spot_imgspot_img

சொத்துகளை முகாமை செய்தலும் பராமரித்தலும்

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளைப் பொறுத்தவரையில் சொத்து முகாமைத்துவம் மற்றும் சொத்து பராமரிப்பு என்பன மிகமுக்கியம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. ஏனெனில் வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கும் பெரிய அளவிலான நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கும் தமது பௌதிக சொத்துகளிலேயே அவை உச்சளவில் தங்கியிருக்கின்றன.

திறன்மிகுந்த சொத்து முகாமைத்துவம் மற்றும் சொத்துப் பராமரிப்பு ஆகியன செலவுகளைக் குறைத்தல், உற்பத்தித் திறனை ஊக்குவித்தல், தமது போட்டித் தன்மையை வலுப்படுத்தல் ஆகிய முறைகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்குத் துணைபுரியக் கூடும். எந்த வியாபாரமாக இருப்பினும் அது பௌதிக சொத்துகளான இயந்திரம், கட்டடங்கள், வாகனங்கள், உபகரணங்கள், ஆகியவைகளிலேயே பெரிதும் தங்கியிருப்பதுடன் சிறந்த முகாமைத்துவமும் பராமரிப்பும் அவற்றின் நீண்டகால செயற்பாட்டையும் உச்ச செயற்பாட்டையும் உறுதிப்படுத்தக்கூடும்.

சொத்து முகாமைத்துவத்தில் சொத்துகளை முறைமையான மற்றும் நுட்பமான  வகையில் திட்டமிடல், பெற்றுக்கொள்ளல், பணியமர்த்துதல், செயற்படுத்துதல், பராமரித்தல், தரமுயர்த்துதல் என்பன உள்ளடக்கப்படுகின்றன. சொத்துகளின் உயிர்ச் சுழற்சி அங்கங்கள் ஒவ்வொன்றையும் அவை உள்ளடக்குவதுடன் செலவுகளைத் தவிர்த்தும் இடர்பாடுகளைக் குறைத்தும் சொத்துகளின் செயற்பாட்டினைக் கூட்டுவதையும் அவை நாடுகின்றன. அவதானம் மிகுந்த தீர்மானங்கள் மேற்கொள்வதனை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான முன்னேற்றத்தினை மேம்படுத்துவதற்கும் தற்கால தொழில்நுட்பங்கள் மற்றும் நுட்பங்களான சொத்துகளைக் கண்டறியும் மென்பொருள், ஊகப் பராமரிப்பு, தரவு பகுப்பாய்வறி கருவி போன்றவற்றைப் உபயோகப்படுத்துவதனைத் திறன்மிகு சொத்து முகாமைத்துவம் வேண்டிநிற்கின்றது.

ரூட்பொஷ்ரி மற்றும் பலர் 2021 முதல் ஈரானிய சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளில் சொத்து முகாமைத்துவத்திற்கும் நிறுவன செயற்பாட்டுக்கும் இடையிலான தொடர்பை நோக்கியுள்ளனர். அம்மதிப்பாய்வின்படிஇ சிறந்த சொத்து முகாமைத்துவ உபாயங்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளைச் சிறந்த இலாபம் வாய்ந்தவையாகவும்இ உற்பத்தித் திறன் வாய்ந்தவையாகவும், வாடிக்கையாளர் திருப்தியைக் கொண்டவையாகவும் ஆக்கும் வகையில் சிறந்து செயற்படுவதற்குத் துணைபுரிந்துள்ளன.

மேலும் படிக்க – தொழில்முனைவோருக்கான ஆபத்து மேலாண்மை ஏன்?

மறுபுறும், சொத்துகள் வினைத் திறனாகவும் நம்பகமாகவும் பாதுகாப்பாகவும் செயற்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதில் சொத்து முகாமைத்துவம் கவனம் செலுத்துகின்றது. தொடர்ச்சியான பரிசோதனை, தடுப்புப் பராமரிப்பு, சரிப்படுத்தற் பராமரிப்பு, ஊகப் பராமரிப்பு ஆகியன அவற்றுள் உள்ளடக்கப்படும் பல பணிகளுள் ஒருசிலவாகும். இழப்புகளைக் குறைத்தல், திருத்தற் செலவுகளைக் குறைத்தல், சொத்துகளின் நீண்டகாலப் பாவனையை அதிகரித்தல், பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் செய்றபாட்டையும் வளப்படுத்தல் ஆகியன சொத்துப் பராமரிப்பின் இலக்குகளாகும்.

