spot_imgspot_img

அலுவலக, ஒழுங்கமைப்பு முகாமைத்துவமும் நேர்த்தி பேணல் நடைமுறைகளும்

அலுவலக, ஒழுங்கமைப்பு முகாமைத்துவமும் நேர்த்தி பேணல் நடைமுறைகளும் தூய்மையானதும் திறன்மிக்கதுமான வேலைத்தலத்தை உருவாக்குகின்றன. தூய்மைமிக்க, ஒழுங்கமைக்கப்பட்ட, திறன்மிகுந்த வேலைத்தலத்தைப் பேணுவது பணியாளர்களின் உற்பத்தித் திறளுக்கும், பாதுகாப்புக்கும் பலவகை நலன்களுக்கும் இன்றியமையாததாகும். அலுவலகத்தின் அமைவிடத்தை திறன்பட முகாமை செய்வதும் முறையாக நேர்த்தி பேணப்படுவதை முகாமை செய்வதும் சாதகமான பணிச் சூழல் ஒன்று கிடைப்பதற்கும் வணிகத்தில் சகல வகையான முன்னேற்றங்களும் கிடைப்பதற்கும் பங்களிப்புச் செய்கின்றன.

அலுவலக ஒழுங்கமைப்பும் முகாமைத்துவமும் எந்தவொரு வெற்றிகரமான வணிகத்துக்கும் இன்றியமையாத பாகங்களாக காணப்படுகின்றன. நன்கு வடிவமைக்கப்பட்ட அலுவலக ஒழுங்கமைப்பு ஒன்று உற்பத்தித் திறனையும், தொடர்பாடலையும், பணிச் சூழலையும் மேம்படுத்துகின்றது. மறுபுறம், வளங்கள் திறன்பட பயன்படுத்தப்படுவதையும், பணிகள் உரியவாறு வகைபடுத்தப்படுவதையும், வேலைத்தலம் ஒழுங்காகவும் செயற்படுதன்மை வாய்ந்ததாகவும் இருப்பதனையும் வினைத்திறன் மிக்க அலுவலக முகாமைத்துவமானது உறுதிப்படுத்துகின்றது.

அலுவலகம் கொண்டுள்ள இடவசதியினை இனங்காண்பதும் எவ்வளவு சிறந்த முறையில் அதனை ஒதுக்கீடு செய்துகொள்ள முடியும் என்று தீர்மானித்துக்கொள்வதும் அலுவலக ஒழுங்கமைப்பு முகாமைத்துவத்தின் முதற்படிநிலையாகக் காணப்படுகின்றது. அதிற் கருத்திற்கொள்ளும் விடயங்களாக பணியாளர்களின் எண்ணிக்கை, ஆற்றப்பட வேண்டிய பணிகளின் தன்மை, தனித்தனியாகவும் கூட்டாகவும் தேவைப்படுகின்ற இடவசதிகள் போன்றவை காணப்படுகின்றன. அண்மைக்காலமாக திறந்த முறையிலமைந்த ஒழுங்கமைப்பு பரவலாக அறியப்பட்டு வருகின்ற முறைமையாகும். ஏனெனில் அது பணியாளர்களிடையிலான தொடர்பாடலையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துகின்றது. எனினும், திறந்தநிலை பரப்பையும் தனியாக அமைந்த பரப்பையும் சம அளவில் பேணுவது முக்கியமானதாகும். ஏனெனில், சில வகையான பணிகள் கவனத்துடனும் தனிப்படவும் ஆற்றப்பட வேண்டியவையாகக் காணப்படுகின்றன.

அலுவலக ஒழுங்கமைப்பு முகாமைத்துவத்தில் தளபாடங்களைத் தெரிவுசெய்வது மற்றுமொரு முக்கியமான அம்சமாகும். சௌகரியமானதும் மலிவானதுமான கதிரைகள், மேசைகள் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதுடன் ஊறுகள், அசௌகரியங்கள் ஏற்படுதல் போன்ற அபாயங்களையும் இழிவாக்குகின்றது. பரண்கள், பெட்டகங்கள், அடுக்கமைவுகள் போன்ற களஞ்சியப்படுத்துகின்ற அம்சங்கள் போன்றனவும் கவனத்துடன் தெரிவு செய்யப்படல் வேண்டும். ஏனெனில், வேலைத்தலம் ஒழுங்கமைந்ததாகவும் ஒழுங்கீனம் அற்றதாகவும் காணப்படுவதில் அவை முக்கிய பங்காற்றுகின்றன.

