spot_imgspot_img

சவால்களுக்கே சவால் விடுங்கள்

நீங்கள் ஒரு வணிகத்தை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்று கனவு கண்டால், நீங்கள் அமைதியாக உட்கார்ந்து இலாபம் ஈட்டலாம் என்று நம்பினால், வணிகங்கள் உங்களுக்கு ஏற்றவை அல்ல. ஒரு தொழிலை ஆரம்பிப்பது மற்றும் கையாள்வது நீங்கள் நினைப்பது போல் எளிதான காரியம் அல்ல. முதல் நாளிலிருந்து, தொழில்முயற்சியாளர் பயணத்தின் பெரும்பகுதி வெட்டுக்கள், காயங்கள் மற்றும் வலிமிகுந்த தருணங்களில் சிரிப்புடன் கடந்து செல்வது போன்றவை நிறைந்ததாக இருக்கும். இதைப் புரிந்துகொள்வது மற்றும் அதை எவ்வாறு கையாள்வது என்பதைத் தெரிந்துகொள்வது, பின்னடைவுகளைக் குறைத்து, அந்த பேரழிவுகளிலிருந்து உங்கள் வணிகத்தை வெற்றிகரமாகக் கட்டியெழுப்ப உதவும்.

அப்படியென்றால், இந்த சவாலான காரணிகள் என்ன, அவற்றை நாம் எவ்வாறு கடந்து செல்வது? ஆகியவற்றை நாம் அறிந்து கொள்வோம்.

சந்தை மாற்றங்கள் மற்றும் போட்டியாளர்களைப் புரிந்துகொள்ளல்

உங்கள் வணிகத்தின் வெளிப்புற சூழலைப் பற்றி அறியாமல் மேற்செல்வது மிகவும் ஆபத்தானது. சந்தையில் உங்கள் ஸ்தானத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் போட்டியாளர்களை விட நீங்கள் மிகவும் பின்தங்கியிருப்பதைக் காணலாம். ஒரு புதிய போட்டியாளரின் எதிர்பாராத நுழைவு விற்பனை இழப்பு, வழங்குநர்களின் இழப்பு மற்றும் ஊழியர்களின் இழப்பு போன்ற பல விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இங்குதான் சந்தை ஆராய்ச்சியை மேற்கொள்வது மிகுந்த பலனளிக்கிறது. உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் போட்டியாளர்களைச் சூழ்ந்த  மேசை ஆய்வு மற்றும் கள ஆய்வு ஆகியவை இதில் அடங்கும். இந்த ஆய்வை மேற்கொள்ளும் போது, சந்தையில் போட்டியாளரின் ஸ்தானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். பின்வருவனவற்றை கருத்தில் கொண்டு, உங்கள் வணிகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை உறுதி செய்து கொள்ளவும்:

  • அவர்களின் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் விலை மற்றும் தரம்
  • அவர்களின் சந்தைப்படுத்தல் மூலோபாயம்
  • உங்களை விடவும் மேலான ஸ்தானத்தில் திகழ்வதற்காக அவர்கள் பின்பற்றும் வேறுவிதமான உபாயங்கள்

மேலே உள்ள அம்சங்களில் உங்கள் போட்டியாளர்கள் உங்களை விட முன்னணியில் இருந்தால், நீங்கள் பல்வேறு மூலோபாயங்களைப் பயன்படுத்தி உங்கள் ஸ்தானத்தை முன்னுக்கு கொண்டு செல்ல முடியும். இதில் தள்ளுபடிகள், விசுவாச வெகுமதிகள், உங்கள் பங்குதாரர்கள் மற்றும் போட்டியாளர்கள் உட்பட வேறு எந்த நிறுவனத்துடனும் மூலோபாய ரீதியான கூட்டணிகள் மற்றும் உங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

நிதிகளைக் கையாளுதல்

இலாபகரமாக இயங்கும் வணிகங்கள் கூட அவற்றின் நிதிகள் சரியாகவும், யதார்த்தமாகவும் நிர்வகிக்கப்படாவிட்டால் சரிந்துவிடும். எந்தவொரு வணிகத்திலும் நிதியைக் கையாள்வது ஒரு முக்கியமான மற்றும் கடினமான அம்சத்தைக் கையாள்வதற்கு ஒப்பானது என்ற உண்மையை இது கொண்டு வருகிறது. இதுபோன்ற பல காரணங்களால் உங்கள் நிறுவனம் வீழ்ச்சியை எதிர்கொள்ள வேண்டிய பல நிகழ்வுகள் இருக்கும்:

  • போதுமான பணப்புழக்கத்தை பராமரிப்பதில் சிக்கல்கள்
  • வாடிக்கையாளர்களால் தாமதமாக பணம் செலுத்தப்படல்
  • உங்களுக்கு வர வேண்டிய பணத்தை மீட்டெடுப்பதற்கான சட்டச் செலவுகள்
  • நிதி செயல்திறன் கண்காணிக்கப்படாமை
  • வங்கியுடனான சிக்கல்கள் (கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படல், எதிர்பாராத வட்டி வீத மாற்றங்கள் போன்றவை)

சில உதவிக்குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன

1. சிறந்த பணப்புழக்கத்திற்கு:

  • சிறந்த கையிருப்புக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுதல்
  • உங்கள் வாடிக்கையாளர்களுடனும் – உங்கள் வழங்குநர்களுடனும் சிறந்த கடன் கொள்கைகளைப் பேணுதல்
  • வழங்குநர்களுடன் நீண்ட கால அடிப்படையிலான கொடுப்பனவு முறைகளை முயற்சி செய்து பெற்றுக்கொள்ளுதல்
  • சந்தைப்படுத்தல் உத்திகளை மேம்படுத்துதல்
  • செலவுகளைக் குறைக்க அல்லது அகற்ற உங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்ளுதல் 
  • நிபுணர்களிடம் ஆலோசனை பெறுதல்

2. தாமத கொடுப்பனவுகள் மற்றும் கூடுதல் செலவுகளை நிர்வகித்தல்:

  • பணம் செலுத்தும் தவணை முறைகளை அறிமுகப்படுத்துங்கள், அதனால் நீங்கள் ஒன்றையும் பெறாமல் போவதை விட, எதையாவது பெற்றுக்கொள்ள முடியும். மீண்டும், இது பணப்புழக்கம் சம்பந்தப்பட்டது. கடன்படுநர்கள் உங்களுக்கு பணம் செலுத்தும் போது இந்த வழக்கத்தைப் பின்பற்றினால் உங்கள் பணப்புழக்கம் பாதிப்பிற்குள்ளாகும்.  
  • நிலுவைத் தொகைகளை அறவிடுவதற்கு தள்ளுபடியைப் பரிந்துரைக்கவும். மீண்டும், பணமே இல்லாமல் போவதை விட பணத்தை ஓரளவுக்கு பெற்றுக்கொள்வது சிறந்தது
  • சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க, தாமதமாக செலுத்தும் போது தாமத கட்டணத்தை அறவிடவும்
  • சட்ட ஆலோசனையை நாடுங்கள் – கூடுதல் செலவை இது உள்ளடக்கியதால், இதையே கடைசி தெரிவாக மேற்கொள்ள வேண்டும்

3. கண்காணிக்கப்படாத நிதியியல் செயல்திறன்:

  • உங்களுடைய சொந்த இலக்கினை ஏனைய காலங்களில் நீங்கள் அடையப்பெற்ற இலக்குகளுடன் ஒப்பீடு செய்து, செயல்திறனை மதிப்பிட, இலாப மட்டங்கள் (மொத்த இலாப மட்டம் மற்றும் தேறிய இலாப மட்டம்), சொத்துகளின் மீதான வருமானம் மற்றும் பங்கு மீதான வருமானம் போன்ற இலாப விகிதங்களைப் பயன்படுத்தவும்.
  • இலாப இலக்கை நிர்ணயித்துக் கொள்ளவும்
  • இலாப மட்டங்கள் குறித்து அவதானத்துடன் இருங்கள்
  • விற்பனை வருவாயை அதிகரிக்கவும் மற்றும் செலவுகளை குறைக்கவும்

மேலே குறிப்பிட்டுள்ளபடி நிதியைக் கையாள, உங்களுக்கு முதலில் பணம் தேவை! பெரும்பாலான தொழில் முயற்சியாளர்களிடம் அவர்கள் ஆரம்பத்தில் தங்கள் வணிகங்களில் முதலீடு செய்வதற்கு பெரிய அளவிலான மூலதனம் இல்லை. அதிர்ஷ்டவசமாக, இன்றைய உலகில், வணிகங்கள் செழிக்க பல முதலீட்டு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் சில இங்கே தரப்பட்டுள்ளன.