சொத்துகளை வினைத்திறனான வகையில் முகாமை செய்வதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ப நிறுவனங்கள் முறைமையான ஒரு சொத்து முகாமைத்துவத் திட்டத்தையும் சொத்துப் பராமரிப்புத் திட்டத்தையும் உருவாக்குதல் வேண்டும். அவை தமது வியாபார இலக்குகளுடன் ஒன்றிப்போகக் கூடியவையாகவும் தமது சொத்துகளின் தன்மைகளைக் கவனத்திற்கொள்பவையாகவும் இருத்தல் வேண்டும். சொத்து முகாமை மற்றும் சொத்துப் பராமரிப்புக்கான செயன்முறைகள், நடைமுறைகள், வகிபாகங்கள், கடமைகள் ஆகியவற்றை அத்திட்டம் வரையறை செய்தல் வேண்டும் என்பதோடு அவற்றில் வெற்றியீட்டிக் கொள்வதற்கான முதன்மை செயற்பாட்டு ஊக்கிகளையும் அளவைகளையும் வரையறை செய்து கொள்ளுதல் வேண்டும்.

தொழிற்றுறைசார்ந்து காணப்படுகின்ற புத்தம் புதிய சிறந்த செயற்பாடுகள், நியமங்கள், ஒழுங்குவிதிகள், புதிய பேசு பொருள்கள், தொழிநுட்பங்கள் போன்றவற்றைப் பற்றிய அவதானங்களையும் சொத்து முகாமைத்துவம் மற்றும் சொத்து பராமரிப்பு ஆகியன இத்துறையில் திட்டமிடல் வேண்டும். எடுத்துக்காட்டாகஇ எண்மானக் கருவிகளின் உபயோகம், இயந்திர வழிக் கற்கை, இணையவழி ஆய்வறிகைகள் போன்றன குறித்த நேரத்தில் சொத்துகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும்இ வாய்ப்புள்ள தோல்விகளைக் கணிப்பதற்கும், பராமரிப்புத் திட்டங்களை மேம்படுத்துவதற்கும் நிறுவனங்களுக்குத் துணைபுரியக்கூடும்.

நிறுவனங்கள் தமது சொத்து முகாமைத்துவம் மற்றும் சொத்துப் பராமரிப்புத் திட்டங்களில் வெற்றியடைவதை உறுதிசெய்வதற்கு தமது ஊழியர்களின் பயிற்சிக்கும் விருத்திக்கும் முதலீடு செய்வதோடு தொடர்ச்சியாக மாறிவரும் பண்பாட்டு முன்னேற்றத்தை உள்வாங்குவதற்கும் முதலீடு செய்யவேண்டும். தமது சொத்து முகாமைத்துவம் மற்றும் சொத்துப் பராமரிப்புத் திட்டத்தின் அவசியத்தையும் செயற்றிறனையும் உறுதிப்படுத்துவதற்கு அவற்றைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து இற்றைப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும்.

மேலும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு சொத்துப் பராமரிப்பு அத்தியாவசியமானதாகும். ஏனெனில் சிறிய அளவிலான வியாபாரங்களில் பாரிய செலவுகளை ஏற்படுத்துகின்ற எதிர்பாராவிதமாக ஏற்படும் இழப்புகளையும், நட்டங்களையும் தவிர்ப்பதற்கு அது துணைபுரியும். இத்தாலி நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் தடுப்பு பராமரிப்புச் செயற்பாடானது நட்டங்களையும் திருத்தற் செலவுகளையும் பாரியளவில் குறைத்துள்ளது என்று சார்டோரி மற்றும் பலர் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் (2019) குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் தமது சொத்துகளை வினைத்திறனான முறையில் முகாமை செய்வதற்கும் பராமரிப்பதற்கும் பின்வரும் அம்சங்களைக் கொண்ட சீர்மையான அணுகுமுறை துணைபுரியும்.

