இன்று துரிதமாக வளர்ந்து வருகின்ற உச்ச அளவில் போட்டிமிகு தன்மை கொண்டதாக விளங்கும் வணிகம் என்னும் தளத்தில் நிறுவனங்களின் வெற்றிக்கும் நீண்டு நிலைக்கும் தன்மைக்கும் ஆக்கத் திறனும் புத்தாக்கமும் இன்றியமையாததாக மாறிவிட்டன. ஆக்கத்திறனை வளர்த்தெடுப்பதற்கும் புத்தாக்கங்களை ஏற்றுக்கொள்வதற்கும் வணிக நிறுவனங்கள் தவறியுள்ளமை அவ்வணிக நிறுவனங்கள் தமது போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்க முடியாத அபாயத்தையும் வளர்ச்சியை நோக்கிய வாய்ப்புகளையும் உள்வாங்கும் தன்மைக்கான வாய்ப்புகளையும் இழக்கின்ற அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளன. புத்தம்புதிய எண்ணங்கள் பிறக்கின்ற நீரூற்றாக ஆக்கத் திறன் காணப்படுகின்ற அதேவேளை அவ்வெண்ணங்களை உற்பத்திகளாகவும் சேவைகளாகவும் அல்லது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதிமிக்க விடயங்களை ஏற்படுத்திக்கொடுத்து நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாகக் காணப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு இட்டுச்செல்கின்ற நிலைமாற்றுக் காரணியாக விளங்குவது புத்தாக்கமாகும். முன்னேற்றத்துக்கும் பிரித்தறிதலுக்கும், நிலைபேறான வெற்றிக்கும் ஒன்றிணைந்து செயலாற்றுகின்ற வினையூக்கிகளாக ஆக்கத்திறனும் புத்தாக்கமும் விளங்குகின்றன. வணிக நிறுவனங்களில் ஆக்கத்திறனையும் புத்தாக்கங்களையும் முகாமை செய்வதன் முக்கிய வகிபங்கைக் கண்டறிவது இவ்வாக்கத்தின் நோக்கமாகும். இன்றைய வணிக தளத்தில் ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து நாம் ஆழமாக ஆராய்வதோடு இவ்விடயங்களை வினைத்திறனான முறையில் முகாமைசெய்வதன் நன்மைகளையும் ஆராய்ந்து ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கம் ஆகிய விடயங்களில் நிறுவனங்கள் எதிர்கொள்கின்ற பொதுவான சவால்களையும் ஆராயலாம்.
ஆக்கத்திறனும் புத்தாக்கமும்
புதினமான பெறுமதிமிக்க கருத்துருவாக்கங்களையும் தீர்வுகளையும் உந்துகின்ற திறனாக ஆக்கத்திறன் காணப்படுகின்றது. பொதுவாக சிந்திப்பதிலிருந்து விடுபட்டு வித்தியாசமாக சிந்தித்தல், ஊகங்களை எதிர்கொள்ளுதல், தொடர்பற்ற விடயங்களாகக் காணப்படுகின்ற கருத்துகள் மத்தியில் தொடர்பை உண்டாக்குதல் போன்ற விடயங்களை அது கொண்டுள்ளது. அதீத கவனம் எடுக்க வேண்டிய அம்சங்களான மூலத்தன்மை, நெகிழ்வுத் தன்மை, விருப்பத்தன்மை ஆகிய அம்சங்களைக் கொண்டு ஆக்கபூர்வமான சிந்தனை வகைப்படுத்தப்படுகின்றது. கூட்டுத் தீர்மானம் மேற்கொள்ளல், பரந்துபட்டு சிந்தித்தல், கருத்துகள் சுயமாகப் பிறப்பதை ஊக்குவித்தல் போன்ற நடைமுறைகளினூடாக ஆக்கபூர்வ சிந்தனை வளர்க்கப்பட்டு விருத்தியடைகின்றது.
