன்மையுடன் நிலைநிறுத்த உதவும்.
- விலை வேறுபாடு (Price Differentiation): உங்கள் தயாரிப்பு தனித்துவமான அம்சங்கள் அல்லது சிறப்பு நன்மைகளை வழங்கினால், நீங்கள் உயர்தரமிக்க விலையொன்றினை நிர்ணயிக்க முடியும்.
- விநியோகச் செலவுகள்
- விநியோகதஸ்ர்கள் ஊடான இலாப வரம்புகள் (Channel Margins): மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் போன்ற பல்வேறு விநியோகஸ்தர்கள் மூலமான உங்கள் தயாரிப்புகளை விநியோகிப்பதுடன் தொடர்புடைய செலவுகள்.
- சேமிப்பக மற்றும் இதர போக்குவரத்துச் (Logistics) செலவுகள்: போக்குவரத்து, சேமிப்பக மற்றும் அதன் முகாமைத்துவ விடயங்களும் இறுதி விலையினைப் பாதிக்கும்.
- அரசாங்க விதிமுறைகள் மற்றும் வரிகள்
- பெறுமதி சேர் வரிகள் (VAT): இது ஒரு பொருளின் இறுதி விலையை அதிகரிக்க அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய வரி.
- இறக்குமதி வரிகள் (Import) மற்றும் ஆயத்தீர்வைகள் (Excises Taxes): இந்த வரிகள் இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்திகளின் விலையை கணிசமான அளவில் பாதிக்கும்.
- விலைக் கட்டுப்பாடுகள்: சில துறைகளில், வியாபாரங்களின் விலை நெகிழ்வுத்தன்மையைக் கட்டுப்படுத்தி அரசாங்கமானது விலைக் கட்டுப்பாடுகளைப் போட முடியும்.
6. வியாபாரநாமத்தை நிலைப்படுத்தல் மற்றும் உணரப்படுகின்ற விலை மதிப்பு (Brand Positioning and Perceived Value)
- Brand Equity: ஒரு வலுவான வியாபாரநாமமானது உயர்தரமிக்க சிறப்பு விலையினை கோர முடியும். ஏனெனில் வாடிக்கையாளர்கள் தரம், உயர் அந்தஸ்து அல்லது புத்தாக்கத்துடன் தொடர்புடைய தயாரிப்புகளுக்கு அதிக விலையினை வழங்கத் தயாராக உள்ளனர்.
- தயாரிப்பு நிலைப்படுத்தல்: உங்கள் தயாரிப்பை சந்தையில் எவ்வாறு நிலைநிறுத்துகின்றீர்கள் என்பதும் விலைநிர்ணயத்தில் செல்வாக்குச் செலுத்தும், அதாவது குறிப்பிட்ட பொருள் கட்டுப்படியாகும் விலையினைச் சேர்ந்ததாக இருப்பதோ அல்லது உயர்ரக விலையாக காணப்படுவதோ விலை வியூகத்தினைப் பாதிக்கும்.
மேலதிக விடயங்கள்:
இலங்கையின் நாணயமானது தற்போது ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுள்ள நிலையில், இது இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை மற்றும் ஏற்றுமதி சார்ந்த வியாபாரங்கள் பெறுகின்ற இலாபத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் சில பொருட்களுக்கான கிராக்கி வருடம் முழுவதும் மாறுபடலாம். Odd-Even விலை நிர்ணயம் மற்றும் Price Anchoring போன்ற நுட்பங்கள் வாடிக்கையாளர்களின் கொள்வனவு நடத்தையை பாதிக்க முடியும்.
இந்த காரணிகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், இலங்கையின் சந்தையில் போட்டித்தன்மையுடன் உங்களுக்கு போட்டித்தன்மையுடன் இருக்க உதவும் இந்த சந்தர்ப்பத்தில் இலாபத்தை அதிகரிக்கும் வினைத்திறனான விலை நிர்ணய வியூகங்களையும் வியாபாரங்கள் விருத்தி செய்ய முடியும்.