கடன் நிதி: கடன் வாங்கிய பணத்தை வட்டியுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தும் முறை இது. வங்கிக் கடன்கள் கடன் நிதியின் கீழ் இடம்பெறுகின்றன.

பங்குக் கடன்: நீங்களோ அல்லது வேறு சிலரோ உங்கள் வணிகத்தில் முதலீடு செய்கிறீர்கள். இது குடும்பம் அல்லது நண்பர்கள், ஆரம்ப வர்த்தக முயற்சிகளின் மீதான முதலீட்டாளர்கள், வர்த்தக முயற்சிகளின் மீதூன முதலீட்டாளர்கள் அல்லது உங்கள் பங்கினைப் பெற்றுக்கொண்டு, பொது மக்கள் நிறுவனத்தின் பங்கிற்கு ஈடாக பணம் வழங்கும் வகையில் பொதுப் பங்கு வழங்கல் (பெரும்பாலான சந்தர்ப்பங்களில் “பொதுப் பங்கு வழங்கல்” நடவடிக்கையானது வணிகம் தனது திறனை நிரூபிக்கும் போது மற்றும் வளரும் போதே இடம்பெறுகின்றன) ஆகியன அமைந்துள்ளன.

கொத்தணி முதலீடு: இது ஒப்பீட்டளவில் புதிய வழிமுறையாகும், இது ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கான பணம் அல்லது வளங்கள் அல்லது அறிவை பல நபர்கள் ஒன்றுசேர்ந்து மேற்கொள்ள இடமளிக்கிறது. சில நேரங்களில் இது ஒரு வெளிப்படையான நன்கொடையாகும், ஆனால் வணிக சிந்தனைகளுக்கு இது பெரும்பாலும் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு அல்லது சேவையை முன்கூட்டியே அணுகுவதற்கு ஈடாகும். கொத்தணிக் கடன் பற்றி here மூலமாக மேலும் அறிந்து கொள்ளலாம்.

மனித வளங்களை நிர்வகித்தல்

மனித வளத் துறையானது வாடிக்கையாளர் சேவையை சிறப்பாகச் செய்வதற்கும் நீண்ட காலத்திற்கு வணிகத்தை மேம்படுத்துவதற்கும் பொறுப்பாகும். உயர் செயல்திறன் கொண்ட ஊழியர்கள் நிறுவனத்தின் செயல்திறனையும் ஆற்றலையும் உயர்த்துகிறார்கள். எனவே, ஒரு வலுவான பணியாளர்களை வளர்ப்பது வணிகத்திற்குள் ஒரு முக்கியமான படியாக கருதப்படலாம். மனித வளங்களைக் கையாளும் போது பின்வரும் காரணிகள் மீது கவனம் செலுத்துங்கள்:

  • உங்கள் வணிகத்திற்குத் தேவையான திறன்களைக் கொண்ட பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது
  • தெளிவான பணிப் பொறுப்புக்களை முன்வைத்தல் – முகாமைத்துவத்தைப் போலவே தாங்கள் என்ன பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதை ஊழியர்கள் அறிந்துகொள்வதுடன், மேலும் அவர்களின் செயல்திறன் பெறுபேற்று மீளாய்வுகள் தெளிவாகவும் நேரடியானதாகவும் இருக்கும்.
  • உங்கள் ஊழியர்களுடன் வணிகத் திட்டத்தைப் பகிர்தல்
  • தேவைகளுக்கு ஏற்ப பொறுப்புகளை பகிர்ந்தளித்தல்  
  • பணியாளரின் நேரம் மற்றும் நிபுணத்துவத்திற்கு ஏற்றவாறு ஊதியம் வழங்குதல்  
  • பணியாளர் செயல்திறனை மதிப்பிடுதல்

