spot_imgspot_img

சிறந்த சந்தைப்படுத்துனர் நிலையை எய்த தோல்வியை தழுவி அதிலிருந்து கற்றுக்கொள்வது

சிறந்த சந்தைப்படுத்துனர் நிலையை எய்துவதில் தோல்வி என்பது கற்றலுக்கு ஊக்கியாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தோல்வியே வெற்றியின் தூணாகும். அறிஞர்கள், மேதைகள் தோல்வியை ஒரு ‘வாய்ப்பாக’ பார்க்கிறார்கள். எனவே உங்களையோ அல்லது உங்கள் குழுவையோ தோல்வியால் சோர்வடையச் செய்யாதீர்கள். சந்தைப்படுத்தலில் ஒருபோதும் தவறாகப் போகாத ஒரு உத்தி என்று எதுவும் இல்லை. சிறந்த சந்தைப்படுத்துனர் எனும் நிலையை எய்த மேற்கொள்ளும் திட்டத்தின் வெற்றிக்கு கைகொடுக்கும் வியூகம் அடுத்த திட்டத்திற்கு தோல்வியை கொடுக்கலாம். எனவே ஒருவர் இவற்றிலிருந்து கற்றுக்கொள்ள மட்டுமே முடியும்.

சிறந்த சந்தைப்படுத்துனர் எனும் நிலையை எய்த உங்களுக்கு உதவும் ஆலோசனைகள் சிலவற்றை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

சந்தைப்படுத்துனர் முயற்சியில் தோல்விகளை நம்பிக்கை மற்றும் ஆய்வு ஊடாக ஏற்றுக்கொள்ளுங்கள்

தோல்வியை தழுவுவது, உங்களை நீங்கள் பரிசோதனை செய்வதற்கு உதவுகின்றது. இறுதி முடிவுகளைப் பற்றி நீங்கள் பயப்படாவிட்டால், உங்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி, கடந்த காலத்தில் நீங்கள் கருத்தில் கொள்ளாத புத்தாக்கத்தை முயற்சிக்க நீங்கள் தயாராவீர்கள். மோசமான சூழலிலும் நீங்கள் மிக சௌகரியமாக இருப்பதானது, நீங்கள் அபாயகரமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டுள்ளீர்கள் என்பதே அதன்மூலம் புலனாகின்றது. தோல்வியிலிருந்து புத்தகாக்கத்தை உருவாக்க முனையுங்கள். இந்த கொள்கையை உங்கள் குழுவினரிடமும் பகிருங்கள். அவர்கள் பயப்படாமலும், அவர்களது திறந்த மனதுடன் இருப்பதற்கு தடையாக உள்ளவற்றை அப்புறப்படுத்துவது தொடர்பாக சிந்திக்க அவர்களை ஊக்குவியுங்கள்.

சந்தைப்படுத்துனர் முயற்சியை சிறிதாக ஆரம்பித்து துரிதமாக தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

ஒரு சந்தைப்படுத்துபவராக, நீங்கள் புதிய திட்டமொன்றை பரிசோதனை செய்யும்போது, மிகச் சிறிய நிதியுடனேயே அதனை ஆரம்பிக்க வேண்டும் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருக்கலாம். முடிவுகளைப் பார்த்தவுடன், உங்கள் திட்டத்தை அளவிட முடியும். நீங்கள் முன்னேற்றத்தை காணாவிடின், அந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். தோல்வியுற்ற சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தில் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நாளும், நீங்கள் வேறு ஏதாவது ஒன்றை செய்வதற்கான நாளாக உள்ளது.

உங்கள் தோல்விகளை குழுவினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

குழுவாக வளர ஆரம்பிக்கும்போது தோல்விகள் மறக்கப்படுகின்றன. தவறுகள் மீண்டும் மீண்டும் நிகழும் என்பதுடன் உங்கள் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாகும். உங்கள் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் தோல்வியடையும் போது, அதற்கான காரணத்தை உங்கள் முழு குழுவினருக்கும் தெரியும் என்பதை உறுதிப்படுத்தவும். தரவுகள் அல்லது பிற குழு ஆவணங்களில் உங்கள் கற்றல் பதிவுகளை வைத்திருங்கள். ஒவ்வொரு சந்தைப்படுத்தல் பரிசோதனையும் உங்கள் வியாபாரத்தில் மீண்டுமொரு முதலீடாக இருக்க வேண்டும், கற்றல் மைல்கற்கள் உங்கள் வியாபாரத்தின் மீள் முதலீடாக இருக்க வேண்டும்.

தோல்வியைத் தழுவுவதானது, உங்களைத் தடுக்கும் உங்கள் தோல்வி பயத்தை நீக்குவது மட்டுமல்லாமல், அடுத்த கட்டத்திற்குச் செல்லவும் உதவுகிறது என்பதை இதன் மூலம் நாம் தெளிவாகக் உங்களுக்கு கூற முடியும். எனவே நீங்கள் வளர விரும்பினால், உங்கள் பயத்தை விட்டு விடுங்கள்!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எம்மிடம் கூறுங்கள், கீழே உள்ள கருத்துப் பகுதியில் உங்கள் கருத்தினை பகிருங்கள்.

மேலதிக தகவல்களுக்கு திரிய பக்கத்தைப் பார்வையிடுங்கள்.

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X