சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் சட்டரீதியான அம்சங்கள்
எந்தவொரு தேசத்தினதும் பொருளாதார வளர்ச்சிக்கு சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் முக்கிய பங்காற்றுகின்றன. வேலைவாய்ப்பு முன்னேற்றம், ஜி.டி.பி மற்றும் அபிவிருத்தி போன்றவற்றுக்கு அரும் பங்காற்றுவதன் காரணமாக பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் அவை கருதப்படுகின்றன.
சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் இலங்கையின் மிக முக்கிய பகுதியாக விளங்குகின்றது. மொத்த உள்ளுர் உற்பத்தியில சுமார் 50மூ பங்களிப்பை இது வழங்குவதாகவும் கிட்டத்தட்ட 52% வேலை வாய்ப்பினை வழங்குவதாகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் அதற்கு ஆதாரம் வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கம் பற்பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அவற்றுள் சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் தொடர்பிலான சட்டதிட்டங்கள் உள்ளடங்கும். சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் அவசியம் அறியப்பட வேண்டிய இறுதியாகக் கொண்டுவரப்பட்ட சட்டரீதியான அம்சங்களும் சட்டங்களும் இக்கட்டுரையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2013 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க பொருளியல் சேவைக் கட்டணச் சட்டம் இலங்கையில் சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தாக்கம் செலுத்திய முக்கிய சட்டம் ஆகும். நிறுவனங்களின் பொருளியல் சேவைக் கட்டணம் ஒரு வருடத்துக்கு ரூபா 50 மில்லியனிலும் குறைந்த வருமானத்தை ஈட்டக்கூடிய வகையில் 1.5% இலிருந்து 0.25% வரையில் குறைக்கப்பட்டது சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்குக் கிடைத்த மிகவும் அவசியமான நிவாரணம் ஆகும். பொருளியல் சேவைக் கட்டண விகிதத்தில் ஏற்பட்ட இத்தகைய குறைப்பு சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தமது வருமானத்தை அதிகளவில் தக்கவைத்துக்கொள்வதற்கும் தமது வணிகங்களில் முதலீடு செய்வதற்கும் அமதித்துள்ளதுடன் அவை மென்மேலும் தொழில் வளங்களை உருவாக்குவதற்கும் வளர்ப்பதற்கும் துணைபுரியும். விவசாயத்துறை மீன்பிடி, கைப்பணிகள், போன்ற சில வணிகங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்களிப்புகள் சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தமது வரிச்சுமைகளைக் குறைத்துக்கொள்ளத் துணைபுரிந்தது. இத்தகைய வரிவிலக்களிப்புகள் இப்படியான துறைகளில் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் மேம்படுத்துவதற்குத் துணைபுரிந்துள்ளதோடு சிறிய அளவிலான உற்பத்தியாளர்களினதும் தொழில் முயற்சியாளர்களினதும் வாழ்வாதாரத்துக்கும் துணைபுரிந்துள்ளது.
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் இலங்கையில் தனியாட்களினதும் வணிகங்களினதும் மீதான வரிவிதிப்பு விடயத்தை நிருவகிக்கின்ற அடிப்படை வரிச் சட்டமாகும். இச்சட்டம் சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் ஊக்குவிப்பையும் சலுகைகளையும் வழங்குகின்றது. அவற்றுள் குறிப்பிட்ட அளவிற்குக் குறைவாக வருமானம் ஈட்டக்கூடிய வணிகங்களுக்கு வரி விகிதத்தில் குறைப்பு ஏற்படுத்தியுள்ளமை உள்ளடங்கும். சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் கணக்குகள் உரியவாறு பதிவுமேற்கொள்ளப்பட்டு பேணப்பட வேண்டும் என்பதையும் வேளைக்கு வரி செலுத்தப்பட வேண்டும் என்பதையும் இச்சட்டம் அவசியப்படுத்துகின்றது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான தேசிய கொள்கை செயற்றிட்டம் என்பது ஓர் அரசாங்க கொள்கை ஆவணமாகும். இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் துணைபுரிவதற்கமான தூரநோக்கு, பணிக்கூற்று, உபாயங்கள் போன்றவை அதில் உள்வாங்கப்பட்டுள்ளன. நிதி அணுகுமுறை, தொழில்நுட்பங்கள், சந்தைகள் போன்ற சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் எதிர்நோக்குகின்ற அடிப்படை சவால்களை இக்கொள்கைத் திட்டம் இனங்கண்டுள்ளதோடு அத்தகைய சவால்களைத் தீர்த்துவைப்பதற்hன பரிந்துரைகளையும் அது வழங்குகின்றது. சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் நிலைபேறான நடைமுறைகளையும் புத்தாக்கங்களையும் உள்வாங்குவதற்கும் இக்கொள்கைத்திட்டம் ஊக்குவிக்கின்றது.