கூட்டங்களை ஒழுங்கமைப்பது, நிகழ்வுகளை ஒருங்கிணப்பது ஆகியவை முதற்கொண்டு நிதி முகாமை, ஊழியர் கண்காணிப்பு வரையிலான பரந்துபட்ட செயற்பாடுகளை அலுவலக முகாமைத்துவம் உள்ளடக்குகின்றது. வலுவான ஒழுங்கமைப்புத் திறன்களும், கூரந்து நோக்குகின்ற ஆற்றலும், பல்வகை செயற்பாட்டுத் திறனும் வினைத்திறனான முகாமைத்துவத்துக்கு அவசியமான விடயங்களாகும். ஒவ்வொருவரினதும் பணிச் சுமையானது குறிப்பிட்ட நேரத்துக்குள் நிறைவு செய்யத்தக்க வகையில் ஒழுங்கமைக்கப்படுவதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பணிகளை முறையாகப் பகிர்ந்தளிப்பதும் முக்கியமானதாகும்.

வெற்றிகரமான அலுவலக முகாமைத்துவத்துக்கு அடிப்படையாக தொடர்பாடல் காணப்படுகின்றது. தொடர்ச்சியான குழு சந்திப்புகள், ஒவ்வொருவராகப் பரிசோதனை செய்தல், தெளிவான தொடர்பாடல் ஊடகங்கள் ஆகியன ஒவ்வொருவரும் ஒரே பாதையில் செல்வதனை உறுதிப்படுத்துவதற்கும் ஏதேனும் சிக்கலை உடனுக்குடன் தீர்த்துக்கொள்வதற்கும் துணைபுரிகின்றன. பணியாளர்களிடம் கருத்துக்கணிப்பு செய்வதும் முக்கியமானதாகும். ஏனெனில், முன்னேற்றம் காணவேண்டிய பகுதிகளை நோக்கி செயற்படுவதற்குரிய உகந்த நோக்குகளை அது வழங்குவதோடு வெளிப்படைத் தன்மையையும் தொடர்பாடலையும் மேற்கொள்வதற்கும் துணைபுரியும்.

அலுவலக ஒழுங்கமைப்பு முகாமைத்துவத்தில் தொழிநுட்பம் முக்கிய பங்காற்றுவது அதிரகரித்து வருகின்றது. இணையவழி தொடர்பாடல் கருவிகள், செயற்றிட்ட முகாமைத்துவத்துக்கான மென்பொருள்ஈ தொடர்பாடல் தளங்கள் ஆகியன பணியாற்றல் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்குத் துணைபுரிவதுடன் குழு அங்கத்தவர்களிடையேயான தொடர்பாடலையும் முன்னேற்றுகின்றது. உங்களுடைய தேவைக்கும் கையிலுள்ள பணத்துக்கும் ஏற்றவகையில் உங்களது வணிகத்துக்குத் தேவையான பொருத்தமான கருவிகளைத் தெரிவு செய்வது முக்கியமானதாகும்.

இறுதியாக, நன்கு வடிவமைக்கப்பட்ட அலுவலக ஒழுங்கமைப்பும் செயற்றிறன்மிக்க அலுவலக முகாமைத்துவமும் பணியாளர் நடத்தையிலும் தொழில் குறித்த திருப்திப்பாட்டிலும் சாதகமான தாக்கத்தைக் கொண்டுள்ளன. செயற்றிறன்மிக்க முகாமைத்துவம் நம்பிக்கை, மரியாதை, குழுவாக செயற்படுதல் போன்ற நன்னெறிகளை வளர்க்கின்ற அதேவேளை சௌகரியமானதும் செயற்படுதன்மை வாய்ந்ததுமான வேலைத்தலம் மனவழுத்தங்களைக் குறைப்பதற்கும் துணைபுரிகின்றன.