மறுபுறம், புத்தாக்கம் என்பது ஆக்கத்திறன் மிக்க கருத்துகளை செயலுருப்படும் வகையிலான விளையம்சங்களாக நிலைமாற்றம் செய்வதாகும். புதிய அல்லது மேம்பட்ட வகையிலான உற்பத்திகள், சேவைகள், நடைமுறைகள், அல்லது வணிக மாதிரிகள் போன்ற அம்சங்களை நடைமுறைப்படுத்துவதுடன் அது தொடர்புபடுகின்றது. ஆக்கத்திறன் மிக்க கருத்துகளை செயற்படுத்தி அவற்றை நடைமுறையில் பிரயோசனமான வகையில் பிரயோகிப்பதைப் புத்தாக்கம் வேண்டிநிற்கின்றது. நிறுவனத்தினுள் அல்லது சந்தையில் கருத்துருவாக்கம் முதற்கொண்டு அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது வரையிலான ஒட்டுமொத்தப் பயணத்தையும் புத்தாக்கத்தை அங்கீகரிப்பதையும் இது உள்ளடக்குகின்றது.
ஆக்கத்திறனும் புத்தாக்கமும் ஒன்றுக்கொன்று நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளன. புத்தாக்கம் மிக்க எண்ணங்கள் பிறக்கின்ற நீரூற்றாக ஆக்கத் திறன் காணப்படுகின்றது. ஆக்கத்திறன் இல்லையேல் புத்தாக்கத்துக்கான மூலப்பொருள் கிடையாது. ஆக்கத்திறனின் விளைபொருள்களே புத்தாக்கமாகும். ஏனெனில் புத்தாக்கமானது ஆக்கத்திறன்மிக்க கருத்துகளை விதைப்பதோடு விளைபொருள்களை அதன் விளைவாகக் கொண்டு வருகின்றது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் வகிபங்கு
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளைப் பொறுத்தவரையில் ஆக்கத்திறனும் புத்தாக்கமும் வெற்றியையும் வளர்ச்சியையும் ஈட்டிக்கொடுக்கின்ற முக்கிய பங்கை ஆற்றுகின்றன. சந்தடி மிக்க சந்தைத் தளத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் தமது போட்டியாளர்களிலிருந்து வேறுபடுகின்ற அம்சங்களைக் கொண்டிருத்தல் வேண்டும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தனித்துவமான உற்பத்திகளையும், சேவைகளையும், வணிக மாதிரிகளையும் மற்றவர்களிலிருந்து வேறுபட்ட வகையில் விருத்தி செய்துகொள்வதற்கு ஆக்கத்திறனும் புத்தாக்கமும் துணைபுரிகின்றன. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் புதிய புதிய பெறுமதிவாய்ந்த விடயங்களை வழங்குவதன் மூலமாக வாடிக்கையாளர்களைக் கவரவும் போட்டித் தன்மைய ஈட்டிக்கொள்ளவும், சந்தையில் நிலவி வருகின்ற பழைமையை இல்லாதொழிக்கவும் ஏதுவாக இருக்கும்.
ஆக்கத் திறனும் புத்தாக்கமும் உற்பத்திசார் விருத்தி என்ற விடயத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் அவற்றை உள்ளக நடைமுறைகளிலும் நடவடிக்கைகளிலும் பிரயோகிக்க முடியும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் பணி வழங்குவதை மேற்கொள்வதற்கும், வினைத்திறனை முன்னேற்றுவதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும் புத்தாக்கம் மிக்க வழிமுறைகளை நாடுவது ஒட்டுமொத்த போட்டித் தன்மையையும் மேம்படுத்துகின்றது. இவற்றுள் புதிய தொழிநுட்பங்களை உள்வாங்குதல், விநியோக முகாமைச் சங்கிலியை முன்னேற்றுதல், புத்தாக்கம் மிக்க சந்தைப்படுத்தல் உபாயங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற அம்சங்கள் அடங்குகின்றன.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தமது சிறிய அளவு காரணமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட திறன் காரணமாகவும் வள நெருக்கடியும் பிரத்தியோக சவால்களும் காணப்படுகின்றன. இத்தகை சவால்களுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளைக் கண்டறிவதற்கு ஆக்கத்திறனும் புத்தாக்கமும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை வலுவூட்டுகின்றன. நிதி வளங்களுக்கான மாற்று வழிகளைக் கண்டறிவதாக இருந்தாலும், செலவுகளைக் குறைத்து கருமங்களை மேற்கொள்வதற்கான உபாயங்களை விருத்தி செய்வதாக இருந்தாலும், அல்லது ஒழுங்குறுத்தல் மாற்றங்களை உள்வாங்குவதாக இருந்தாலும், ஆக்கத்திறனையும் புத்தாக்கத்தையும் ஏற்று நடக்கின்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் அத்தகைய தடைகளைத் தாண்டி வினைத்திறன் மிக்க தீர்வுகளை எட்டுவதற்கு அவை சிறந்த பொறிமுறையைக் கொண்டிருக்கும்.