2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம் சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் உட்பட அனைத்து வகையான வணிகங்களும் சட்டரீதியாகச் செயற்படுவதற்கு தமது வணிகங்களை கம்பனிகள் பதிவாளரிடம் பதிவுசெய்ய வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. இச்சட்டம் பதிவுசெய்யும் முறையையும் அதற்கான தேவைப்பாடுகளையும் குறிப்பிடுகின்றது. அவற்றுள் அவசியமான ஆவணங்களைச் சமர்ப்பித்தல், பதிவுக் கட்டணத்தைச் செலுத்துதல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வருடாந்தம் தமது பதிவுகளைப் புதுப்பிக்க வேண்டும் எனவும் இச்சட்டம் வணிகங்களைப் பணிக்கின்றது.
2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்நிதிச் சட்டம் இலங்கையின் நுண்நிதி நிறுவனங்களையும் நுண்நிதி வணிகங்களையும் ஒழுங்கமைக்கின்றது. நுண்நிதித் தொழிற்றுறை அபிவிருத்தியை முன்னேற்றுவதும் நுண்நிதி பெறுநர்களின் நலன்களைப் பாதுகாப்பதும் இச்சட்டத்தின் குறிக்கோளாகும். நுண்நிதி நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு ஒழுங்குவிதிகளாகிய வெளிப்படுத்தல் தேவைப்பாடுகள், வட்டி விகித முறைமைகள் போன்றவற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் இச்சட்டம் பணிக்கின்றது.
இலங்கையில் சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் பல்வேறு சுற்றுச்சூழற் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று வேண்டப்படுகின்றது. அதாவது, 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழற் சட்டம், 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபைச் சட்டம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தமது செயற்பாடுகளால் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளையாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பொருத்தமான அனைத்து ஒழுங்குவிதிகளுக்கும் கட்டுப்பட்டுநடக்க வேண்டும் எனவும் வேண்டப்படுகின்றன.
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம் இலங்கையில் பெறுமதிசேர் வரியை நிருவகிக்கின்ற அடிப்படைச் சட்டமாகும். வணிகங்களது வருமானம் குறிப்பிட்டதொரு தொகையை விஞ்சியதாக இருப்பின் அவற்றைப் பெறுமதிசேர் வரிக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்று இச்சட்டம் பணிக்கின்றது. சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் குறிப்பிட் தொகைக்குக் கீழ் உள்ளவைகள் தாமாக முன்வந்து பெறுமதிசேர் வரியினைச் செலுத்தத் தகுதிபெற முடியம்.
2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைசார் சொத்துகள் சட்டம் புலமைசார் சொத்துரிமைகளைச் சட்டரீதியாகப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை வழங்குகின்றது. உரிமங்கள், வணிக அடையாளங்கள், பதிப்புரிமைகள் போன்றவற்றை அது உள்ளடக்குகின்றது. இலங்கையில் சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் உரிய அதிகாரசபையில் தமது புலமைத்துவ சொத்துகளைப் பதிவு செய்வதன் மூலம் தமது புத்தாக்கங்களையும் வணிக அடையாளங்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஏதேனும் புலமைச் சொத்து மீறுதல்கள் ஏற்படின் அப்புலமைச் சொத்துக்கு உரிமையானவர்களுக்குரிய சட்டரீதியான பரிகாரங்களை வழங்கப்படுவதனை இச்சட்டம் வரையறுக்கின்றது.
மேற்குறிப்பிடப்பட்ட சட்டரீதியான விடயங்கள் இலங்கையில் சிற்றின, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் சட்டரீதியாகக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அத்தியாவசியமான விடயங்களாகும் என்பதோடு அரசாங்கத்தால் வழங்குகின்ற பல்வேறு ஊக்குவிப்புகள், நன்மைகள் போன்றவற்றையும் ஈட்டிக்கொள்ளக்கூடிய அம்சங்களுமாகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் அனைத்து வகையான சட்டதிட்டங்களையும் அறிந்து அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றோமா என்பதை சட்ட நிபுணர்களை அணுகி உறுதிப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். சட்டமுறையான தேவைப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதன் மூலமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பங்களிப்பு நல்குகின்ற திறன்வாய்ந்த செயற்றிறன்மிக்க செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.