வீடுகளிலும், அலுவலகங்களிலும், விடுதியகங்களிலும், வைத்தியசாலைகளிலும், உணவகங்களிலும், ஏனைய பொது வெளிகளிலும் தூய்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழற் சுகாதாரம் போன்றவற்றைப் பேணுவதற்கு நேர்த்தி பேணல் நடைமுறைகள் அத்தியாவசியமானவையாகக் காணப்படுகின்றன. அகங்களிலும் புறங்களிலும் தொடர்ச்சியான முறையில் துப்புரவு செய்தல், ஒழுங்குபடுத்தல், பராமரித்தல் ஆகியன  ஒழுங்கான நேர்த்தி பேணல் நடைமுறைகளை உள்ளடக்குகின்றன. இத்தகைய செயற்பாடுகள் ஓர் இடத்தின் வெளித்தோற்றத்தை மாத்திரம் அழகுபடுத்தாது. மாறாக, விபத்துகளைத் தடுப்பதற்கும், நோய்நொடிகள் பரவுவதைக் குறைப்பதற்கும், கவர்ச்சியான சூழலை உருவாக்குவதற்கும் துணைபுரிகின்றன.

நேர்த்தி பேணல் நடைமுறைகளில் முக்கியமான அம்சங்களுள் ஒன்றுதான் தொடர்ச்சியான முறையில் துப்புரவு செய்தல் ஆகும். தரையிலும், சுவர்களிலும், மேற்பரப்புகளிலும், பொருத்து கருவிகளிலும் காணப்படுகின்ற தூசு துணிக்கைகள், அழுக்குகள், கழிவுகள் போன்றவற்றை அகற்றுதல் செயற்பாடுகளை இது உள்ளடக்குகின்றது. அவ்வாறான செயற்பாடுகளின்போது சேதங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு பொருத்தமான துப்புரவு உபகரணங்களையும் நுட்பங்களையும் கையாளுவது முக்கியமாகும். உதாரணமாக, நுண்ணிய மேற்பரப்புகளில் சிராய்ப்பு உள்ள உபகரணங்களைப் பாவிப்பது கூடாது. மேலும், ஆட்கள் புழங்குகின்ற பகுதிகளில் ஊறுவிளைவிக்கக்கூடிய இரசாயனங்களைப் பாவிப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ளுதல் வேண்டும்.

நேர்த்தி பேணல் நடைமுறைகளில் மற்றுமொரு முக்கியமான அம்சம்தான் பொருட்களையும் இடங்களையும் ஒழுங்கமைத்துக்கொள்ளுதல் ஆகும். குறிப்பிட்ட இடங்களில் பொருட்களை வைத்தல், தேவையற்ற பொருட்களை முறையாக அகற்றுதல் போன்றவற்றை இது உள்ளடக்குகின்றது. தவறுதல், விழுதல் போன்ற விபத்துகளிலிருந்து தவிர்ந்துகொள்வதற்கும் அவசியப்படுபவற்றைக் கண்றிந்துகொள்வதனை இலகுபடுத்துவதற்கும் முறையான ஒழுங்கமைப்பு துணைபுரிகின்றது.

பாராமரித்தல் என்பது நேர்த்தி பேணல் நடைமுறைகளில் உள்ள முக்கிய அம்சமாகும். சகல விடயங்களும் முறையாக செயற்படுவதனை உறுதிசெய்துகொள்வதற்குரிய தொடர்ச்சியான பரிசோதனைகளும் திருத்தங்களும் இதனுள் அடங்கும். ஒழுக்குகளைப் பரிசோதித்தல், சேதமடைந்த பொருத்துகருவிகளை திருத்துதல் அல்லது மாற்றியமைத்தல், சூடேற்றுதல் மற்றும் குளிரூட்டுதல் செயற்பாடுகளை மேற்கொள்கின்ற கருவிகளைப் பராமரித்தல் போன்றவற்றை து உள்ளடக்குகின்றது.

தவறுதல், விழுதல் போன்ற விபத்துகளிலிருந்து தவிர்ந்துகொள்வதற்கும் சிறந்த நேர்த்தி பேணல் நடைமுறைகள் துணைபுரிகின்றன. தரைகளை உலர்ந்த நிலையிலும் தேவையற்ற பொருட்களற்றதாகவும் பேணுதல், கம்பளங்களும் விரிப்புகளும் முறையான பாதுகாப்புடன் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தல், அனைத்துப் பகுதிகளுக்கும் போதிய அளவில் வெளிச்சம் வழங்குதல் போன்றன இதனுள்ளடங்கும். மேலும், தொடர்ச்சியாக மேற்பரப்புகளை தொற்றுநீக்கம் செய்வதன் மூலமாகவும் அடிக்கடி கைகளைக் கழுவிக்கொள்வதன் மூலமாகவும் கழிவுகளை முறையாக அகற்றுவதன் மூலமாகவும் நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கு நேர்த்தி பேணல் நடைமுறைகள் துணைபுரிகின்றன.