1. உங்களது கட்டடங்கள், வாகனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவை உட்பட உங்களது பௌதிக சொத்துகள் அனைத்தையும் உள்ளடக்கிய தரவுப் படிவம் ஒன்றைத் தயாரியுங்கள். இது சொத்துகளை வகைப்படுத்துவதற்கும் ஓரிடத்திரல் நிறுவுவதற்கும் அவற்றின் பெறுமதிஇ ஆயுள்இ தன்மை ஆகியவற்றை மதிப்பிடுவதற்கும் துணைபுரியும்.

2. சொத்துகளை முன்னுரிமைப்படுத்தல்: சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் தமது வியாபார செயற்பாட்டுக்கான முக்கியத்துவம், சொத்துகளின் ஆயுளின் முக்கியத்துவம், சொத்துகளின் தன்மையின் முக்கியத்துவம் போன்றவற்றை மையப்படுத்தி தரவுப்படிவத்தைக் கொண்டு சொத்துகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுதல் வேண்டும். இது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் மிக முக்கியம் வாய்ந்த சொத்துகளைப் பராமரிப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வதையும் அச்சொத்துகளின் தரமுயர்த்தலையோ மாற்றீட்டையோ மேற்கொள்வதனையும் ஏதுவாக்கும்.

3. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் பராமரிப்புத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அது பராமரிப்பு நடைமுறைகள், நேர அட்டவணைகள், தமது சொத்துகளைச் சிறந்த வடிவத்தில் பேணுவதற்கு அவசியப்படும் உபகரணங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும். தொடர்ச்சியான பரிசோதனை, தடுப்பு பராமரிப்பு, சரிப்படுத்தல் பராமரிப்பு, ஊகப் பராமரிப்பு ஆகியன பராமரிப்புத் திட்டத்தின் அங்கங்களாக அமைந்திருத்தல் வேண்டும்.

4. தரவு திரட்டலும் தரவுப் பகுப்பாய்வும்: சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் இழப்புகள், சக்திப் பயன்பாடு, பராமரிப்புச் செலவுகள் உட்பட சொத்துகளின் செயற்பாடுகள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்படுதலும் பரிசோதனை செய்யப்படுதலும் வேண்டும். இத்தகவல்கள் முறைமைகளைக் குறிப்பீடு செய்வதற்கும் எதிர்நோக்கவுள்ள சிக்கல்களை எதிர்பார்ப்பதற்கும் பராமரிப்புத் திட்டங்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படலாம்.

5. சொத்துகளைக் கண்டறிதலும் கண்காணித்தலும்: சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் குறித்த நேரங்களில் சொத்துகளின் அமைவிடங்களையும் ஆரோக்கியத்தையும் செயற்படுதிறனையும் கண்காணிப்பதை ஏதுவாக்குகின்ற முறையொழுங்கு ஒன்று அமைக்கப்படல் வேண்டும். அவ்வாறு செய்கின்ற பட்சத்தில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் சொத்துகளின் சிக்கல் தன்மைகளை உடனுக்குடன் கண்டறிந்து தீர்ப்பதற்கும் சொத்துகளின் பாவனையை அதிகரிப்பதற்கும் வசதியளிக்கும்.

6. ஊழியர்களுக்கான பயிற்சியும் விருத்தியும்: சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் குறிப்பாக சொத்துகளை முகாமை செய்வதிலும் சொத்துகளைப் பராமரிப்பதிலும் தமது தொழில்பெறுநர்களுக்கு அறிவூட்டுவதற்கும் பயிற்சியளிப்பதற்கும் பணம் செலவழிக்கப்படுதல் வேண்டும். இது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் நன்கு அறிவுள்ள, திறனுள்ள பணியாட்டொகுதியை விருத்தி செய்துகொள்வதனைச் சாத்தியப்படுத்தும் என்பதோடு தமது சொத்துகளைத் திறன்பட முகாமை செய்வதையும் திறன்படப் பராமரிப்பதையும் உருவாக்கும்.

