இலங்கையர்களாக நாம் எதிர்கொள்ளும் இடர்பாடு மிக்க இக்காலகட்டமானது அனைவர் மத்தியிலும் ஒரு நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது. இது வாடிக்கையாளர் மத்தியில் பொருட்களை கொள்வனவு செய்யும் சக்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொருளாதார பாதிப்பானது வாடிக்கையாளர் தாங்கள் செலவுகளை சரியான முறையில் திட்டமிட்டு செய்வதற்கான பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் செலவு செய்யும்போது செலவீனங்கள் அவர்கள் சக்தியை மீறிச் செல்லும்போது பணத்தை எதற்காக செலவிடுகின்றோம் என்பதில் மிகவும் உன்னிப்பாக இருக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் முன்னர் செலவழித்த ஆடம்பர செலவுகளானது தற்போதைய சூழ்நிலையில் வீண் செலவாக தோன்றக்கூடும். இதுபோன்ற செலவுகளை தவிர்த்து சிக்கன சேமிப்புகளை மேற்கொள்வதன் மூலம் இது வாடிக்கையாளர்களுக்கு பொருளாதார முதலீடாக அமையக்கூடும்.
இத்தகைய நெருக்கடியான சூழலுக்கமைய நம்பிக்கை மிக்க வாடிக்கையாளர் சேவைகளை உருவாக்கும்போது> அவற்றை எவ்வாறு நிலைநிறுத்திக் கொள்வது என்பதை உறுதி செய்வதற்கான நடைமுறைகள் கொண்ட வழிமுறைகள் சிலவற்றை நாம் இங்கே பார்ப்போம்.
வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய புதிய தயாரிப்புகள் மற்றும் அவற்றிற்கான ஆலோசனைகளை வழங்குதல்
பொருளாதார நெருக்கடி கொண்ட இக்காலகட்டத்தில் வர்த்தகர்கள் தாங்கள் வழங்கும் முதல்நிலை தயாரிப்புகளுக்கு தொடர்புடைய ஏனைய தயாரிப்புகளை அறிந்து அவற்றை உற்பத்தி செய்வதில் அக்கறை செலுத்துகின்றனர். இவ்வாறான வியாபார நுட்பங்களை அறிந்து செயல்படுதல், சேவைகளை வழங்குதல் இக்கால கட்டத்திற்கு மிகவும் உசிதமானதாகும். எனவே வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் நோக்கம் அறிந்து அவர்களின் தற்போதைய தேவைகளுக்கமைய புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான சிறந்த காலமே இதுவாகும்.
பாரிய வர்த்தகர்கள் ஒரு பொருளை சந்தைப்படுத்தும் முன்னர் பல்வேறு தரவுகள் மூலம் வாடிக்கையாளர் தரத்தை அறிந்து> சந்தை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு> ஆதாரங்களை சேகரித்து அதன் பின்னரே தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துகின்றனர். ஆகையால் உங்கள் இணையதளம்> சமூக ஊடகங்கள் மூலம் உங்களைப் பின்தொடரும் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள். இன்ஸ்டாகிராம் வாசகங்கள் மற்றும் வாக்கெடுப்பு ஸ்டிக்கர்கள் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை ஆராய்ச்சி செய்யுங்கள். கொள்ளலாம். அத்துடன் இன்ஸ்டாகிராம் வாசகங்கள், கருத்து ஸ்டிக்கர்கள் மூலமான கேள்விகளை போன்ற நுட்பமான முறையை கையாண்டு அவர்களின் விருப்புகளை ஆராய்ந்து தெரிந்துகொள்ளலாம். தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்வதால் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு டிஜிட்டல் முறைகளை பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீள பெற்றுக் கொள்ள அவர்களுக்காக சலுகைகள்> ஊக்கத் தொகைகள் மற்றும் சந்தாக்களை வழங்குதல்
இவ்வாறான பழைமையான நடைமுறைகள் இன்னும் சில்லறை வியாபார நடைமுறையில் உள்ளது. இவற்றை உங்கள் வியாபாரத்தில் பயன்படுத்தி சலுகைகள்> ஊக்கத் திட்டங்கள் வழங்குவதன் மூலம் உங்கள் வர்த்தகத்தை துரிதப்படுத்தலாம். அத்துடன் சதவீத தள்ளுபடி அல்லது போனஸ் புள்ளி போன்றவற்றை வழங்குவதன் மூலமும் இலவச ஷிப்பிங் இலவச சாம்பல்கள் வழங்குவதன் மூலமும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தலாம்.