இன்று சந்தைகள் மாற்றமுறுபவையாக விளங்குவதுடன் வாடிக்கையாளர்களும் காலத்துக்குக் காலம் மாற்றமுறுகின்ற தெரிவுகளையே விரும்புகின்றனர். ஆக்கத்திறனையும் புத்தாக்கத்தையும் கொண்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் இத்தகைய மாற்றங்கள் அதற்கேற்ற வகையில் முற்கூட்டியே தீர்க்கப்பட்டு விடுகின்றன. ஏனெனில் அவைகள் மாற்றமுற்று வருகின்ற போக்குகளை இனங்காணக்கூடியவையாகவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் காணப்படுகின்ற கிராக்கியை எதிர்பார்ப்பவையாகவும், அதற்கேற்ற வகையில் தாம் வழங்குபவற்றைத் தகவமைத்துக் கொள்பவையாகவும் அவை செயற்படக்கூடியவையாக இருக்கும்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளுக்கான வழிகளை ஆக்கத்திறனும் புத்தாக்கமும் திறந்துவிடுகின்றன. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் புதிய புதிய கருத்துருவாக்கங்களைத் தொடர்ச்சியாகக் கண்டுபிடிப்பதன் மூலமாகவும், வித்தியாசமான அணுகுமுறைகளைப் பரிசோதித்துப் பார்ப்பதன் மூலமாகவும், வாய்ப்புகளைக் கைப்பற்றிக்கொள்வதன் மூலமாகவும், புதிய புதிய சந்தைகளை விரிவாக்கிக் கொள்வதற்கும் புதிய புதிய உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்துவதற்கும், அல்லது மூலோபாயம் மிக்க பங்குடைமைகளை விருத்திசெய்துகொள்வதற்கும் வசதியாக இருக்கும். இவற்றின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் தமது நடவடிக்கைகளை அளவீடு செய்து பார்க்கவும், தமது சந்தைப்படுத்தல் மக்களைச் சென்றடைவதை அதிகரித்துக்கொள்ளவும், நிலைபேறான அபிவிருத்திக்குத் தீனிபோடவும் ஏதுவாக இருக்கும். மொத்தத்தில், போட்டித் தன்மைமிக்க வணிகச் சூழல் ஒன்றில் வெற்றியீட்டிக்கொள்வதற்கும் மீண்டெழுவதற்குமான வழிகளை ஆக்கத்திறனும் புத்தாக்கமும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்கின்றன. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் இவ்வம்சங்களை அங்கீகரித்து திறன்பட முகாமை செய்வதன் மூலம் தமக்குரிய வாய்ப்பு வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் நிலைபேறான வளர்ச்சியினை ஈட்டிக்கொள்வதற்கும், தமது தொழிற்றுறைகளில் மாற்றத்துக்கேற்ப செயற்படுபவர்களாகவும் தம்மை நிலைநாட்டிக்கொள்வதற்கும் இயலுமாக இருக்கும்.
