வாடிக்கையாளர் சேவை நிச்சயமாக எந்தவொரு வியாபாரத்தினதும் உயிர்நாடியாகும். வாடிக்கையாளர்கள்
இல்லாவிடின் உங்களுக்கு வியாபாரமே இல்லை. எனவே நீங்கள் சிறந்த வாடிக்கையாளர் சேவையில் முதலீடு
செய்வதையும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதையும் உறுதிசெய்வது சவாலான நேரங்களிலும் உங்கள்
வியாபாரத்தை சாதகமாக்கும். உங்கள் வாடிக்கையாளர் சேவை நிலைகளை அடுத்த புதிய நிலைக்கு எடுத்துச்
செல்ல> மிக எளிதாக முதலீடு செய்யக்கூடிய சில விஷயங்கள் இங்கே உள்ளன.
வாடிக்கையாளர் விருப்பங்கள் மற்றும் சேவைகளைப் பற்றி அறிதல்
வாடிக்கையாளர்களுக்கான சேவை என்பது வாடிக்கையாளருக்கு என்ன தேவை என்பதைப் பற்றியதே தவிர> நீங்கள்
அவர்களுக்கு என்ன தேவை என்பது பற்றி நினைப்பதல்ல. இவை இரண்டிற்கும் பெரிய வேறுபாடு உண்டு.
வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து சரியாக என்ன எதிர்பார்க்கிறார் என்பதைக் கண்டறிய ஒரே ஒரு உத்தி மட்டுமே
உள்ளது – அவர்களிடம் கேட்டறிதல்> ஒன்லைனில் வாடிக்கையாளரின் கருத்தைக் கேட்டறிதல்> அவர்களுக்கு
அழைப்பு விடுத்தல்> கருத்துக்கணிப்பு அல்லது வாக்குக் கணிப்பு> செய்திமடல் வடிவில் (மின்னஞ்சல்
மார்க்கெட்டிங் மூலம்) GOOGLE படிவத்தை அனுப்புதல் மற்றும் வாடிக்கையாளரின் சவால்கள் பற்றிய தெளிவான
யோசனையைப் பெற்று பின்னர் அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்.
வாடிக்கையாளர் சேவை விற்பனைக்கு மட்டும் மட்டுப்படுத்தகூடாது
பல வியாபாரங்கள் விற்பனை முடியும் வரை சிறந்த சேவையை வழங்குகின்றன. விற்பனையின் பின்னர் அவை
வெறுமனே நிறுத்தப்படும். விற்பனைக்குப் பிந்தைய சேவையானது உங்கள் போட்டியிலிருந்து உங்களுக்கு ஒரு
பெரிய வித்தியாசம். பல வியாபாரங்கள் இந்த விருப்பத்தேர்வை வழங்கவில்லை. நீங்கள் கண்டிப்பாக இதனை
வழங்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இது மிகவும் அதிகமாகத் தோன்றினாலும்> நீங்கள்
உண்மையில் செய்ய வேண்டியதெல்லாம்> தகவல்களை வைத்து வாடிக்கையாளரைப் பின்தொடர்வது மற்றும்
விற்பனை முடிந்த பிறகு அவர்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் அவற்றைக் கண்காணிப்பது மட்டுமே.
பயிற்சி மற்றும் வளர்ச்சியில் முதலீடு செய்யுங்கள்
உங்கள் ஊழியர்களும் வியாபா உரிமையாளராகவோ அல்லது தலைவராகவோ இருக்கும் நீங்கள் கூட
வாடிக்கையாளர்களுக்கான சேவையில் பயிற்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக முதலீடுகள் செய்ய முடியும். ஒன்லைனில்
எளிதாக அணுகக்கூடிய இலவச கல்வித்திட்டங்கள் உள்ளன. மேலும் பணியாளர்கள் தங்கள் சொந்த பயிற்சி
மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்ய ஒவ்வொரு வாரமும் ஒரு மணிநேரம் ஒதுக்கினால், உங்கள்
வியாபாரத்திற்கான முதலீட்டின் வருமானம் வியாபார முன்னேற்றம் மற்றும் வாடிக்கையாளர் ஆகியோரை
தக்கவைப்பதற்கு அது பிரயோசனமாக அமையும்.
பொதுவாக நீங்கள் உங்கள் நிறுவனம் முழுவதும் சேவை மனப்பான்மையைத் தூண்ட வேண்டும். நீங்கள்
அதனைப் பின்பற்றினால் உங்கள் பணியாளர்களும் அதனையே பின்பற்றி நடப்பார்கள்.
நேர்மறையான வாடிக்கையாளர் உறவுகளுக்கான உத்திகள் பற்றிய மேலதிக தகவல்களை திரிய இணையத்தளத்தில் பார்க்கலாம்.