இடம் ஒன்றைப் பயன்படுத்துகின்ற ஒவ்வொருவரினதும் பங்குபற்றுதலும் ஒத்துழைப்பும் வினைத்திறனான நேர்த்தி பேணல் நடைமுறைகளுக்கு அவசியமாகும். வதியும் ஆட்கள், பணியாளர்கள், விருந்தினர்கள்  போன்றோர் இதனுள்ளடங்குவர். சிறந்த நேர்த்தி பேணல் நடைமுறைகளின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வதனையும் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதனை ஒவ்வொருவரும் அறிந்துகொள்வதனையும் உறுதிப்படுத்துவதற்கு அதுபற்றிய அறிவூட்டலும் பயிற்சியும் துணைபுரியும். மேலும், துப்புரவு செயற்பாட்டின் போதும் தொற்றுநீக்கல் செயற்பாட்டின் போதும் ஒழுங்கமைக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் அது சம்பந்தப்பட்ட ஊழியர்கள் முறையாக பயிற்சி அளிக்கப்பட்டும் உபகரணங்கள் வழங்கப்பட்டும் உள்ளமையை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும்.

முடிவாக, அலுவலக, ஒழுங்கமைப்பு முகாமைத்துவத்திலும் நேர்த்தி பேணல் நடைமுறைகளிலும் காணப்படுகின்ற முக்கிய அம்சமாக பிரத்தியோக இடங்களிலும் பணிபுரிகின்ற இடங்களிலும் செயற்படுதன்மை கொண்ட ஆரோக்கியமான சூழலைப் பேணுவது காணப்படுகின்றது. அலுவலக ஒழுங்கமைப்பிலும் தளபாடத் தெரிவிலும் வினைத்திறனான முகாமைத்துவ செயற்பாடுகளிலும் கவனம் செலுத்துவதன் மூலமாக பணியாளர்களின் நடத்தையையும் தொழிலின் திருப்திப்பாட்டையும் வணிகங்களில் மேம்படுத்துகின்ற அதேவேளை தொடர்பாடலையும் உற்பத்தித் திறனையும் வளர்த்தெடுக்கின்ற வேலைத்தலங்களையும் வணிகங்களில் உருவாக்க முடியும். அகங்களிலும் புறங்களிலும் தொடர்ச்சியான முறையில் துப்புரவு செய்தல், ஒழுங்குபடுத்தல், பராமரித்தல் ஆகியன விபத்துகளைத் தடுப்பதற்கும் நோய்நொடிகள் பரவுவதைக் குறைப்பதற்கும் கவர்ச்சிகரமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கும் இன்றியமையாதவைகளாக உள்ளன. சிறந்த நேர்த்தி பேணல் நடைமுறைகளின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வதனையும் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதனை ஒவ்வொருவரும் அறிந்துகொள்வதனையும் உறுதிப்படுத்துவதற்கு முறையான அறிவூட்டலும் பயிற்சியளித்தலும் அவசியமாகும். ஒழுங்கமைக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் இடம் ஒன்றைப் பயன்படுத்துகின்ற ஒவ்வொருவரினதும் பங்குபற்றுதலையும் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்துவதன் மூலமும் தூய்மையானதும் பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான சூழலை அனைவருக்கும் நாம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். சுருங்கக்கூறின், சிறந்த அலுவலக, ஒழுங்கமைப்பு முகாமைத்துவமும் நேர்த்தி பேணல் நடைமுறைகளும் தனிப்பட்ட வாழ்விலும் வணிக வாழ்விலும் வெற்றிபெறுவதற்கும் நன்னிலைபெறுவதற்கும் அத்தியாவசியமானவையாகும்.


இந்த உள்ளடக்கமானது CeFEnI/COSME இன் உதவியுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்டதாகும்.

Diriya Sri Lanka
Diriya Sri Lankahttps://www.diriya.lk
Diriya.lk is a sustainability and social innovation initiative of Dialog Axiata PLC. The content available herein is aimed solely for the purposes of educating, guiding and assisting Micro, Small and Medium Enterprises (MSMEs) in navigating the challenges of the fast paced business world. As such, Dialog Axiata PLC, its staff, its officers or Directors shall not be liable for any direct, indirect, incidental, special, consequential, or punitive damages or damages for any loss of profits, revenue, business, savings or data, incurred due to the use of the content available on Diriya.lk.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X