தற்கால உலகின் சான்றுகள்
மகத்தான வெற்றியை ஈட்டிக்கொள்வதற்கு ஆக்கத்திறனையும் புத்தாக்கத்தையும் வெற்றிகரமாக பயன்படுத்திக்கொண்ட நிறுவனம் ஒன்றுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது அப்பிள் நிறுவனமாகும். தாம் வழங்குகின்ற உற்பத்தியைத் தொடர்ச்சியாக மாற்றத்துக்குட்படுத்தி மேம்பட்ட வகையில் வழங்குகின்ற வரலாற்றைக் கொண்டதாக அப்பிள் நிறுவனம் விளங்குகின்றது. ஐஃபோன் என்றும் ஐபேட் என்றும் மெக்புக் என்றும் பற்பல வகையிலான புத்தம்புதிய அம்சங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அவ்வுற்பத்திகள் அவர்களின் தொழிற்றுறைகளை மறுமலர்ச்சியடைந்ததாக மாற்றியுள்ளன. வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து புத்தாக்கம் மிக்க அம்சங்களையும் செயற்பாடுகளையும் அறிமுகம் செய்கின்றமை அப்பிள் நிறுவனத்தின் வெற்றியின் அடிப்படை உந்துசக்தியாக இருந்து வருகின்றது. அப்பிள் உற்பத்திகள் அவற்றின் நேர்த்தியான வடிவப்பின் காரணமாகவும் பாவனையாளருக்கேற்ற வகையிலான உணர்வுகளுடன் ஒன்றித்துள்ளமை காரணமாகவும் பெயர்போன உற்பத்திகளாக அறியப்படுகின்றன. கட்புலனாகும் வகையிலான அழகியல் அம்சங்களையும் எளிமையான வடிவத்தையும் கொண்ட தயாரிப்புகளையும் பாவனiயாளருக்கு உகந்த முறையிலான வடிவத்தையுமே அவை முதன்மைப்படுத்துகின்றன. வடிவமைப்பதிலும் பாவனையாளர் அனுபவத்திலும் கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடு அப்பிளை வேறுபடுத்திக் காட்டுகின்ற காரணியாக இருந்து வருகின்றது. அது அவர்களைப் போட்டியாளர்களிலிருந்து வேறுபடுத்த வள்ளன்மை மிக்க வாடிக்கையாளர்களைக் கவருவதற்குரிய தளத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
ஆக்கத்திறன் மூலமாகவும் புத்தாக்கம் மூலமாகவும் தீர்க்கப்பட வேண்டிய சவால்களும் எதிர்கொள்ள வேண்டிய உபாயங்களும்
ஆக்கத்திறனும் புத்தாக்கமும் வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கின்ற அதேவேளை அவைகளும் சிக்கல்கள் வாய்ந்தவையாக இல்லாமலில்லை. பல நிறுவனங்கள் துணிந்து பணிகளைப் பாரமெடுக்காத நடைமுறையைக் கொண்டுள்ளன. அவை ஆக்கத்திறனும் புத்தாக்கமும் வளர்க்கப்படுவதைச் சவாலாக்குகின்றன. தோல்வியை எண்ணிப் பயம்கொள்வது புதிய புதிய கருத்துகள் தோன்றுவதிலிருந்து தடுப்பதுடன் பணியாளர்கள் துணிந்து பணிகளைப் பாரமெடுப்பதை விட்டும் அவர்களை ஊக்கம் குன்றச் செய்கின்றது. கற்றுக்கொள்வதற்கும் முன்னேறுவதற்குமான ஒரு வாய்ப்பாகத் தோல்விகளைக் காண்கின்ற பாதுகாப்புமிக்க, உறுதுணை வழங்கக்கூடிய சூழலை உருவாக்குவதே இத்தகைய சவால்களைத் தீர்ப்பதற்கு அவசியப்படும் வழியாகும்.
பணியாளர்கள் ஒத்துவராதிருப்பது மற்றுமொரு சவாலாகும். இது தற்சமயம் உள்ள விடயங்களை வைத்துக்கொண்டு சௌகரியமான முறையில் செயற்படுகின்ற மற்றும் தமக்குத் தெரியாத விடயங்கள் பற்றிய அச்சம் உள்ள பணியாளர்களினாலேயே ஏற்படுகின்றது. இதனைத் தீர்த்துக்கொள்வதற்கு வினைத்திறன் மிக்க தொடர்பாடல், பிரதான பங்குதாரர்களது தலையீடு, புத்தாக்கத்தின் மூலம் நிறுவனத்துக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் வாய்ப்புகளையும் வலியுறுத்துதல் ஆகியவை அவசியமாகும்.