இன்றைய வர்த்தகத்தில் ஈ-கொமர்;ஸில் வாடிக்கையாளர் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் வாடிக்கையார்கள் அதனை பயன்படுத்துகின்றனர். இதற்காக பல முன்னணி நிறுவனங்கள் தன்னியக்கமாக பதிவு செய்தும் திட்டத்தை தொடங்கியுள்ளன. இவ்வாறான வர்த்தகத்தில் ‘ பதிவு செய்து பணத்தை சேமிக்கவும்.’ உங்கள் தயாரிப்பு மீண்டும் வாங்கப்படும்’ போன்ற வாசகங்கள் வாடிக்கையாளரின் கவனத்தை ஈர்ப்பதுடன் அவர்களின் நேரம் மற்றும் மீண்டும் ஆர்டர் செய்யும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாகிறது. ஈ- கொமர்ஷியல் வர்த்தகத்தில் குறித்த நிறுவனமானது அதன் உறுப்பினர்களுக்கு மீள் ஆர்டர் செய்யும்போது வழங்கப்படும் விசேட தள்ளுபடிகள் நீண்ட காலத்திற்கு பணத்தை சேமிக்க உதவுகின்றது.
நீங்கள் வாடிக்கையாளர் மீது கொண்டுள்ள அக்கறையை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்
நெருக்கடி மிக்க இக்காலகட்டமானது உங்கள் வாடிக்கையாளர்களை போன்று உங்கள் நிறுவனத்திற்கும் சவாலான காலகட்டமே என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளுங்கள். சமூக ஊடகங்கள்> கூட்டுறவு வலைப்பதிவுகள் போன்றவற்றில் திறந்த கருத்துக்கள் கொண்ட மகிழ்ச்சியான பயனளிக்கும் உள்ளடக்கங்களை உங்கள் வாடிக்கையாளர்களுடன் பகிர்வதன் மூலம் அவர்களுடனான ஒரு நெருக்கமான உறவினை வளர்த்துக் கொள்ள முடியும். இத்தகைய உள்ளடக்கங்கள் உங்களைப் போன்று மேலும் பல வியாபாரங்கள் உருவாவதற்கு காரணமாக அமையலாம். உங்கள் பரிவான குறுந்தகவல்கள், நினைவூட்டல்கள், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பான வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவுவதோடு உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
அத்துடன் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற செய்திகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு தற்கால சூழலுக்கேற்ற வழிமுறைகளை இனங்காண உதவலாம். உங்கள் சேவையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எவ்வாறு உங்கள் வர்த்தகத்தில் ஒத்துழைப்பை வழங்கி அதன் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்கிறார்கள் என்பதை பற்றி உண்மை சம்பவங்கள்> கதைகள் மற்றும் வாடிக்கையாளர்கள் உடனான நேர்காணல்கள்> சமூக வலைத்தள போஸ்ட்டுகள்> கூட்டுறவு வலைத்தள பக்கங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் இத்தகைய தொடர்பாடல் சேவைகளானது உங்கள் வாடிக்கையாளரின் கவனத்தை பெற்றுக்கொள்வதற்கு பயன்படுத்தப்படும் மிக சக்திவாய்ந்த ஊடகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இத்தகைய ஊடகங்கள் பொருட்களுக்கு தனித்தன்மையான அடையாளங்களை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முடிவுகளை எடுக்க தூண்டுகின்றன.
பொருளாதார வீழ்ச்சி மிக்க காலகட்டமே ஒரு நேர்மையான வியாபாரத்தில் அதன் நம்பிக்கை மிக்க வாடிக்கையாளர்களை இனங்கண்டு கொள்ள உதவுகின்றது. அத்தகைய நம்பிக்கை மிக்க வாடிக்கையாளர்களை சம்பாதிப்பதற்கு நாம் செய்யும் செலவு மிக சிறியதாகும். வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு நம்பிக்கையுள்ள நிறுவனங்களில் பொருட்களையும் சேவைகளையும் அதிகமாக பெற்றுக் கொள்கின்றனர். அத்துடன் அவர்கள் ஏனையவர்களுக்கும் பரிந்துரை செய்கின்றனர். இத்தகைய வலையமைப்புகள் வியாபாரத்தில் அதன் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு அதன் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றது.
பொருளாதாரத்திட்டமிடல் பற்றிய மேலதிக தகவல்களை திரிய இணையத்தளத்தில் பார்க்கவும்.