இந்த ஊழியர்களுக்கு சரியான பணிச்சூழலை உருவாக்குவது இதற்கு ஈடாக முக்கியமானது. உங்கள் வணிகத்தை நம்புவதற்கும், நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் பணியாளர்களை ஊக்குவிக்க மனித வள முகாமைத்துவ மூலோபாயங்களைப் பயன்படுத்தலாம். பின்வருவதைப் போன்ற சிறிய முயற்சிகளிலிருந்து இதனை ஆரம்பிக்கலாம்:

  • ஊழியர்களை ஊக்கப்படுத்துதல்
  • அடையக்கூடிய, யதார்த்தமான இலக்குகளை நிர்ணயித்தல்
  • ஊழியர்களுடனான சந்திப்புக்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தினசரி பணிகளிலிருந்து அவ்வப்போது சிறு இடைவேளை நிகழ்வுகளைத் திட்டமிடுதல்
  • அவர்களின் தனிப்பட்ட சாதனை இலக்குகளைக் கொண்டாடுதல்
  • ஊழியர்களின் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளைக் கருத்தில் கொள்ளுதல்  
  • தொழில்முறை சாதனைகளுக்கு அவர்களுக்கு வெகுமதி அளித்தல்  
  • கற்றுக் கொள்ளவும் வளரவும் அவர்களுக்கு இடமளித்தல்

வணிகத்தைப் பாதுகாத்தல்

எதுவுமே நிச்சயமற்றது, உங்கள் வியாபாரமும் நிச்சயமற்றது. ஒரு வணிகத்தின் இலாபத்தை இழப்பதைத் தவிர, உங்கள் வணிகத்தின் பாகங்கள் ஆபத்தில் இருக்கும் நிகழ்வுகள் உள்ளன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வணிகத்தைப் பாதுகாப்பது முக்கியம்.

ஆபத்து என்பது ஒரு சூழ்நிலை, இதன் விளைவாக குறிக்கோள்கள் சீர்குலைந்துவிடும். இந்த உள்ளக அல்லது வெளிப்புற அபாயங்கள் செயல்பாட்டு அபாயங்கள், மூலோபாய அபாயங்கள், நிதியியல் அபாயங்கள், ஆபத்து அடிப்படையிலான அபாயங்கள் போன்றவையாக இருக்கலாம்.

சுருக்கமாக, உங்கள் வணிகத்தை பாதிக்கக்கூடிய அபாயங்களின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளன:

  • இயற்கை பேரழிவுகள்
  • தொற்றுநோய்களின் பரவல் (கொவிட்-19 போன்றவை)
  • நாட்டின் மற்ற பகுதிகளில் ஏற்படும் சீர்குலைவுகள் வணிகத்தை பாதிக்கலாம்
  • உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
  • திருட்டு அல்லது மோசடி
  • பயங்கரவாதம்
  • இணைய பாதுகாப்பு மற்றும் மோசடி
  • வழங்குநர் சங்கிலிகளில் இடைவெளிகள்
  • மின்சாரம்/தண்ணீர்/எரிபொருள் அல்லது மூலப்பொருள் விநியோகத்தில் துண்டிப்பு
  • இயந்திரங்கள் செயலிழத்தல்
  • பணியாளர்களுக்கான ஆபத்து

தொடர்புடைய அபாயங்களை நீங்கள் எவ்வாறு சமாளிக்க முடியும் என்பதற்கான சில குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன:

  • சாத்தியமான அளவுக்கு ஆரம்ப நிலையிலேயே அபாயங்களைக் கண்டறிதல்
  • இடர் மதிப்பீடு மற்றும் மீட்புத் திட்டமொன்றைக் கொண்டிருத்தல்
  • வளாகங்கள், இயந்திரங்கள், நிதி மற்றும் மனித வளங்களுக்கான காப்புறுதித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்  
  • வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்தல்
  • விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் தொழில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அளவுகோல்களைப் பின்பற்றுதல்
  • இணைய பாதுகாப்பு
  • கணினி அடிப்படையிலான கட்டமைப்புகளில் காப்புப் பிரதி கட்டமைப்புகளைப் பயன்படுத்துதல்

Get in Touch

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

spot_imgspot_img

Related Articles

spot_img

Get in Touch

Latest Posts

X