7. தொடர்ச்சியான முன்னேற்றம்: சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் தமது சொத்துகளை முகாமைத்துவம் செய்வதிலும் பராமரிப்பதிலும் உள்ள உபாயங்களை வினைத்திறனாகவும் பொருத்தமானதாகவும் பேணுவதற்கு தொடர்ச்சியாக அமைந்த பரிசோதனையும் இற்றைப்படுத்தலும் அவசியமாகும். அவை தொடர்ச்சியான முன்னேற்றம் காணும் கலாசாரத்தை விருத்தி செய்தல் வேண்டும். அத்தொடர்ச்சியான முன்னேற்றமானது ஆக்கத்திறனையும் புதிய புதிய கருவிகளை உபயோகிப்பதையும் புதிய புதிய நடைமுறைகளைப் பயன்படுத்துவதனையும் ஊக்குவிக்கின்றது.

இத்தகைய நடவடிக்கைகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் தமது சொத்துகளைத் திறன்வாய்ந்த முறையில் முகாமை செய்வதற்கும் பராமரிப்பதற்கும் செலவினங்களைத் தவிர்ப்பதற்கும் தமது சந்தைப் போட்டித்தன்மையை ஊக்குவிப்பதற்கும் வழிசமைக்கும். சொத்து முகாமை மற்றும் சொத்து பராமரிப்பு தொடர்பில் தற்காலத்திலுள்ள தொழிநுட்பங்களையும் நுட்பங்களையும் உபயோகப்படுத்துவதன் மூலம்  சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் சொத்துகளை முகாமை செய்வதிலும் பராமரிப்பதிலும் வினைத்திறனாகவும் செயற்றிறனாகவும் இருப்பதனை அதிகரிக்க முடியும். அத்தகைய தொழிநுட்பங்களாக சொத்துகளைக் கண்டறியும் மென்பொருள் மற்றும் ஊகப் பராமரிப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் வியாபாரத்தில்  வெற்றியீட்டுவதற்கும் போட்டித்தன்மையைப் பேணுவதற்கும் திறன்மிகுந்த சொத்து முகாமை மற்றும் சொத்துப் பராமரிப்பு இன்றியமையாததாகும். இத்தகைய நடவடிக்கைகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் செலவினங்களைக் குறைப்பதற்கும், உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கும் பொதுச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும் துணைபுரியக்கூடியனவாகும். தற்காலத்திலுள்ள சொத்து முகாமை மற்றும் சொத்துப் பராமரிப்புத் தொழிநுட்பங்களையும் நடைமுறைகளையும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் நடைமுறைப்படுத்துவதனூடாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் சொத்துகளின் செய்றபாடுகளை அதிகரிக்கவும் சந்தையில் போட்டித்தன்மையை வளப்படுத்தவும் முடியும்.

உசாத்துணைகள்

Roodposhti, F. R., Zarafat, S., & Ghazi, M. A. (2021). Asset management and business performance in Iranian small and medium-sized enterprises. International Journal of Productivity and Performance Management, 70(2), 318-337.

Sartori, R., Cavazzuti, M., Corti, D., & Zanetti, M. C. (2019). Preventive maintenance practices in small and medium-sized enterprises. Journal of Quality in Maintenance Engineering, 25(1), 19- 39.

இந்த உள்ளடக்கமானது CeFEnI/COSME இன் உதவியுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்டதாகும்.

Diriya Sri Lanka
Diriya Sri Lankahttps://www.diriya.lk
Diriya.lk is a sustainability and social innovation initiative of Dialog Axiata PLC. The content available herein is aimed solely for the purposes of educating, guiding and assisting Micro, Small and Medium Enterprises (MSMEs) in navigating the challenges of the fast paced business world. As such, Dialog Axiata PLC, its staff, its officers or Directors shall not be liable for any direct, indirect, incidental, special, consequential, or punitive damages or damages for any loss of profits, revenue, business, savings or data, incurred due to the use of the content available on Diriya.lk.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X