நெகிழ்வற்ற கட்டமைப்பையும் நேரொழுங்கு கொண்ட கட்டமைப்பையும் கொண்ட நிறுவனங்களில் பணியிடத்திலும் பணிக்குழுமத்தார் மத்தியிலும் கருத்தாக்கங்களும் ஒன்றிப்பும் தோற்றம்பெறுவது தடைப்படுகின்றது. குவிமையப்பட்ட செயன்முறைகளும் தொடர்பாடல் பற்றாக்குறையும் புத்தாக்கம் மிக்க கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதைத் தடைப்படுத்துகின்றன. இந்தச் சவாலை முறியடிப்பதற்கு செயன்முறைகளைப் பிரித்து வழங்குவதும் ஆளுக்கு ஆள் தொடர்புறும் தன்மையை வளர்ப்பதும் கருத்துகள் தோற்றம் பெறக்கூடியதும் நடைமுறைப்படுத்தத்தக்கதுமான திறன்மிகு நடைமுறைகளைத் தாபிப்பதும் அவசியமாகும்.
ஆக்கத்திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை முகாமை செய்வதற்கு நிதி முதலீடு, நேரம், திறமை ஆகிய அர்ப்பணிப்புள்ள வளங்கள் அவசியமாகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் பரிசோதனை செய்வதற்கும் புதிய கருத்தாக்கங்களைக் கண்டறிவதற்கும் புத்தாக்கம் மிக்க தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறுவனங்கள் கொண்டுள்ள திறனைத் தடைப்படுத்துகின்றன. இச்சவாலை முறியடிப்பதற்கு புத்தாக்கம் சார்ந்த முன்நகர்வுகளுக்கு உறுதுணைபுரிவதற்குப் போதியளவிலான வளங்களை முதன்மைப்படுத்தி அவற்றை ஒதுக்கீடு செய்வதே தீர்வாகும்.
ஆக்கத்திறனையும் புத்தாக்கத்தையும் முன்நகர்த்திச் செல்வதிலும் அதற்கு உறுதுணைபுரிவதிலும் தலைமைத்துவம் மிக முக்கிய பங்காற்றுகின்றது. புத்தாக்கம் மிக்க முனைவுகளுக்குத் தலைவர்கள் முதன்மையளித்து உறுதுணைபுரியவில்லையாயின் பணியாளர்கள் தத்தமது ஆக்கத்திறன்மிகு கருத்தாக்கங்களை முன்வைப்பதற்கான வலுவூட்டலும் ஊக்கமும் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடும். இத்தகைய சவாலைத் தீர்த்துக்கொள்வதற்கு நிறுவனம் முழுக்க புத்தாக்கங்களை ஈட்டித்தரக்கூடிய, அதற்கு ஊக்கமளிக்கக்கூடிய தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புதல் வேண்டும்.
முடிவுகள் உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்றும் இலக்குகள் குறுகிய காலத்துக்குள் அடையப்பட வேண்டும் எனவும் நிறுவனங்களில் நிர்ப்பந்திக்கப்படுகின்றது. இது நீண்ட காலத்துக்கு நீடித்து நிலைக்கக்கூடிய புத்தாக்கங்களைத் தடைப்படுத்துவதாகக் காணப்படுகின்றது. இச்சவாலை முறியடிப்பதற்கு நுட்பமான முறையில் புத்தாக்கத்தில் கவனம் செலுத்தி குறுகியகாலக் கோரிக்கைகளை சம அளவில் முன்னெடுத்தல், சாத்தியமான எதிர்பார்க்கைகளை உருவாக்குதல், நிறுவனத்தின் தூரநோக்குக்கும் இலக்குகளுக்கும் ஏற்ப புத்தாக்க முயற்சிகளை ஒழுங்கமைத்தல் ஆகியன அவசியமாகின்றன. இத்தகயை சவால்களைக் கருத்திற்கொண்டு நிறுவனங்கள் முற்கூட்டியே அவற்றைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதோடு ஆக்கத்திறனையும் புத்தாக்கத்தையும் வினைத்திறனான வகையில் முகாமை செய்வதற்கான தமது திறனை வளர்த்துக்கொள்ளுதலும் வேண்டும்.